நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடப்பாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், மாநிலங்களவையில் கடந்த 4ஆம் தேதி பேசினார்.

Advertisment

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுக்கும் வகையில் கமல்ஹாசனின் கன்னிப்பேச்சில், “நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்தி தான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சைக்குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்த நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழைப் பார்த்து என்ன சொல்லுகிறீர்கள் தமிழ் பிச்சை எடுக்கக் கூட உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மை தான். தந்தாய் தமக்கென உங்கள் நீதியைத் திரட்ட ஆங்கிலத்தில் இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது' என அதிரடியாகப் பேசி இருந்தார்.

தமிழிசை, வானதி ஸ்ரீனிவசன் போன்றவர்கள் கமல்ஹாசனை திமுக எம்பி ஆக்கியதே தவறு என்ற விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடக பிரிவு செயலாளர் முரளி அப்பாஸ் நக்கீரன் டிவியில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisment

279
'Will Kamal's opposition to BJP last till the end?' - Murali Abbas explains Photograph: (mnm)

ஒன்றிய அரசை எதிர்த்து கமல் பேசியுள்ளார். இந்த பேச்சு எம்பி பதவியில் அவர் இருக்கும் வரை நீடிக்குமா?

Advertisment

கமலின் முன் ஏற்பாடுகள், முன்பாகவே தயார் செய்துகொள்ளும் விஷயங்களை பற்றி சினிமா உலகமே பிரம்மிக்கும். ஏனென்றால் கமல் ஒன்றைச் செய்யப்போகிறார் என்றால் அதற்கு தன்னை அவ்வளவு தயார் பண்ணிக்குவார். அது அவர் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் தயார் பண்ணிருப்பார். ஒரு தடவை பாரதிராஜா சார் கூட சொன்னார் ''அரசியலுக்கு கமல் போறாரு. அங்க போறதுக்கு முன்பே எல்லாம் கற்றுக்கொண்டு தான் போவார். அந்த அளவுக்கு எதையும் விட்டுவிட மாட்டார்'' என்று சொன்னார். 


ஒரு 12 நிமிட சிறிய பேச்சுக்கே கமல் இவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறார் என்றால் நாளைக்கு இந்த நாட்டை பற்றி, தேசத்தைப் பற்றி, நம்ம தமிழைப் பற்றி, நம்ம தமிழ்நாட்டு தேவையைப் பற்றி, இந்த தேசம் போக வேண்டிய வழியைப் பற்றி பேச நினைப்பதையெல்லாம் எவ்வளவு தயாரிப்போடு போவார். இன்னும் எவ்வளவு தூரம் பிரமிக்கின்ற மாதிரி இந்த பேச்சு இருக்கும். அவர் சொல்ற கருத்துக்களால் எப்படி நாடு மேம்படும் என்பதையெல்லாம் காலம் இந்த அடுத்த ஆறு ஆண்டுகளில் நிச்சயம் பார்க்கும்.