Advertisment

' வழி தவறலா... வழி காட்டுதலா...' உலகை உற்று நோக்க வைத்த ஒன்றை பென்குயின்

226

'Whether it's a mistake...or a guide...' The penguin is the one who made the world look closely Photograph: (OCEAN)

'இயல்புக்கு மீறிய எதுவுமே எதிர்பாராத முடிவை தரும் என்பதுதான் இயல்பு' என ரீவைண்ட் செய்யப்பட்டு வருகிறது ஒற்றை பென்குயினின் 40 நொடிகள் கொண்ட வீடியோ. வெள்ளை மாளிகை  வரை எதிரொலித்திருக்கும் இந்த வீடியோ தான் இன்றைய ட்ரென்டிங்கும் கூட

Advertisment

எப்போதுமோ கூட்டமாக இரைதேடும் இணக்கம் உயிரினங்களிடையே அதிகம். அதிலும் கடலிலிலும், கடலை ஒட்டியும் வாழும் உயிரினங்களுக்கு ஒற்றுமை உணர்வு கொஞ்சம் அதிகம் தான். அதில் குறிப்பிடத்தக்கவையாக  டால்பின்களும், பென்குயின்களும் உள்ளன.

Advertisment

ஜெர்மனை சேர்ந்த புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குனரான வெர்னர் ஹெர்சாக் என்பவர் கடந்த 2007 ஆண்டு வெளியிட்ட 'Encounters at the End of the World' என்ற ஆவணப்படத்தின் சிறிய துண்டு காட்சிதான் அது. கடுமையான சூழ்நிலை மாற்றங்களுக்கு ஆளாகிவரும் அண்டார்டிகா பகுதியில் கடந்த 2005-06 காலகட்டத்தில் ஒரு பென்குயின் கூட்டம் உணவு, நீர் உள்ள கடற்பரப்பைத் தேடி கூட்டமாக செல்ல, ஒரே ஒரு பென்குயின் மட்டும் யாரும் எதிர்பார்க்காதபடி  கூட்டத்தில்  இருந்து பிரிந்து பனி மூடிய நிலப்பரப்பு மற்றும் மலைகளை நோக்கித் தனியாக நடந்தது. 

இது தன்னையறியாமலேயே பென்குயின் எடுத்த முடிவா அல்லது விரக்தியின் உச்சத்தில் எடுத்த தற்கொலை முடிவா என யூகிக்க முடியாத அளவிற்கு அந்த பென்குயினின் நடத்தை இருந்தது. 'ஹேய் அங்கே போகாதே உன் வாழ்க்கை முடிந்துவிடும். போய் உன் கூட்டத்தோடு சேர்ந்துகொள்' என அந்த வீடியோவை பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் கரிசனத்துடன் மனதிற்குள் வேண்டிக்கொள்ளும் அளவிற்கு இறுக்கமாக அந்த காட்சி இடம்பெற்றுள்ளது. அருகில் உள்ள கடலை விட்டுவிட்டு 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனி மலையை நோக்கிய அந்த பென்குயினின் பயணம், ஒரு பரந்து விரிந்த வெள்ளை நிலப்பரப்பில் ஒரு கருப்பு புள்ளியாக மறைகிறது.

இது பென்குயினின் தவறான முடிவு என்ற இறுக்க உணர்வை தரும் அதே நேரத்தில் அசாதாரணமான, விவரிக்க முடியாத பென்குயினின் இந்த முடிவு தனித்து விடப்பட்ட நிலையிலும் மன உறுதியுடன் நடக்கும் செயலாகவும் பார்க்கப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினரை தொற்றிக்கொண்டிருக்கும் மன அழுத்தம், அர்த்தமற்ற தேடல், பணிச்சுமை, தனிமை உணர்வு போன்றவற்றால் ஏற்படும் 'எங்காவது ஓடி போட்டியிடலானு இருக்கு' என்ற உச்சபட்ச எண்ணத்தை முழுமையாக அப்படியே பிரதிபலிப்பளித்தால் இதனை Nihilist Penguin என பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.

227
'Whether it's a mistake...or a guide...' The penguin is the one who made the world look closely Photograph: (POST)

கிரீன்லாந்து நோக்கி டொனால்ட் டிரம்ப் அந்த பென்குயினுடன் நடந்து செல்வது போன்ற ஒரு ஏஐ படத்தை வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதேநேரம் நீலிஸ்ட் பென்குயினைக் காப்பாற்ற ஐரோப்பியர்கள் துருவக் கரடிகளால் டிரம்ப் மீது எதிர் தாக்குதல் நடத்தி  பென்குயினை பத்திரமாக மீட்பது போன்ற ஒரு ஏஐ காட்சியும் வெளியாகி உள்ளது. 

antarctica Challenge humanity life life truth social media penguin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe