தமிழகத்தையே உலுக்கிய மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக அஜித்குமார்  கொலை வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நிகிதா என்ற பெண் கொடுத்த நகைத்திருட்டு புகாரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கண்காணிப்பின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

மற்றொருபுறம் கைது செய்யப்பட்ட தனிப்படை காவலர்கள் 5 பேரும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை நேற்று (04.02.2026) நடைபெற்றது. இதில், “இந்த சம்பவம் காவல் மரணம் ஆகும். நிகிதா கொடுத்த நகைத் திருட்டு புகார் முற்றிலும் பொய்” என சிபிஐ தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீமதி தரப்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

Advertisment

அதில், “ஒன்றுமே இல்லாத ஒரு வழக்கில் ஒருவரை அடித்தே கொன்றிருக்கிறார்கள். பொய் புகார் கொடுத்த நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்ற போலீசாருக்கு படம் புகட்டியே ஆக வேண்டும். காவல்துறையின் செயலை பார்த்தால் மனசு பதறுகிறது. யாராக இருந்தாலும் இந்த வழக்கு முடியும் வரை சிறையிலேயே இருக்கட்டும்” என நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்திருந்தார். அதோடு நிகிதா கொடுத்த பொய் புகார் குறித்த அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிபிஐ கொடுத்த உத்திரவாதத்தை அடுத்து இந்த வழக்கு பிப்.17 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

250
'Who is behind Nikitha...' - Ajith Kumar's first question Photograph: (cbi)
Advertisment

அஜித்குமார் குடும்பத்தின் தரப்பு வழக்கறிஞர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''நடந்த நிகழ்வுகளை எல்லாரும் கவனிச்சிருப்பீங்க. நேற்று மிக முக்கியமான ஒரு உத்தரவை நீதிபதி ஸ்ரீமதி கொடுத்துள்ளார். 17ஆம் தேதிக்குள் அஜித்குமார் நகை திருடினாரா இல்லையா? இது காவல் மரணமா இல்லையா? இதில் ஈடுபட்ட இன்னும் இருக்கக்கூடிய உயர் அதிகாரிகள் யார் யார்? முன்விரோதம் இருக்கிறதா? என்று ஒரு ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் ஃபைல் பண்ண சொல்லிருக்காங்க. 

இதுவரைக்கும் சிபிஐ ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்ஸ் மூடி, முத்திரையிட்ட கவரில் தான் கொடுத்துட்டு இருந்தாங்க. விக்டிம் ஃபேமிலிக்கு கூட அங்க என்ன நடந்ததுன்னு தெரியாது. நாங்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அந்த வழக்கு கோப்புகளை எடுத்த பின்னாடிதான் எங்களுக்கே என்ன நடக்குது என்ற விவரங்கள் எங்களுக்கு தெரியும். ஆனால் நேற்று சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்  நீதிபதி முன்னிலையில் இதுவரைக்கும் என்ன நடந்திருக்கிறது என்பதை வாய்மொழியாக தாக்கல் பண்ணி இருக்காங்க. எழுத்து மூலமாக தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுத்திருக்காங்க. நாங்கள் இத்தனை நாள் காத்திருந்தது இந்த கொலை வழக்கில் தண்டனை கிடைக்க வேண்டும். இந்த கொலையை யார் யாரெல்லாம் செய்தார்கள்?எதற்காக செய்தார்கள்? ஈடுபட்ட உயர் அதிகாரிகள் யார் யார்? இன்னும்  காவல்துறை தவிர மற்ற அதிகாரிகள் யாரும் ஈடுபட்டிருக்காங்களா அப்படின்றத விசாரிக்க வேண்டும்.

அஜித் ஒருவேளை திருடி இருப்பாரோ அப்படின்னு சந்தேகம் கூட இன்னும் நிறைய பேருக்கு இருந்திருக்கலாம். அஜித் திருடவில்லை என்பதை சிபிஐயே விசாரித்து 90 பக்கம் அடங்கக்கூடிய ஒரு குற்றப்பத்திரிக்கை ரெடி பண்ணி இருக்கறதாவும் அதை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் பண்ண இருக்கிறதாவும்  சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்றத்தில் அறிவிச்சிருக்காங்க.

இதில் நிகிதா கொடுத்த புகாரே பொய் என்ற நிலையில் எப்படி இவ்வளவு சீரியஸா நடவடிக்கை எடுத்தாங்க இதுதான் எங்களுடைய முதல் கேள்வி. இந்த கேள்விக்கு எங்களுக்கு இன்னும் விடை தெரியவில்லை. இது மக்களுக்கும் தெரிய வேண்டும். இந்த குடும்பத்துக்கும் தெரிய வேண்டும். ஏன் இந்த உலகத்துக்கே தெரிய வேண்டும். ஏன் நிகிதா பொய் புகார் அளித்தும் ஒரு சாதாரண ஒரு குற்ற வழக்கில் இவ்வளவு பெரிய நடவடிக்கை ஏன் எடுத்தாங்க? அப்போ இதுக்கு பின்னாடி இருக்க டிஎஸ்பிக்கு மேல இருக்கக்கூடிய நபர்கள் யார் அப்படின்றத விசாரிச்சு அந்த அறிக்கையை தாக்கல் பண்ண வேண்டும் என  சிபிஐ தரப்புக்கு நாங்கள் குடும்பத்தினர் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்'' என்றார்.

252
police Photograph: (cbi)

இதேபோல் இன்னொரு பின்னணி கொண்ட வழக்குதான் சாத்தான்குளம் வழக்கு. கடந்த 2020 ஆண்டு கொரோனா காலகட்டத்தில் செல்போன் கடை உரிமையாளர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ்  போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தற்போது வரை விசாரணையில் உள்ளது. இந்த வழக்கிலும் சிபிஐ 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்  தனது சாட்சியாக மதுரையைச்  சேர்ந்த மருத்துவர் செங்குட்டுவன் என்பவரை விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி வழக்கு விசாரணையின் போது வந்த மருத்துவர் செங்குட்டுவன் யாரிடமும் சொல்லாமல்  திடீரென வெளியே சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த இரண்டு காவல் கஸ்டடி  கொலை வழக்கில் விரைவில் தீர்ப்பு கிடைக்கும் என்ற எதிர்ப்பு எழுந்துள்ளது.