Skip to main content

டெல்லி பாஜக அலுவலகத்தில் தீ விபத்து!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
Fire in Delhi BJP office

டெல்லி மாநில பாஜக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

டெல்லி பண்டிட் பந்த் மார்க்கில் உள்ள டெல்லி மாநில பாஜக அலுவலகத்தில் இன்று (16.05.2024) தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் தீ விபத்தையடுத்து அலுவலகத்தில் இருந்தவர்கள் உடனடியாக அப்பகுதியில் இருந்து வெளியேறினர்.  தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக டெல்லியில் மாநில காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு எதிரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தின் 4வது மாடியில் நேற்று முன்தினம் (14.05.2024) பிற்பகல் 3 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட அங்கிருந்த ஊழியர்கள், கட்டடத்தை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து, இந்தத் தீ விபத்து சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அங்கு ஏற்பட்டிருந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்