தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
021
haleem Photograph: (politics)

வரும் தேர்தல் விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான போர் என்று விஜய் சொல்கிறாரே உண்மையா?

Advertisment
விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான போர் என்று விஜய் மட்டும் தான் சொல்லிட்டு இருக்கிறார். ஸ்டாலின் சொன்ன மாதிரி தெரியவில்லை. இதுவரை களத்தில் விஜய்யை பற்றி நேரடியாக முதல்வர் பேசவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் எங்களுக்கு எதிரியே பாஜகதான், ஒன்றிய அரசுதான், அமித்ஷா தான் என்று ஸ்டாலின் சொல்லி வருகிறார். விஜய்க்கு இது புரிய வாய்ப்பில்லை. தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கிற விஷயம்தான் இந்த சட்டமன்ற தேர்தல். இப்போது இருக்கின்ற இந்தியா கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கும் தான் நடக்கிறது சட்டமன்ற தேர்தல். எடப்பாடியை பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. எடப்பாடியை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் அமித்ஷா, மோடியை பற்றித்தான் பேச வேண்டும்.
இது என்டிஏ கூட்டணிக்கும் திமுகவுக்குமான ஒரு யுத்தம். இதில் எங்கே விஜய் வருகிறார். விஜய் புதுசாக கட்சி ஆரம்பிச்சிருக்கார். அவர் இப்போதுதான் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கப் போகிறார். கட்சி ஆரம்பித்து மூன்றாவது வருஷம். அவரை பேசுவதற்கு என்ன இருக்கு? அவர் ஏதாவது திமுகவோடு முரண்பட்டு பிரச்சனைகள் ஓடிட்டு இருக்கிறதா? திமுக பாஜகவோடு ஏன் முரண்படுகிறது. தமிழகத்தை ஒன்றிய அரசு எவ்வளவு வஞ்சிக்கிறது. இதைத்தான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.  இந்த ஒன்றிய அரசு தொடக்க கல்விக்கான நிதியை தரவில்லை. நிதியை தராதற்கு காரணம் என்ன? நீங்க மும்மொழி கொள்கையில் கையெழுத்திட வேண்டும். எல்லா மாநிலங்களும் கையெழுத்து போட்டுவிட்டார்கள் தமிழ்நாடு மட்டும் முரண்டு பிடிக்கிறீங்க என்று மத்திய கல்வி அமைச்சர் சொன்னார்.
Advertisment
தமிழ்நாடு சைன் பண்ணிவிட்டால் உங்களுக்கு பணத்தை கொடுத்துடுவோம் என்று மத்திய அரசு சொல்கிறது. அப்படி என்றால் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு பணம் என்று சொல்லும் பொழுது பணமே தேவையில்லை நீங்க பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் நாங்கள் கையெழுத்து போட மாட்டோம் அப்படிங்கற இடத்தில் தமிழக அரசு இருக்கிறது. மொழிக் கொள்கை பிரச்சனை மூலம் எப்படி நெருக்கடி கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டுடைய அடிநாதமே இருமொழி கொள்கை தான். அதற்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். அதை நோக்கி சண்டை போட முதல்வர் முயல்வாரா? இல்ல விஜய்க்கு பதில் கொடுத்துக்கொண்டு  இருப்பாரா?
இரண்டாவது பல்வேறு திட்டங்கள், மெட்ரோவில் இருந்து எல்லா திட்டங்களையும் பாருங்கள் நிறுத்திட்டு இருக்காங்க. மதுரைக்கு மெட்ரோ கிடையாது. கோயம்புத்தூருக்கு மெட்ரோ இல்லை. பல்வேறு சலுகைகள் நிறுத்தப்பட்டிருக்கு. ஜிஎஸ்டி பணம் பெண்டிங். போட்டிப் போட்டு பிரச்சனை பண்ணி சிரமப்பட்டு வாங்கிட்டு இருக்காங்க. அப்போது யாருடன்  யுத்தம் பண்ணுவாங்க? உங்களுக்கு எனக்கும் உங்களுக்கும் யுத்தம் என்றால் அதற்கான காரணம் இருக்கணும். காரணமே இல்லையே..