Skip to main content

தயாராகிறார் தலைவி! கங்கனா ரனாவத் வெளியிட்ட Exclusive படங்கள்! 

Published on 05/10/2020 | Edited on 05/10/2020

 

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் 'தலைவி' என்றொரு படத்தை எடுத்து வருகிறார். இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்க, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடிக்கிறார்.  முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் வெளியாகி ரசிகளின் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இத்திரைப்படம் உருவாகுவதாக அறிவிக்கப்பட்டது. 

 

கரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட இப்படத்தின் படபிடிப்பு, மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய், மற்றும் கங்கனா ரனாவத் இடம்பெறும் படப்பிடிப்பு புகைப்படங்களை தலைவி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்