'பாகுபலி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் ராணா டகுபதி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வருகிறார். இவர் சமீபகாலமாக ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் நேற்று தங்களுக்கு குடும்பத்தார் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக ராணா தனது சமூக வலைத்தள பக்கங்களில் செய்தி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.