Who is giving Delta to the people of Delta? AIADMK will not get those three anymore' - Vallam Basir says Photograph: (TVK)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Advertisment
இந்நிலையில் திராவிட வெற்றிக் கழகத்தின் முதன்மை செயலாளர் வல்லம் பசீர் தன்னுடைய அரசியல் பார்வைகளை நக்கீரனின் 'அரசியல் சடுகுடு' நிகழ்ச்சில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
நேற்று தஞ்சாவூரில் பேசிய விஜய் 'ஸ்டாலினுக்கு விஜய்க்கும் தான் போட்டி' என்று பேசியதோடு சில வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். விஜய்யின் நேற்றைய உரையை எப்படி பார்க்கிறீர்கள்?
நானும் டெல்டாக்காரன் தான். இப்போது இந்த நேர்காணலை டெல்டாவில் உட்கார்ந்து கொண்டே நான் பேசுகிறேன். டெல்டா பகுதிகளில் எங்கு பார்த்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆதரவு அலை தான் வீசிக்கொண்டே இருக்கிறது. இன்னொன்று தெரியுமா உங்களுக்கு 2021 சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்கள் மட்டும் தான் வெற்றி பெற முடிந்தது. தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் தஞ்சாவூரில் ஒரத்தநாடு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இப்போது திமுகவுக்கு வந்துவிட்டார். அவர் அன்னைக்கு அதிமுக கேண்டிடேட். அவர் மட்டும் தான் வெற்றி பெற்றார். தஞ்சாவூர்ல ஏனைய இடங்களில் எல்லாம் அதிமுக படுதோல்வி. திருவாரூரில் முன்னாள் அமைச்சர் காமராஜ், நன்னிலம் தொகுதியில் அவர் மட்டும் தான் வெற்றி பெற்றார். அதே மாதிரி நாகப்பட்டினம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேதாரண்யம் தொகுதியில் அவர் மட்டும் தான் வெற்றி பெற்றார். அப்போது டெல்டா மக்கள் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களித்தார்களோ அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்த அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. வரும் தேர்தலில் இந்த மூன்று இடங்களைக்கூட பெற அதிமுக முடியாது. அந்த அளவுக்கு 100 விழுக்காடு வெற்றியை தக்க வைக்க முடியும் என்கிற அந்த நிலையை உருவாக்கி இருக்கிறது இந்த திமுக அரசு. அப்போது டெல்டா மக்களுக்கு யார் டால்டா ஊத்துறது?
இங்கு அண்மையில் மழை பெய்யுது. ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை கொண்டு வந்து சொசைட்டில மக்கள் வச்சிட்டாங்க. மாதிரி நெல்களை ஒன்றிய அரசு அனுப்பவில்லை. அதனால் கொள்முதல் செய்ய முடியாமல் நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்க நிலை இருந்தது. உடனடியாக இந்த பிரச்சனை விவசாயிகளால் எழுப்பப்பட்ட உடனே, மூன்றாவது நாள்ல வந்து நிற்கிறார் துணை முதலமைச்சர். துறை அதிகாரிகளை அழைத்து பேசினார். உடனே தனியார் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களை உருவாக்குங்கள் என்று சொல்கிறார். தற்காலிக கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு எல்லா பகுதிகளிலும் 20 ஆயிரம், 30 ஆயிரம் மூட்டைகள் நெல்லை கொள்முதல் செய்கிற அளவுக்கு ஏற்பாடுகளை 24 மணி நேரத்தில் செய்து முடித்தார். விவசாயிகளுக்கு ஒரே மகிழ்ச்சி.
அதுமட்டுமில்லாமல் முன்னாள் அதிமுக ஆட்சியில் இது மாதிரி மழை வந்தபோது நெற்கதிர்கள் முளைத்து நிற்கும். அதிலிருந்து நெல்மணிகள் வந்திருக்கும் அந்த காட்சியை நாம்ம பார்ப்போம். இந்த ஆட்சியில் அப்படிப்பட்ட சூழல்கள் இல்லாத அளவுக்கு பாதுகாக்க வேண்டும் என்று சொல்லி மாதிரி நெல்லை அனுப்பாத ஒன்றிய அரசினுடைய நிலைமைக் கூட பொறுத்துக்கொண்டு இங்கு கொள்முதல் நிலையங்கள் முழுமையான முழு வீழ்ச்சியில் செயல்பட்டன. எத்தனை நாட்களில் எத்தனை மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கு, எத்தனை டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கு என்பதை வெளி அறிக்கைக்காகவே கொடுத்தார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் குறிப்பாக மாவட்ட ஆட்சியர் தஞ்சை பகுதியில் நேரடியாக அறிக்கை வெளியிட்டார். இப்படி டெல்டா மக்களுக்கு நன்மை பயக்கும் அரசு இது. இந்த அரசு இதைவிட சிறப்பாக டெல்டா மக்களை பாதுகாத்திருக்கிற அரசு ஒன்று இருக்கிறதா?
இப்போது மக்களிடம் 'டெல்டாகாரன் என்று சொல்லி டால்டா ஊற்றாதீர்கள்' என்கிறார் விஜய். முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கள் சொந்தக்காரர்தான், அவர்தான் எங்களுக்கு நன்மை பயக்கக்கூடிய முதலமைச்சர் என்று எங்கள் மாவட்டம் கருதுகிறது. அதில் என்ன உங்களுக்கு பிரச்சனை? சந்தேகம் இருந்தால் இந்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் டெல்டா பகுதியில் ஒரு இடத்திலாவது டெபாசிட் வாங்கி காட்டுங்கள். உண்மையிலேயே திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது அதிருப்தி இருக்கிறது என்று ஏற்றுக் கொள்கிறோம்.
Follow Us