ADVERTISEMENT

ஜெயம்ரவி கொடுத்த சர்ப்ரைஸ்!

04:14 PM Aug 21, 2020 | george@nakkheeran.in

ADVERTISEMENT

'ரோமியோ ஜூலியட்' மற்றும் 'போகன்' ஆகிய படங்களை இயக்கிய லக்‌ஷ்மன் ஜெயம் ரவியின் 25ஆவது படமான 'பூமி'யை இயக்கியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். ரவிக்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். விவசாயம் குறித்து பேசும் இப்படத்தின் டீஸர் கடந்த மார்ச் மாதம் வெளியான நிலையில், படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

கரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் எதுவும் வராமல் இருந்தது. தற்போது படத்தின் சில எக்ஸ்ளூசிவ் புகைப்படங்களை படக் குழுவினர் வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். விரைவில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT