உயிரைக் குடித்த குடி! தாலி அறுத்த டாஸ்மாக்!

tt

""ஐயோ… இன்னைக்கு ஒரே நாள்தாம்மா. நாளையில இருந்து பாட்டிலைத் தொடவே மாட்டேன். தயவுசெய்து சத்தம்போட்டு ஊரைக் கூட்டாதே. என்னை நம்பமாட்டியா ப்ரியா.''

""இப்படித்தான் தினமும் சொல்லுறியே தவிர, இந்தப் பாழாப்போன குடிப்பழக்கத்தை மட்டும் நீ விடவே மாட்டேங்கிறியே?''

கோவை இடையர் பாளையத்தைச் சேர்ந்த பிரதீப்குமார் - ப்ரியா தம்பதி வாடிக்கையாக போட்டுக் கொள்ளும் சண்டை இதுதான். குடிப்பழக்கத்தால் சீரழிந்த ஒரு உதாரணக் குடும்பம். குடிக்கு அடிமையாகிப்போன தனது கணவனைத் திருத்த வழிதேடிய ப்ரியா, கோவில்பாளையத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில், எப்படியாவது அட்மிட் செய்துவிடும் முடிவுக்கு வந்தார். குடியென்னும் கேவலத்தில் இருந்து மீண்டுவரும் பிரதீப்குமாருடன் சேர்ந்து நிம்மதியாக வாழவேண்டும் என்பது ப்ரியாவின் கனவு.

நினைத்தது போலவே, கடந்த வெள்ளிக்கிழமை, கோவில்பாளையம் மறுவாழ்வு மையத்தில் பிரதீப்குமாரை சேர்த்தும் விட்டார். ஆனால், இனியாவது வாழ்க்கை வெளிச்சமாக

""ஐயோ… இன்னைக்கு ஒரே நாள்தாம்மா. நாளையில இருந்து பாட்டிலைத் தொடவே மாட்டேன். தயவுசெய்து சத்தம்போட்டு ஊரைக் கூட்டாதே. என்னை நம்பமாட்டியா ப்ரியா.''

""இப்படித்தான் தினமும் சொல்லுறியே தவிர, இந்தப் பாழாப்போன குடிப்பழக்கத்தை மட்டும் நீ விடவே மாட்டேங்கிறியே?''

கோவை இடையர் பாளையத்தைச் சேர்ந்த பிரதீப்குமார் - ப்ரியா தம்பதி வாடிக்கையாக போட்டுக் கொள்ளும் சண்டை இதுதான். குடிப்பழக்கத்தால் சீரழிந்த ஒரு உதாரணக் குடும்பம். குடிக்கு அடிமையாகிப்போன தனது கணவனைத் திருத்த வழிதேடிய ப்ரியா, கோவில்பாளையத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில், எப்படியாவது அட்மிட் செய்துவிடும் முடிவுக்கு வந்தார். குடியென்னும் கேவலத்தில் இருந்து மீண்டுவரும் பிரதீப்குமாருடன் சேர்ந்து நிம்மதியாக வாழவேண்டும் என்பது ப்ரியாவின் கனவு.

நினைத்தது போலவே, கடந்த வெள்ளிக்கிழமை, கோவில்பாளையம் மறுவாழ்வு மையத்தில் பிரதீப்குமாரை சேர்த்தும் விட்டார். ஆனால், இனியாவது வாழ்க்கை வெளிச்சமாகும் என்ற ப்ரியாவின் எண்ணத்தில், இருளைப் பாய்ச்சத் தயாராகி இருந்தார் பிரதீப்குமார்.

""ப்ரியா… நான் மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பிச்சு வந்துட்டேன்மா. என்னால குடியை மறக்க முடியலை. அங்கே இருக்கிற குடிகாரர் களைப் பார்க்கவும் முடியலை. என்னைப் போல அங்கிருக்கும் ஒவ்வொருத்தர் சொல்லுற கதையும், தாங்க முடியலையம்மா. அதையெல்லாம் கேட்டால் குடிக்காமக் கெடக்கிறவனுக்குக் கூட, குடிக்கத்தான் தோணும்.

அதிலும், ஞானம்னு ஒரு பையன். ஐயோ இவங்க குடியை மறக்க வைக்கிறோம்னு சொல்லிட்டு, ரொம்ப துன்புறுத்துறாங்க அண்ணேன்னு பொலம்பு னான். இவுங்க இப்படியெல்லாம் பண்ணும் போதுதான் குடிக்கணும்னு ஆசையே வருதுண்ணே. நாமெல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளுகளா அண்ணே. நம்மளுடைய ஞாயிற்றுக் கிழமைகள் எவ்வளவு ரம்மியமா இருக்கும்? அந்த ஒயின்ஷாப்புக்குள்ள போயி, நாம போடுற ஆட்டம், அடிக்கிற கூத்துகளை எல்லாம் நினைச்சாலே கஷ்டமா இருக்கு அண்ணே. அதெல்லாம் கனாக் காலமா? இனி அதையெல்லாம் அனுபவிக்கவே முடியாதா அண்ணேன்னு சொல்லிக் கதறினான்.

அந்தப் புலம்பலைக் கேட்டதும், என்னால அங்க ஒரு நிமிஷம்கூட இருக்க முடியலை. நீ கொண்டுபோய் விட்ட காரணத்துக்காக ஒருநாள் இருந்துட்டு வந்துட்டேன். ஒருநாள் முழுக்க குடிக்காம இருந்ததுக்கு ஒரேயொரு ஆஃப்தான் குடிச்சிருக்கேன். என்னையத் திட்டாதே ப்ரியா'' எனச் சொல்லிவிட்டு, மட்டையாகினார் பிரதீப்குமார்.

தன் புலம்பலைப் போலவே முயற்சியும் வீணாகிப் போனதே என்று எரிச்சலடைந்த ப்ரியா, வேறு வழியின்றி போலீசுக்கு போன் அடித்தார். ""இந்தாளு சும்மா பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்காரு சார். என்னன்னு கொஞ்சம் கேளுங்க சார்''’எனக் ffகேட்டார். உடனடியாக பிரதீப்குமாரைப் பிடிக்கவந்த துடியலூர் போலீசார், ""என்னடா? பொம்ப ளைக்கிட்ட பிரச்சனை பண்றியா? முட்டிக்கு முட்டி தட்டிருவோம். மப்பு தெளிஞ்சதும் ஸ்டேஷன் வர்ற. அதுக்கப்புறம் நாங்களே உன்னையக் கொண்டுபோய் மறுவாழ்வு மையத்தில் கெடத்துறோம்'' என அதட்டிவிட்டுக் கிளம்பினர்.

போலீசாரின் இந்த அதட்டலால் பிரதீப்குமாருக்கு அடித்த போதை இறங்கிவிட்டது. கோபம் தலைக்கேறியது. ""ஏண்டி… என்னையவே போலீஸ்கிட்ட புடிச்சிக் கொடுக்கப் பாக்குறியா? நானா, அந்தப் போலீஸான்னு பார்த்திடலாமா? என்னையக் கொண்டுபோய் குடிகார மையத்துல போட்டுருவாங்களா? பார்க்கலாம்டி'' என காட்டுத்தனமாகக் கத்திவிட்டு, வீராப்பாக வீட்டைவிட்டு இரவு கிளம்பிச் சென்றார்.

கையில் ஒரு டார்ச். போலீஸ் பயத்தில் ஆழத்திற்கு இறங்கிய போதையை, மீட்டெடுக்க, மறுகையில் குவார்ட்டர். வீட்டுக்கு அருகிலிருக்கும் சுடுகாட்டில் போதையில் படுத்தபடி யோசித்துக் கொண்டிருந்த பிரதீப்குமார், “போலீஸ் பிடியில் இருந்தும் தப்பவேண் டும். மனைவி தன்னைக் கேவலப்படுத்துவதையும் நிறுத்த வேண்டும்’’என்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்திருக்கிறார். திடீரென்று என்ன நினைத்தாரோ, போதையின் உச்சத்தில் அதே சுடுகாட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் பிரதீப்குமார்.

மறுநாள் காலை ஊரே சுடுகாட்டில் கூடியிருந்தது. தனது கணவரின் இந்த விபரீத முடிவைக் கண்டு, மார்பில் அடித்துக்கொண்டு குமுறி வெடித்தார் ப்ரியா. இந்தப் பாழாப்போன குடியை விடச் சொன்னதுக்காக, வாழ்க்கையவே முடிச்சிக்கிட்டியே இப்படி என்று அவர் கதறியழு வதையும், மகிழ்ச்சி நிறைந்த மறுவாழ்வை விடவும், மது வாழ்வே முக்கியமென்று பிரதீப்குமார் மூர்ச்சையாகித் தொங்கிக் கொண்டிருப்பதையும் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

""ப்ரியா மறுவாழ்வு மையத்துக்குத்தானே அனுப்பினா. பிரதீப்பு நலமாய்த் திரும்பி வந்தாப் போதும்னுதானே நினைச்சி அனுப்பி வைச்சா. ஆனா, இந்தப் படுபாவி தன் வாழ்க்கையையே முடிச்சிக்கிட்டு இப்படித் தொங்கிட்டானே'' என ப்ரியாவை எண்ணி பரிதாபமாகப் பேசுகிறார்கள் இடையர்பாளையம் கிராம மக்கள்.

குடிப்பழக்கம் இல்லாத ஓர் உலகத்தை, கொடிய நோயான கொரோனா கொடுத்தது. ஆனால், அதைப் பொறுத்துக்கொள்ளாத அரசு, பாட்டிலைக் கொடுத்து ப்ரியா போன்றவர்களின் தாலியை அறுக்கிறது.

-அருள்குமார்

nkn300520
இதையும் படியுங்கள்
Subscribe