ADVERTISEMENT

விஜய் சேதுபதியின் அரசியல் அவதாரம்!!! Exclusive படங்கள்...

11:21 AM Jul 09, 2020 | george@nakkheeran.in

ADVERTISEMENT

விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படம்தான் ‘துக்ளக் தர்பார்’. புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இப்படத்தை இயக்க, ஆர். பார்த்திபன், அதிதிராவ் ஹைதாரி, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை செவன் ஸ்கிரீன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் வியாகாம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. விஜய் சேதுபதியின் '96' படத்தைத் தொடர்ந்து கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அண்மையில் இப்படம் குறித்து செவன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் அப்டேட் வெளியிட்டது. அதில், இப்படத்தின் ஷூட்டிங் 35 நாட்கள் மட்டுமே முடிவடைந்திருப்பதாகவும் மீதம் 40 நாட்களுக்கு ஷூட்டிங் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தது. நேற்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக நிலையில் தற்போது விஜய் சேதுபதி அரசியல்வாதி கெட் அப்- இல் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT