Advertisment

'முதல்வர் வேட்பாளர் எல்லாம் பின்னாடி பார்த்துக் கொள்ளலாம்'-அக்செப்டன்ஸ் கொடுத்த அமித்ஷா, மோடி

246

'We can look at the CM candidate from behind' - Amit Shah, Modi give a nod Photograph: (admk)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

Advertisment

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள்குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment
236
'Dharma Yuddha' is the reason for the OPS situation - explains Pudumadam Haleem Photograph: (ops)

பாஜக-அதிமுகவின் என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பகிர்வு எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

60 முதல் 70 இடங்களை எங்களிடம் கொடுத்துடுங்க. நீங்கள் நினைக்கிற இடத்தில் நில்லுங்கள். மற்றவர்கள் எல்லாம் பாஜக உடைய தாமரை சின்னத்தில் நிற்பார்கள் என பாஜக நினைப்பதாக செய்தியும் வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தை அதிகப்படுத்தி அதிக எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும் என்று பாஜக கணக்கு போடுகிறது.

150 இடங்களை அதிமுக வைத்துக்கொள்ளட்டும். அதில் அதிமுக மெஜாரிட்டி ஜெயிப்பதாக இருந்தால் ஜெயிக்கட்டும். இல்லை என்றாலும் கூட்டணி ஆட்சிதான். அதனால் தான் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று தினகரனிடம் பத்திரிக்கையாளர் கேட்டபோது ''அதுதான் உங்களுக்கு தெரியுமே'' என்றார். அப்போது எவர் வாயிலும் எடப்பாடிதான் முதலமைச்சர் என்ற வார்த்தை வரவில்லை. செங்கல்பட்டில் நடந்த என்டிஏ பொதுக் கூட்டத்திற்கு வந்த பிரதமர் மோடி கூட, என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி' என்று கூட சொல்லவில்லை.

'என்டிஏ கூட்டணி ஆட்சி' என்பதோடு நிற்கிறார்கள். முதல்வர் வேட்பாளர் என்பதையெல்லாம் பின்னாடி பார்த்துக் கொள்ளலாம் என்ற இடத்திற்கு நகர்ந்து விட்டார்கள். கிட்டத்தட்ட இதுகுறித்த முடிவு எல்லாமே மோடி கைக்கும், அமித்ஷா கைக்கும் போயிடுச்சு.  எடப்பாடி பழனிசாமியிடம் எந்தவொரு ஆத்தென்டிகேஷனும் கிடையாது. அவரைப் பொறுத்தவரை அவர் ஒரு  என்டிஏ  கூட்டணியின் அங்கம். அவ்வளவுதான். அதிமுக தலைமையில் நடக்கும் கூட்டணி இல்லை என்டிஏவுடைய கூட்டணி அவ்வளவுதான். அந்த இடத்திற்கு நகர்ந்து விட்டார்கள். அதை இன்னைக்கு எல்லாரும் ஏற்றுக்கொண்டார்கள்.

இது என்டிஏ கூட்டணி ஆட்சிதான் என அக்செப்ட் பண்ணிக்கிட்டாங்க. நாம் பாஜகவை சார்ந்து தான் நிற்கிறோம் என அக்செப்ட் பண்ணிக்கிட்டாங்க. இந்த அக்செப்டன்ஸை கொடுப்பதற்கு அமித்ஷா, மோடி மற்ற தலைவர்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக காய் நகர்த்தப்பட்டு இன்னைக்கு இந்த நிலைக்கு கொண்டு வந்துட்டாங்க. இன்னும் பாருங்க இந்த தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பிறகு பிரச்சார மேடைகளில் எப்படி பேசுறாங்கன்னு பாருங்க. பிரச்சார மேடைகளில் 'எடப்பாடி முதலமைச்சர்' என்ற பேச்சே வராது. என்டிஏ கூட்டணி ஆட்சி, பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி என வந்துவிடும்.

admk amithshah b.j.p edappaadipalanisamy modi nda alliance
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe