ராங் கால் : தி.மு.க.வை அதிர வைத்த திருமா!

dd

"ஹலோ தலைவரே, உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிச்சாகணும்னு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால, டிசம்பர் 2-ந் தேதி அறிவிப்பாணை வெளியிடப்படணும்னு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவிச்சிருக்கே.''’’

""ஆமாம்பா, தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் எடப்பாடி அரசு, இப்பவும்கூட அதைத் தள்ளி வைக்க வேற ஏதாவது வழி இருக்குதான்னு ஆராயுதாம்.''’

dd

""தேர்தல் எப்ப வந்தாலும் மேயர், சேர்மன் பதவிகளெல்லாம் தங்களுக்குத்தான்னு அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் கணக்குப் போட்டு வைத்திருக்குதாம். கூட்டணிக் கட்சிகளுக்கு வார்டுகளில் தாராளம் காட்டலாம்ன்னு நினைக்குதாம். ஆனால் இரு தரப்பிலும் இருக்கும் கூட்டணிக் கட்சிகள், தங்களுக்குத் தோதான மாநகராட்சி எது? நகராட்சிகள் எது எது?ன்னு பரபரப்பா லிஸ்ட் போட்டுக்கிட்டு இருக்கு.''’

"" உள்ளாட்சித் தேர்தலில் கழகங்களைவிட ஆர்வமா இருக்கிற பா.ஜ.க. இப்பவே மேயர் சீட்டுகளை குறி வச்சிடிச்சாமே?''’

""தலைவரே, பா.ஜ.க.வைப் பொறுத்தவரை 5 மாநகராட்சியைக் கேட்டு அதில் நான்கையாவது வாங்கி, மூன்று மேயர்களையாவது ஜெயிச்சிடணும்னு அதிகாரத் தொனியோடு கணக்குப் போடுது. பா.ஜ.க. தலைமை விடுத்த அழைப்பின் பேரில் டெல்லிக்குப் போன கட்சியின் முன்னாள் எம்.பி.யான நரசிம்மன், மேலிடப் பொறுப்பாளர்களைச் சந்திச்சி, இதை வலியுறுத்தியிருக்காரு. மேயர் பதவிகளை அ.தி.மு.க. நமக்குக் கொடுக்க மறுத்தால், அதன் உறவைத் துண்டித்துவிட்டு நாம் தனியாக களத்தில் நிக்கணும்னு அவர் அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்கார். எடப்பாடி அரசை நாமதான் தூக்கிச் சுமக்குறோம்னும், மத்திய அரசு ஒதுக்கும் நிதியை வச்சி, அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பெயர் வாங்கிக் கிட்டு இருக்காங்கன்னும் எடுத்துச் சொல்லியிருக்காராம். தமிழக பா.ஜ.க.வின் மற்ற சீனியர் தலை வர்களும், இதே கருத்தை வலியுறுத்தி, அமித்ஷாவுக்குக் கடிதம் எழுதியிருக் காங்களாம்.''’

""24-ந் தேதி கூட இருக்கும் அ.தி.மு.க. பொதுக் குழுவில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த வியூகங்கள்தான் பிரதானமா இருக் குமா?''’

""அதற்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமா சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். அப்புறம், பொதுக் குழுவிலேயே கட்சியின் பொதுச் செய

""அதற்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமா சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். அப்புறம், பொதுக் குழுவிலேயே கட்சியின் பொதுச் செய லாளரா ஆகிட ணும்னு திட்டம் போட்டு வைத் திருந்த முதல்வர் எடப்பாடி, நிலைமையை யோசிச்சி, இப்போதைக்குக் கைவிட்டுட்டாராம். ஓ.பி.எஸ். இ.பி.எஸ்.சின் கூட்டுத் தலைமையே தொடரும். சசிகலாவைக் கட்சியில் சேர்க்கும் தீர்மானம் எதுவும் பொதுக்குழுவில் இருக்காதாம். உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றினால்தான் வரக் கூடிய சட்டமன்றத் தேர்தலைத் தெம்பா எதிர்கொள்ள முடியும்னு எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் நினைக் கிறாங்களாம். அது சம்பந்தமா பொதுக்குழுவில் ஆலோசனை இருக்கும்.''

""மேயர், சேர்மன் சீட்டுன்னு கலெக்ஷன் ஜரூரா இருக்குதாமே?''

""மாஜி மந்திரியான தளவாய் சுந்தரம், தன்னோட குமரி மாவட்ட எல்லையைத் தாண்டி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட அரசியலிலும் மூக்கை நுழைப்பது, அந்தப் பகுதி அ.தி.மு.க.வினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கு. இப்படி பல பகுதிகளிலிருந்தும் வரும் புகார் களை எப்படி சரி பண்ணுவதுங்கிற ஆலோசனையில் எடப்பாடி இருக்காராம்’.''

""சென்னை மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிடணும்னு தி.மு.க. தலைமையிடம் விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சியை பட்டியல் இன மக்களுக்கான தொகுதியா மாற்றணும்னு முதல்வர் எடப்பாடியிடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை மனுவை நேரில் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திருக்காரே?''’

""உண்மைதாங்க தலைவரே, தி.மு.க. கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஆளும்கட்சித் தலைமையின் விருப்பத்தின் பேரில்தான் முதல்வர் எடப்பாடியை நேரில் சந்திச்சாருன்னும், 3 மாநகராட்சித் தொகுதிகளைக் கேட்டு வலியுறுத்தும் பா.ம.க.வுக்கு செக் வைக்கும் விதமாத்தான், சிறுத்தைகளுக்கு இந்த சந்திப்பின் மூலம் எடப்பாடி டோரைத் திறந்து வச்சிருக்காருன்னும், இந்த சந்திப்பை வச்சி, ஒரு விறுவிறு தகவல் பரபரப்பா கிளம்புச்சு.''

""சிறுத்தைகள் என்ன சொல்றாங்க?''

""சென்னை மாநகராட்சிங்கிறது பட்டியல் இனமக்கள் பெரும்பான்மையா வசிக்கும் பகுதி.ஆனால் பொதுத் தொகுதியாவே வச்சிருக்காங்க. எனவே இதைத் தனித் தொகுதியா அறிவிக்கணும்னு கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் கோரிக்கை வச்சோம், இப்ப அ.தி.மு.க, ஆட்சியிலும் கோரிக்கையை வச்சிருக்கோம். அதுக்காகத்தான் இந்த சந்திப்பு நடந்தது. பொதுவா பட்டியல் இனமக்கள் அதிகம் வாழும் தொகுதின்னு ஒன்னு இருந்தால், அதைக் கூறுபோட்டு அக்கம் பக்கம் இருக்கும் மற்ற சமூகத்தினர் பெரும்பான்மை உள்ள பகுதிகளோடு சேர்த்து பொதுத் தொகுதியா ஆக்குற வேலை இப்பவும் நடந்துக்கிட்டு இருக்கு. அதனால் இப்படிப்பட்ட சிக்கல்களைக் களையணும்ன்னுதான் நாங்க போராடுறோம்னு சொல்றாங்க. அரசியல் களத்திலோ, பா.ம.கவுக்கு வி.சி.க மூலமா எடப்பாடி வைத்த செக், தி.மு.க. இளைஞரணிச்செயலாளர் உதயநிதிக்கு பிரேக் போடுற மாதிரி ஆயிடிச்சிங்கிற டென்ஷன் அறிவாலயம் பக்கம் தெரியுது.''’

""ஓ.’''

ttv

""உள்ளாட்சித் துணைத் தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தணும். மத்திய அரசால் பாதியாகக் குறைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான நிதியை, மாநில அரசு ஈடுகட்டனும் என்பது போன்ற கோரிக்கைகளையும் முதல்வர் எடப்பாடி யிடம் வைத்துவிட்டுத்தான் திருமா வந்தார் என்று சொல்லும் சிறுத்தைகள் தரப்பு, நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் தொடர்கிறோம். தேவையில்லாத வீண் வதந்திகளை பரப்புகிறவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படமாட்டோம். அதே சமயம், சென்னை இந்தமுறை தனித் தொகுதியாக ஆக வாய்ப்பில்லை என்ப தையும், இப்போது வேலூரையும், தூத்துக் குடியையும்தான் தனித்தொகுதியாக்குறாங்கன் னும் சொல்லுது.''’

""தினகரனின் அ.ம.மு.க.வும் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதாக அறிவிச்சிருக்கே?''’

""தலைவரே, உள்ளாட்சித் தேர்தலை, தனிச்சின்னம் கிடைக்காததைக் காரணம் காட்டி புறக்கணிக்கலாம்ன்னு தினகரன் நினைச்சார். ஆனால் கட்சிப் பிரமுகர்கள் பலரும், இடைத்தேர்தலை புறக்கணிச்சோம், உள்ளாட்சியிலும் பங்கெடுக்கலைன்னா மக்கள் நம்மை மறந்துடுவாங்கன்னு வலியுறுத்தி யிருக்காங்க. பொதுச்சின்னம் இல்லைன்னாலும் இறங்கிப் பார்க்கலாம்னு தினகரனும் நினைக் கிறாராம். எடப்பாடியோ, அ.ம.மு. க. உள்ளாட்சித் தேர்தலில் நின்றால்; தேவையில்லாமல் நம் ஓட்டுக்கள்தான் பிரியும். அதனால் உள்ளாட்சித் தேர்தலில் நிற்கவேண்டாம் என்று தினகரனுக்கு அறிவுறுத்துங்கள்ன்னு சிறையில் இருக்கும் சசிகலாவுக்குத் தகவல் அனுப்பினார். ஆனாலும் இதற்கு சசிகலா அசைந்துகொடுக்கலை யாம். அதனால்தான் தினகரன் இப்படி அறிவிச் சாராம்.''’

""நீதிபதிகளின் விவகாரங்களைக் கவனிக்கும் கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதியும் இடம் பெற்றிருக்கிறாரே? ''’

""கொலீஜியத்தில் 13 ஆண்டுகளுக்குப் பின் இடம்பெறும் பெண் நீதிபதிங்கிற பெருமை நீதியரசர் பானுமதிக்குக் கிடைக்குது. மிகவும் கறாரான, நேர்மையான நீதிபதின்னு பேரெடுத்தவர் இவர். அதனால், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தகில் ரமானி விசாரித்த சிலை கடத்தல் வழக்கு, அப்புறம் அவர் வாங்கியுள்ள இடம் தொடர்பான புகார், இதில் இரண்டு அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருப்பது உள்ளிட்ட எல்லாமும் நீதிபதி பானுமதியால் விசாரிக்கப்படும்னு சட்டத்துறையினர் சொல்றாங்க.''’

rr

""ம்.. பல தரப்பிலும் விசாரணைகள் வேகமெடுக்குதே...''

""திருச்சியில் காவல்துறை அதிகாரியா இருந்த சர்வேஸின் தம்பி, வருமான வரித்துறையினரின் விசாரணையில் இருப்பதையும். அந்த சர்வேஸ், டெல்லி மத்திய புலனாய்வுத் துறைக்கு மாறியதையும் கூட நாம் விவாதிச்சோம். சபரீசனின் ஓ.எம்.ஜி. டீமில் இருக்கும் சர்வேஸின் தம்பியின் பெயர் ரித்தீஷாம். தற்போது அவர் சென்னை நீலாங்கரையில் 20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிய பங்களா, மற்றும் அவர் வசம் இருந்த அதிக விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் பற்றிய விபரங்களும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தெரிய வந்திருக்குதாம். இதையொட்டி விசா ரணை வேகமா நடக்குதாம். தி.மு.க. தலைமையைக் குறி வைப்பதுதான் பா.ஜ.க.வின் ப்ளான்.''’’

""அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் மேல்முறையீடு செய்யப்போறதா அறிவிச்சிருக்கே?''’

kk

""ஆமாங்க தலைவரே, முஸ்லீம்களின் உயர்மட்ட அமைப்பான தனிநபர் சட்ட வாரியத்தின் செயற்குழு, 17-ந் தேதி கூடுச்சு. கூட்டத்தின் முடிவில், பாபர் மசூதி இருந்த இடம் அல்லாவுக்குச் சொந்தமான இடம். அதை யாருக்கும் யாரும் வழங்க அனுமதி இல்லை. அதேபோல், அந்த இடத்திற்கு மாற்றாக வழங்குவதாகச் சொல்லும் மாற்று இடத்தையும் நாங்க ஏற்க மாட்டோம்ன்னு அந்த அமைப்பு அதிரடியா அறிவிச்சிருக்கு. இதைக் கண்டு திகைத்துப் போன பா.ஜ.க.வும் விஸ்வ ஹிந்து பரிசத் போன்ற அமைப்புகளும், இந்த முடிவை முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் திரும்பப் பெறணும்னு சொல்லத் தொடங்கியிருக்கு.''’

""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன்... டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், தங்கள் விடுதிக் கட்டணம் 300 மடங்கா உயர்த்தப்பட்டதைக் கண்டித் துத் தொடர்ந்து போராட் டங்களை நடத்திக்கிட்டு இருக்காங்க. 18-ந் தேதி நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங் கியதால், அன்று மாணவர் கள் நாடாளுமன்றத்தை முற்றுகை இடுவோம்ன்னு அறிவித்தபடி சொல்லி டெல்லி வீதிகளில் மாபெரும் பேரணியை நடத்தி வலிமையைக் காட்டி யிருக்காங்க. அவங்க மேலே போலீஸ் நடத்திய தடியடி பெரும் பரபரப்பை உண்டாக்கிடிச்சி. அதே நாளில், ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மர்ம மரணம் பற்றி நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சரமாரியா கேள்வி எழுப்பி, ஐ.ஐ.டி. நிர்வாகத்தின் தோலுரிச்சிட்டாரு. தி.மு.க. கூட்டணி எம்.பிக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு, பாத்திமா விவகாரத்தில் நீதி கேட்டு குரல் கொடுத் தாங்க.''

__________

இறுதிச்சுற்று

ஸ்டாலின் கேட்ட கேள்விகள்!

stகாலியாக இருக்கும் தமிழக தகவல் ஆணையத்தின் ஆணையர் பதவியை நிரப்புவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி தலைமையில் 18-ந் தேதி நடந்தது. இதில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒரு உறுப்பினர் என்பதால், அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைச் செய லாளர் ஸ்வர்ணா ஐ.ஏ.எஸ். அவருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், மு.க.ஸ்டாலினோ, ’"தேடுதல் குழு அமைக்கப்பட்டதாகவும் அதன் பரிந்துரைகள் தெரிவுக்குழு கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் சொல்லியிருக்கிறீர்கள். தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு யார் யார் விண்ணப்பித்தனர்? அவர்களின் தகுதிகள் என்ன? என்பது உள்ளிட்ட எந்த விபரங்களும் குறிப்பிடப்படவில்லை. எனவே வெளிப்படையான ஒளிவுமறைவற்ற தேர்வினை நடத்த அரசு தயாராக இல்லை எனத் தெரிகிறது. தலைமை ஆணையர் யார் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு பெயரளவிற்கு இந்த கூட்டத்தை நடத்துவதாக அறிகிறேன். எனவே கூட்டத் தில் நான் பங்கேற்பது பொருத்தமாக இருக்காது'’ என பதில் கடிதத்தை அனுப்பிவிட்டு, அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டார்.

-இளையர்

nkn221119
இதையும் படியுங்கள்
Subscribe