Advertisment

வாணியம்பாடியில் 'தளபதி அறிவாலயம்'-வியக்கவைக்கும் வி.எஸ்.ஞானவேலன்

353

'We built the 'Thalapathy Arivalayam' right then and there' - V.S. Gnanavelan shares his experience Photograph: (dmk)

தமிழகத்தில் விரைவில் 2026 சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கட்சி தலைமைகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வரும் அதேவேளையில் மறுபுறம் உள்ளூர்களில் உள்ள அரசியல் நிலவரங்களும் வேகமெடுத்துள்ளது. அதனை வெளிக்கொணரும் நக்கீரன் டிவியின் புதிய நிகழ்ச்சி தான் 'லோக்கல் பாலிடிக்ஸ்'

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா, ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.ஞானவேலன். திமுகவின் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், ஒன்றிய கழக பொறுப்பாளர்,  ஒன்றிய கழக செயலாளர் என கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு அவருடைய சிறிய கிராமத்தில் 'தளபதி அறிவாலயம்' என்ற ஒன்றை உருவாக்கி, அதனை அப்போதைய திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனை வைத்து திறந்துள்ளார். நக்கீரன் டிவியில் ஒளிபரப்பாகும் 'லோக்கல் பாலிடிக்ஸ்' தொடருக்காக வி.எஸ்.ஞானவேலனை சந்தித்து கலந்துரையாடினோம்.

Advertisment

எம்.டெக் படித்து கல்வியாளராக உள்ள நீங்கள் எப்படி அரசியலை தேர்ந்தெடுத்தீங்க?

''பொதுவாக நான் கல்லூரி காலகட்டத்தில் படிச்சிட்டு இருக்கும்போது திமுக என்ற இந்த இயக்கத்தின் மேல் ஒரு பெரிய ஈடுபாடுவந்தது. நான் 2004 ஆம் ஆண்டு ஈரோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில ஒரு பிடெக் கிராஜுவேஷன். அப்போது திமுக தலைவர் கலைஞர் ஒரு மீட்டிங்கிற்கு வந்தார். முக்கியமான ஒரு பீரியடை கட்டடிச்சிட்டு அவரோட பேச்சை கேட்பதற்காக போய் நின்ற ஆட்களில் நானும் ஒருவன். அந்த அளவுக்கு அரசியல் ஈடுபாடு நிறைய இருந்தது. அதன்பிறகு  நிறைய ஆபர்ஸ் எல்லாம் வந்தது. பிராக்டிகலாகவே ஒரு பிடெக் ஐ.டி, எம்டெக் ஐ.டி கிராஜுவேட் என்றால் ஒரு சாப்ட்வேர் துறையிலோ அல்லது வேறு ஏதாவது ஒயிட் கலர் ப்ரொபஷன்தான் தேர்ந்தெடுப்பாங்க. அதுதான் நேச்சர். ஆனால் எனக்கு ஆரம்ப காலத்தில் பள்ளி, கல்லூரி சமயத்தில் இருந்தே அரசியல் கட்சி மேல் ஒரு பெரிய ஈடுபாடு.

பொதுவாழ்க்கைக்கு வந்து எப்படியாவது ஷைன் ஆக வேண்டும். சர்வீஸில் முதன்மையான இடத்திற்கு வர வேண்டும் என்ற ஈடுபாடு பள்ளி, கல்லூரி காலத்தில் இருந்தே இருந்ததனால் அரசியலை தேர்ந்தெடுத்தேன். என் கூட படிச்ச நண்பர்கள் இன்னைக்கு பெல்ஜியம், கனடா யுஎஸ்ஏ என எல்லாருமே பல நாடுகளில் இருக்கிறார்கள். தற்போது வரை தொடர்பில் தான் இருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் அவர்கள் என்னோட ரூம் மேட்ஸா இருக்கும்போது 'அரசியலை போய் எப்படி தேர்ந்தெடுத்தாய்' என்று கேட்டார்கள். ஆனால் அதையும் மீறி நமக்கு கட்சி மேல் ஒரு பெரிய ஈடுபாடு இருந்தது. இன்னொன்று மாசம் ஒன்னாம் தேதி ஆனால் சம்பளம் என்ற வட்டத்துக்குள் இல்லாமல் பொதுவாழ்க்கையில இருக்கணும். நம்மளோட வருமானமாக இருக்கட்டும் தொழிலாக இருக்கட்டும் சர்வீஸ் எதுவாக இருந்தாலும் அதை நான் தான் நிர்ணயம் பண்ணனும் என்ற ஒரு பிடிவாதம் எனக்கு அப்போது இருந்தே இருந்தது. அரசியலாக இருக்கட்டும், தொழிலாக இருக்கட்டும் எல்லாமே ஒரு பிளானிங்கோடுதான் வந்திருக்கிறோம்.

2015 ஆம் ஆண்டு 'தளபதி அறிவாலயம்' கட்டி அதனை பேராசிரியரை வைத்து திறந்து வைத்தோம். வேலூர் பாராளுமன்ற தேர்தலுக்கு எங்கள் மாவட்டச் செயலாளாரிடம் நான் பிடிவாதமாக 'மு.க.ஸ்டாலின் மீட்டிங் நடத்தும் பொறுப்பை எனக்கு கொடுங்க நான் மதனாஞ்சேரியில் சிறப்பான நடத்தி காட்டுகிறேன்' எனக் கேட்டு வாங்கினேன். ஸ்டாலின் இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் பகுதியில் இரண்டு இடம்தான் கொடுத்திருந்தாங்க. அதில் பிடிவாதமாக  வாணியம்பாடி பக்கத்தில் உள்ள மதனாஞ்சேரியில் அந்த பிரச்சாரம் வேண்டும் எனச் சொல்லி, தலைவர் மு.க.ஸ்டாலினை இந்த கிராமப் பகுதிக்கு வரவழைத்தோம். 12000-ல் இருந்து 15000 பேர் பெருந்திரளான மக்களை கூட்டினேன். தலைவர் பேசிய உரை இப்போதும் இருக்கிறது. 'இது சாதாரண கிராமத்தில் நடக்கும் பிரச்சாரம் என நான் வந்தேன். இது என்ன ஒரு மாநாடு போல நடத்தி காட்டி இருக்கிறார் ஞானவேலன்'' என்றார். அந்த அளவுக்கு  எலக்சன் வேலை செய்தேன். அந்த தேர்தலில் ஒரு பிரம்மாண்ட வெற்றி கிடைத்தது.

dmk Election m.k.stalin politics vaniyambadi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe