Advertisment

'நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள்'-இளபுகழேந்தி பளிச் கருத்து

21

'You will be the ones who will be deceived' - Elapugazhendi on DMK-Congress alliance Photograph: (DMK)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிக திமுக கூட்டணிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
Advertisment
இந்நிலையில் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இளபுகழேந்தி தன் அரசியல் பார்வையை நக்கீரன் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
Advertisment
எப்போது தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்?
பாஜகவில் ஊழல் அதிகமாக இருகிறது என்று குற்றச்சாட்டை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறோம். ஆனால் பாஜக யார் யார் மீது பழி வாங்க வேண்டும் என நினைக்கிறார்களோ, எந்த அரசாங்கத்துக்கு கெட்டபேர் வர வேண்டும் என நினைக்கிறாங்களோ, அந்த அரசாங்கத்தில் நன்றாக பணியாற்றக்கூடிய அமைச்சர்கள் மேல் இப்படிப்பட்ட அமலாக்கத்துறை, சிபிஐயை பயன்படுத்துவார்கள். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு சிபிஐ, அமலாக்கத்துறையும் எத்தனை வழக்குகளை நிரூபித்துள்ளது என சொல்லச் சொல்லுங்கள். பாஜக வந்த பிறகு 2% மட்டும்தான் ப்ரூவ் ஆகிருக்கு. 98% இல்லை. ஏன் இல்லை என்றால் எல்லாம் எதிர்கட்சி தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்கு. அப்படித்தான் திமுகவின் மீதும், கே.என்.நேரு மீதும் போடப்பட்டுள்ள வழக்கு என்பதுதான் நான் சொல்ல வருவது. பாஜக அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது.  சிபிஐ, அமலாக்கதுறை என்பது மரியாதைக்குரிய துறையாக இந்தியாவில் இருந்தது. ஆனால் அது இரண்டுமே நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மிக மோசமான, ஒரு மலிவாக போய்விட்டதுதான் என்பதுதான் வருத்தத்திற்கு உரியது.
பொதுவாக  எந்த தேர்தலாக இருந்தாலும் தேர்தல் வரும்போது அரசியல் கட்சிகள் பெரிய கட்சிகளுடைய தலைமையில் கூட்டணிகள் இணைவது, கூட்டணிகள் சேர்வது என்பது நடப்பதுதான். அப்படி கூட்டணி சேருகின்ற பொழுது பேச்சுவார்த்தை நடக்கும். இவர்கள் ஒரு கமிட்டி போடுவார்கள், அவர்கள் ஒரு கமிட்டி போடுவார்கள். இந்த இரண்டு குழுக்களும் பேசும். குழுக்கள் பேசியதற்கு பிறகு தலைவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். முதலிலேயே தலைவர்கள் பேசி முடிவு செய்தால் தான் பேச்சுவார்த்தையே தொடங்குகிறது. காங்கிரஸ் இயக்கத்தை எடுத்துக் கொண்டால் ராகுலுடைய கருத்து, இன்னும் சொல்லப்போனால் சோனியா காந்தி அம்மையார் உடைய கருத்துக்கள் என்ன என்பதுதான் கூட்டணியின் இறுதிக்கட்ட நிலை. இப்படி நாம் பேசினால் இரண்டு சீட் அதிகம் கிடைக்கும் என்றுகூட இப்படி பேசலாம். அதை தவறு என்று சொல்ல முடியாது.
அது அவர்கள் விருப்பம். ஆனால் விருப்பம் எல்லாம் முடிவல்ல. முடிவு என்பது கூட்டணி உறுதியாக இருக்கிறது. இந்த கூட்டணியை பற்றி கூட்டணியிலே இருக்கக்கூடிய திருமாவளவன் அவர்கள் அழகாக பேட்டி கொடுத்தார். திராவிட முன்னேற்ற கழக தலைமையில் இருக்கிற கூட்டணி உறுதியாக இருக்கிறது, சரியாக இருக்கிறது. அதில் எந்தவிதமான குழப்பமும் கிடையாது. திமுக கூட்டணியில் உள்ள அனைவரும் இப்படி பேசி வருகிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் இதுவரைக்கும் எந்த வெற்றியும் பார்க்கவில்லை. ஏனென்று கேட்டால் அந்த கட்சிக்கு தேர்தல் என்றால் என்னவென்றும் தெரியாது. விசிலை எடுத்துக்கொண்டு இப்போதுதான் விசில் அடிக்க வந்திருக்காங்க. இன்னைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் இருக்கும் கூட்டணி என்பது வலிவோடும் பொலிவோடும் மிக சரியாக இருக்கிறது. எல்லாருமே அப்படித்தான் பார்க்கிறாங்க. இப்படி பார்த்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் திமுக கூட்டணி வலுவாகி கொண்டே இருக்கிறதே அதை எப்படியாவது உடைக்க வேண்டும் என அரசியல் ரீதியாக முயற்சி பண்ணலாம் என்று ஏதாவது செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய ஆசையை வெளிப்படுத்தும் விதமாக ''காங்கிரஸ் வெளியே வந்துருச்சு. இவங்க இப்படி பேசிட்டாங்க அவங்க அப்படி பேசிட்டாங்க'' என எதையாவது சொல்லிக்கொண்டு மகிழ்ச்சி அடையலாமே தவிர, தங்களுக்கு தாங்களே மாலை போட்டுக்கொண்டு கை தட்டுகிற மாதிரி உள்ளது. தவெக என்ன நினைச்சுட்டாங்க நடிகர் வந்துட்டாரு. இனிமே அவ்வளவுதான். எல்லாரும் நம்மகிட்ட வந்துருவாங்க என நினைச்சாங்க. யாரும் உண்மையான அரசியல் நிலைமையும், மக்களுடைய நிலையை புரிந்து கொள்ளவில்லை. இது ஏற்றுக்கொள்ள கூடியது இல்லை. நீங்கள்தான் ஏமாந்து போகப் போறீங்களே தவிர எங்க கூட்டணி என்பது மிகச் சரியாக தலைவர் தலைமையில் இருக்கிறது. இன்னும்கூட பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் வடமாநிலங்களில் இருக்கக்கூடிய தலைவர்களில் சிலர் இந்தியாவிற்கே இந்த இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க கூடியவராக தமிழக முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் தான் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிலை இருக்கிறது. 
congress tvk vijay dmk alliance parties
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe