Advertisment

''இதுவரை சோபிக்காத எஜெக்ட்டர்ஸ்... இரட்டை இலை இருந்தும் என்ன பயன்?''-விளாசிய மதிமாறன்

336

What's the use of having irattai ilai ?'' - Madhimaran Photograph: (politics)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் திராவிட இயக்க எழுத்தாளரும், பேச்சாளருமான மதிமாறன் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.

Advertisment
313
madhimaran Photograph: (politics)

ஓபிஎஸ் மீது அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி பாராமுகம் காட்டுவது ஏன்? 

பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் மோடி மற்றும் அமித்ஷா செயல்பாட்டின் பிரகாரம் தான் ஆட்சி நடத்தினார்கள். அதனால் நீங்கள் வெளியே இருந்து பார்ப்பது சரியான விஷயம் கிடையாது. அதிமுகவிடம் ஒரு கொள்கையோ கோட்பாடோ எதுவும் கிடையாது. ஒரு பிழைப்புவாத அடிப்படையில் தான் செயல்படுகிறார்கள். இரட்டை இலை ஒன்னு தான் அதிமுகவிடம் இருக்கு. இரட்டை இலைக்கு ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி இருக்கிறது. அந்த இரட்டை இலை இருந்தும்தான் போன 2021 தேர்தலில் தோற்றார்கள். 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் தோற்றார்கள்.  

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் தோற்றார்கள். பின்னர் உள்ளாட்சியில் தோற்றார்கள். இடைத்தேர்தலில் தோற்றார்கள். இவ்வளவு வாய்ப்புகளையும் இரட்டை இலையை வச்சு தோற்றுவிட்டு ''இரட்டை இலை எனும் பெரிய சக்தி இருக்கு... பெரிய சக்தி இருக்கு...'' என சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது. அதிமுக கடந்த 10 வருடத்தில் எதில் வெற்றி பெற்றுள்ளது. 2019-ல் டிடிவி எல்லாம் சேர்ந்து ஒன்றாக தான் இருந்தார்கள். பெரிய பவர்புல்லாதான் இருந்தீங்க என்ன பண்ணீங்க?  


எது சொன்னாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்கிறார்கள். பின்னர் ஏன் அதிமுக, 'டிடிவி எல்லாம் எங்களுக்கு ஒரு எதிரியே இல்லை' என்று ஏன் சொல்றீங்க? நீங்கதான சொன்னீங்க டிடிவி எல்லாம் ஒரு எதிரியே இல்லை என்று சொன்னீங்க. இப்போது சேர்த்துக் கொண்டது உண்மையா? அல்லது பிரிந்து இருந்தது உண்மையா? அது உண்மையா இது உண்மையா? அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், டிடிவி, சசிகலா என் யாரும்மே இதுவரை ஒரு சக்தியாக சோபிக்கவில்லை. ஓபிஎஸ் வெளியே போயி ஓட்ட பிரிச்சு எவ்வளவு ஓட்டு வாங்கினார்? அதை முதலில் சொல்லுங்க.

ஓபிஎஸ் ஓட்டு வாங்கி இருந்தால் அவருக்கு பாஜக கூட்டணியில் அவர் பேச்சுக்கு ஒரு மரியாதை இருந்திருக்கும். ஓபிஎஸ்க்கும் ஒரு மரியாதை இருந்திருக்கும். தனியாக நின்று ஓபிஎஸ் அதிக ஓட்டுகளை வாங்கி இருந்தால் இன்னைக்கு  இபிஎஸ் விடுவாரா? உடனே கூப்பிட்டிருப்பார். ஆனால் ஓபிஎஸ் எல்லாம் நமது வெற்றியை அல்லது தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இல்லை என்று எடப்பாடிக்கு தெரிந்துவிட்டது. அதனால்தான் ஓபிஎஸ்-ஐ எடப்பாடி சீண்டவே இல்லை.

T.T.V sasikala ops admk edappaadi palanisamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe