Advertisment

செப்சிஸ் தொற்றால் கை, கால்களை இழந்த பெண்- அதிகம் தேடப்பட்ட 'டாக் லிக்'

398

dog lick Photograph: (medical)

வளர்ப்பு நாய் நக்கியதால் செப்சிஸ் ஏற்பட்டு ஒரு பெண்ணுக்கு முறை மாரடைப்பு ஏற்பட்டதோடு கை, கால்கள் நீக்கப்படும் அளவிற்கு சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

'செப்சிஸ்' என்பது உடலில் ஏற்படும் ஒரு தொற்று. நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதித்து உடலின் திசுக்கள் மற்றும் உறுப்புகளையே சேதப்படுத்தும் ஒரு நிலையாகும். நாய்களின் உமிழ்நீரில் காணப்படும் காப்னோசைட்டோபாகாகானிமோர்சஸ் (Capnocytophaga canimorsus) என்ற பாக்டீரியா மனித இரத்தத்தில் கலக்கும் போது இந்தத் தொற்று ஏற்படுகிறது. உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணத்தை விளைவிக்கும் அளவிற்கு கொடூரமானது என்று மருத்துவர்களால் விளக்கப்படுகிறது.

Advertisment

இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் மன்ஜித் சங்கா(56)  இவர் வளர்த்து வந்த செல்ல நாய் ஒன்று அவரது உடலில் சிறிய வெட்டு கீறலால் ஏற்பட்ட காயத்தை நாக்கால் நக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் வழக்கம் போல் வேலையில் இருந்து வீடு திரும்பிய போது மன்ஜித் சங்காவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மறுநாள் காலையில், அவர் மயக்கமடைந்தார். அவரது கைகளும் கால்களும் செயலற்ற முறையில் இருந்தது. உதடுகள் ஊதா நிறமாக மாறின. மேலும் சுவாசிக்க சிரமப்பட்டார். இந்த திடீர் உடல்நலக்குறைவு அவரது வீட்டாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

399
dog lick Photograph: (medical)

நாய் நக்கியதால் செப்சிஸ் தொற்று ஏற்பட்டதாக மருத்துவர்கள் நம்புகின்றனர். இறுதியாக கை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், 32 வாரங்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த பிறகு மஞ்சித் உயிர் பிழைத்தார். சிகிச்சைக்கு பின்னரே வீடு திரும்பினார். தற்போது குணமடைந்து தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப தொடங்கியுள்ளார். இந்நிலையில் செப்சிஸ் அபாயம் குறித்து மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, "இது யாருக்கும் ஏற்படலாம்" என்று மஞ்சித் தெரிவித்துள்ளார்.

இந்த அனுபவத்தை விளக்குவது கடினம் என்றும், குறுகிய காலத்தில் கை கால்களையும் இழப்பது மிகப் பெரிய விஷயம். இது மிகவும் தீவிரமானது. அதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் மஞ்சித் கூறியுள்ளார்.

மஞ்சித்தின் கணவர் காம் சங்கா கூறுகையில், ''24 மணி நேரத்திற்குள் இது எப்படி நடக்கும்?' என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? சனிக்கிழமை ஒரு நிமிடம் அவள் நாயுடன் விளையாடுகிறாள், ஞாயிற்றுக்கிழமை அவள் வேலைக்குச் சென்றிருக்கிறாள், திங்கட்கிழமை இரவு அவள் கோமாவில் இருக்கிறாள்.

மருத்துவமனையில் மஞ்சித் தீவிர சிகிச்சையில் இருந்தபோது, அவருக்கு ஆறு மாரடைப்பு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் தொற்று பரவிய பிறகு அவரது இரண்டு கால்களையும் முழங்காலுக்குக் கீழே மற்றும் இரண்டு கைகளையும் துண்டித்தனர். மஞ்சித் தனது மண்ணீரலையும் இழந்தார். என்ன நடக்கிறது என்று எனக்கே தெரியவில்லை'' என்றார்.

தற்போது மேம்பட்ட செயற்கை உறுப்புகளுக்கு மஞ்சித்- சாம் சங்கா தம்பதி நிதி திரட்டி வருகின்றனர். இதில் ரோபோ கைகள் அடங்கும். இதற்கு பல்லாயிரக்கணக்கான பவுண்டுகள் செலவாகுமாம். மஞ்சித் சங்காவின் கதை பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து,  'டாக் லிக்' எவ்வாறு செப்சிஸை ஏற்படுத்தும் என்பது பற்றிய தேடல் அதிகமானது. செவ்வாயன்று மட்டும் இந்தியாவில் கூகுள் மூலம் அதிகம் தேடப்பட்ட சொற்களில் 'டாக் லிக் செப்சிஸ்' ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Women England Disease dog
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe