ADVERTISEMENT

வடிவேல் பாலாஜி இறுதிச்சடங்கில் விஜய் சேதுபதி! (படங்கள்)

11:22 AM Sep 11, 2020 | george@nakkheeran.in

ADVERTISEMENT

காமெடி நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிகளையும், உடல் மொழிகளையும் வெளிப்படுத்தி சின்னத்திரையில் மக்களை மகிழ்வித்து வந்தவர் நடிகர் வடிவேல் பாலாஜி. கடந்த பத்து நாட்களாக நெஞ்சுவலியால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதன்பின், வீட்டுக்கு வந்த அவரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. இந்நிலையில், 9ஆம் தேதி நள்ளிரவில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத் துடிப்பு சீராக இல்லாததால், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி வடிவேல் பாலாஜி (வயது 42) உயிரிழந்தார்.

ADVERTISEMENT

அவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை சேத்துபட்டில் வடிவேலு பாலாஜி வீட்டில் நடைபெறும் இறுதி சடங்கில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தாருக்கு நிதியுதவி அளித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT