Advertisment

'நீயா நானா போட்டி; சீமானை யாரால் வீழ்த்த முடியும்?'-மதிமாறன் ஓபன்

325

'You or I? Only he can defeat Seeman?' - Madimaran Open Photograph: (politics)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Advertisment
இந்நிலையில் திராவிட இயக்க எழுத்தாளரும், பேச்சாளருமான மதிமாறன் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
Advertisment
313
Is Vijay's side trying to complicate Jananayagan? - Madhimaran expresses doubts Photograph: (politics)
விஜய் சீமான் இடையே இருக்கும் மோதல் என்ன?
திருப்பரங்குன்ற விவகாரத்தில் விஜய் பேசினால் திமுக ஆதரவாக மாறும். எனவேதான் இந்த கள்ள மௌனம். விஜய் இன்னொரு முருக பக்தர். சீமான் மாதிரி விஜய் அதே கத்தோலிக்க கிறிஸ்தவர். ஆனால் இஸ்லாமியத்திற்கும் விஜய் குல்லா போடுவார். சீமான் விஜய் இரண்டு பேருமே அதே குரூப். கேட்டால் சீமான் இந்த பக்கத்தில் பாஜகவை யோக்கியமா  என்று பேசுவார். இரண்டு பேருமே ஒரே குரூப் தான். விஜய் கட்சி ஆரம்பித்த போதே சீமான் கழுத்து மேல கால் வச்சுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறார். சீமான் முற்போக்காளர்கள், பெரியாரிஸ்ட்களை ரொம்ப கேவலமாக அருவருப்பாக பேசுகிறார். அதுபோல நம்மால் பேச முடியாது. சில பெரியாரிய தோழர்கள் சீமானை பேசுகிறார்கள். அது  எடுபடாது. அது சீமானை வளர்த்துதான் விடும்.
முற்போக்காளர்கள் சீமான் மாதிரி ரொம்ப கழிசடைத்தனமாக பிற்போக்குத்தனமான பேசுவது பயனற்றது. சீமான் மற்றும் அவரது கட்சியில் உள்ளவர்கள் என்ன வேண்டும் என்றாலும் இழிவாக பேசுறாங்க. அதற்கெல்லாம் முற்போக்காளர்கள் பதில் கொடுத்துட்டு இருந்தீங்கன்னா அவர்கள் அதை வச்சுதான் வளர்வதற்கு வருகிறார்கள். ரோட்டில் போகும் போது  ஒரு சாதாரண ஆள் உங்களை கெட்ட வார்த்தையில் இஷ்டத்துக்கு திட்டுகிறான் என்றால், நீங்களும் திட்டுவீங்களா? தவிர்த்துட்டுதான் போவீர்கள். அவனோடு நீங்க ரோட்ல சண்டை போட முடியாது. அது மாதிரிதான் முற்போக்காளர்களுக்கும் சீமானுக்கும் நடக்கிற பிரச்சனை. ஆனால் சீமானை யாரு வீழ்த்த முடியும்? சீமானை நாம் திட்ட முடியாது. சீமானை விடவும் மோசமாக பேசுறவங்க தான் திட்ட முடியும். அப்போது விஜய் சீமானை வீழ்த்த முடியும். விஜய் ரசிகர்கள் சீமானை வீழ்த்த முடியும்.
தற்குறிகளின் தலைவனாக சீமான் தான் இருந்தார். அந்த பதவி அவர்கிட்ட தான் இருந்தது. அதனால்தான் அவதூறாக எதை வேண்டும் என்றாலும் சீமான் பேசுவார். விவாதிக்கமாட்டார். கண்ட மேனிக்கு  அவரே ஆதரிப்பார் அவரே எதிர்ப்பார். நாம் தமிழர் ஆரம்பித்து இரண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் பெரியார் போஸ்டர் வச்சு ஒட்டிட்டு இருந்தாங்க. இப்போது  அது மாறகிறது என்றால் யாரை வேண்டும் என்றாலும் ஆதரிக்கும் இந்த பிழைப்பு வாதங்கள் சீமானிடம் இருக்கிறது.
இப்போது விஜய்யை எடுத்துக்கொண்டால் சீமான் மாதிரியான ஒரு ரவுடித்தனமான தற்குறியை விஜய் ரசிகர்கள் மாதிரியான ஒரு தற்குறிகள் தான் காலி பண்ண முடியும். இப்போது இருக்கும் தற்குறிகளில் நான் தான்டா நம்பர் ஒன்னு... இல்ல நீ தான்டா நம்பர் ஒன்னு என்கிற சண்டைதான் அவர்களுக்குள்ள நடக்கிறது. அதில் விஜய் கட்சி வளர்வதால் சீமான் கட்சி அழிக்கப்படுகிறது. இதில் இன்னொரு விஷயம் சீமானும், சீமான் கட்சியை சேர்ந்தவர்களும் எவ்வளவு கடுமையாக பேசினாலும் விஜய் பொருட்டாய் மதிக்கிறது இல்லை. எனக்கு சீமான் ஒரு ஆள் இல்லை என எப்படி விஜய் நினைக்கிறாரோ. அதேபோல் தான் விஜய் ஒரு ஆள் இல்லை என திமுக நினைக்கிறது.
Election dmk tvk vijay vijay seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe