Advertisment

'அண்ணா ஏன் காணாமல் போனார்...?'-கேள்விகளால் துளைத்த வழக்கறிஞர் வே.பாலு

254

'Why did Anna disappear...?' - Lawyer V. Balu questions Vijay Photograph: (tvk)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  

Advertisment

இந்நிலையில் மூன்றாம் ஆண்டு கட்சி தொடக்க விழாவில் விஜய் பேசிய பேச்சு குறித்து சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வே.பாலு நக்கீரன் டிவியில் பகிர்ந்து கொண்டார். 

Advertisment

''தமிழ்நாட்டு மக்கள் தயவு செய்து இந்த சினிமாக்காரன் உடைய பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். அரசியல் வாழ்க்கை என்றால் என்னன்னே தெரியாமல் சினிமா வசனம் பேசுற மாதிரி ஒரு மனவளர்ச்சி குன்றிய குழந்தை வந்து மைதானத்தில நின்னு கத்தினால் எப்படி இருக்குமோ? அப்படி இருந்தது விஜய்யின் பேச்சு. அஞ்சலி என்று ஒரு படம் வந்தது தெரியுமா?அதுக்கும் இதுக்கும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இருக்கிற மாதிரி எனக்கு தெரியவில்லை. அதாவது நான் என்னுடைய படிப்பு, அனுபவம் எல்லாவற்றையும் மனதில் கொண்டாலும் கூட ஒரு அரசியல் கட்சி என்று வருகின்ற பொழுது இதை போன்ற ஒரு மலினமான, கேவலமான, முதிர்ச்சியற்ற ஒரு மூன்றாம் தரமான, தரக்குறைவான, தகுதியற்ற, தலைக்கனம் பிடித்த ஒரு நபரையோ அல்லது ஒரு அரசியல் கட்சியோ நான் பார்த்ததில்லை. 


ஜெயலலிதாவை கூட எல்லோரும் தலைக்கனம் என்று சொல்லுவாங்க. ஆனால் ஜெயலலிதாவுக்கு என்று வேறு சில பண்புகள் இருந்தது. எம்ஜிஆர் உடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்வதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார் விஜய். எல்லாரும் சொல்லும் தற்குறி என்ற வார்த்தையை சொல்வது கஷ்டமாக இருக்கிறது. ஆனால் தற்குறி என்ற வார்த்தைக்கு தான் மட்டுமே தகுதியான நபராக விஜய் உள்ளார். தமிழக வெற்றுக் கழகம் என பேர் வந்துவிடும் என்றுநான் முதன் முதலில் விக்கிரவாண்டி கூட்டம் நடந்த போதே சொன்னேன்.

இன்னும் கை கால் கூட முளைக்காத குழந்தை 75 வருஷமாக ஒரு இயக்கமாக இருக்கும், இரண்டு மூன்று முறை ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற ஒரு கட்சியை பவள விழா பாப்பா என்றால் என்ன அர்த்தம். உனக்கு இன்னும் கையும் முளைக்கவில்லை காலும் முளைக்கவில்லை. ஒரு மூன்று வயது மூளை வளர்ச்சியற்ற குழந்தை என்று தவெகவை வைத்துக்கொள்ளுங்கள். மூன்று வயது குழந்தைக்கு என்ன மூளை வளர்ச்சி இருக்கும். சின்னப்பிள்ளை ஒன்னு அதிகமாக வசனம் பேசுற மாதிரி ஏஐல போடுறாங்க. அந்த மாதிரிதான் இருக்கு. உனக்கு அவர்களே பவள விழா பாப்பா என்றால் மூன்று வயது மூளை வளர்ச்சியற்ற அஞ்சலி குழந்தை.

கட்சி ஆரம்பிப்பதற்கும் இயக்கம் நடத்துவதற்கும் எல்லா உரிமையும் இருக்கு. அதில் மாற்று கருத்தே இல்லை. ஆனால் மாற்றாரை விமர்சிக்கும் போது அதற்கு ஒரு தகுதி இருக்கு. கவனிச்சீங்களா இல்லையான்னு தெரியவில்லை. கொள்கை தலைவர் என பெரியாரை விஜய் சொன்னார். அதன் பிற்பாடு அண்ணாவை சொன்னார். மூன்றாம் ஆண்டு விழாவில் அண்ணா படம் ஏன் இல்லை? யாராவது பார்த்தீங்களா? அண்ணா ஏன் காணாமல் போனார்?. இதுவரைக்கும் அண்ணாவை பற்றி பேசி, அண்ணா மாதிரி பண்ணனும் அப்படில்லாம் சொன்ன விஜய்க்கு இன்னைக்கு அண்ணாவினுடைய புகைப்படத்தை எடுக்க வேண்டிய கட்டாயம் என்ன? யாருடைய நிர்பந்தம்? யாருடைய அறிவுரை? இதை பொதுமக்களுக்கு வந்து சொல்லியே தீரணும்.

politics lawyers balu Election dmk tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe