Advertisment

சிறுபான்மை வாக்குகளை பிரிப்பாரா விஜய்?-சீரியஸாக விளக்கிய புதுமடம் ஹலீம்

301

Will Vijay divide the minority votes? - Pudumadam Haleem explains seriously Photograph: (politics)


தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Advertisment
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment

 

021
haleem Photograph: (politics)
எடப்பாடிக்கு இப்போது இருக்கும் பெரிய அச்சமே நம்மை விட எண்ணிக்கையில் அதிக ஓட்டுக்களை விஜய் வாங்கிடுவாரோ என்ற அந்த பயம் கண்டிப்பாக இருக்கிறது. நம்மை விட விஜய் வாக்குகள் கூடுதலாக வாங்கி விட்டால் அது விஜய்க்கு பெரிய வெற்றி. தினகரன் என்ன சொல்கிறார் 'விஜய்யால் திமுகதான் பாதிக்கும்' என்று சொல்கிறார். எதற்கு அப்படி சொல்கிறார்கள் என்றால் சிறுபான்மை வாக்குகளை விஜய் பிரிப்பார் என்று நினைக்கிறார் டி.டி.வி.தினகரன். அவருக்கு ஒரு விஷயம் புரியவில்லை. சிறுபான்மை மக்கள் இதை புரிந்துகொள்ளாத சமூகம் அல்ல. முஸ்லிம் சமூகமோ, கிறிஸ்துவ சமூகமோ விஜய்யை ஒன்னும் புரிந்து கொள்ளாமல்  இல்லை. நீங்கள் புர்கா போட்ட நாலு பேரை மேடையில் ஏற்றி விட்டால் உங்களுக்கு ஓட்டு போட்டு விடுவார்கள் என்று நினைக்காதீர்கள்.

ஒரு 16 விழுக்காடு சிறுபான்மை வாக்குகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதில் பெரும்பான்மை எல்லாம் திமுகவுக்கு தான் போயிட்டு இருந்துச்சு. அந்த 16 விழுக்காடு வாக்கில் இன்னைக்கு 10 விழுக்காட்டுக்கு மேல் தவெகவிற்கு பிரிந்து போயிடும். அது எங்களுக்கு சாதகம் என்று டி.டி.வி.தினகரன் நினைக்கிறார். ஒரு விஷயம் என்னவென்றால் சிறுபான்மை வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு வராது என்பதை அவர்களே நம்புகிறார்கள். ஆனால் விஷயம் என்னவென்றால் திமுகவோ, திமுக தலைமையோ, திமுக கூட்டணி தலைவர்களோ விஜய்யை பற்றி பெரிதாக பேசவில்லை. ஒரே வார்த்தைதான் பேசுனாங்க 'விஜய்க்கு ஊழலைபற்றி பேச தகுதி இல்லை' என்று பேசினார்கள்.
மனிதநேய மக்கள் கட்சியுடைய தலைவர் கூட 'விஜய்க்கு என்ன தகுதி இருக்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு?' என்றார். விஜய்க்கு அந்த தகுதி இல்லை என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார். ஆனால் தன்னைத்தான் ஊழல்வாதி என்று சொன்னதால் அதிமுகவிற்கு ஏற்பட்ட கோபம் இருக்கு பாருங்க  அது இரண்டாம் இடத்திற்கான போட்டியாக மாறிவிட்டது. எங்கே நம்மைவிட அதிக வாக்குகள் வாங்கி விடுவாரோ என்ற பயம் உண்மையில் அதிமுகவுக்கு இருக்கிறது. 
ammk party ttv dhinakaran edappaadi palanisamy admk muslims minority tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe