தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/26/021-2026-02-26-14-39-32.jpg)
தவெக தலைவர் விஜய் எங்கே போட்டியிட வாய்ப்புள்ளது?
வி-ல் ஆரம்பிப்பதால் விருக்கம்பாக்கத்தை ஆரம்பத்தில் சொன்னார்கள், அதன்பிறகு சோழிங்கநல்லூர் என்று சொன்னார்கள். அது நல்ல சாய்ஸ்தான். ஏனென்றால் சோழிங்கநல்லூரில் தான் பனையூர் இருக்கிறது. நீங்கள் தொகுதி பக்கம் போகவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டே வராது. காரணம் தொகுதிக்கு உள்ளே தான் விஜய்யின் வீடு இருக்கிறது.
ஆனாலும் விஜய் ஏன் அந்த தொகுதிகளை தேர்தெடுக்கவில்லை என்றால் அங்கு அதிமுகவும் திமுகவும் பலமாக இருக்கும் என்ற ஒரு அச்சம் விஜய்க்கு இருக்கிறது. பெரம்பூரில் சிறுபான்மை வாக்குகள் இருக்கிறது. கிறிஸ்துவ மக்கள் வாக்கே 12லிருந்து 15 விழுக்காடு இருக்கிறது என்கிறார்கள். இஸ்லாமியர்கள் வாக்கு 10 விழுக்காடு இருக்கிறது. அதாவது சாதாரண சாமானிய மக்கள், உழைக்கும் வர்க்கத்தினர் பெரம்பூரில் அதிகம் இருக்கிறார்கள்.பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட்டால் ஸ்டார் தொகுதியாக மாறும். அதைவிட இன்னொன்னு இருக்கு தெரியுமா? பெரம்பூர் கொளத்தூரை ஒட்டிய தொகுதி. எதற்கு பெரம்பூரில் போட்டி போடுறீங்க கொளத்தூரிலேயே போட்டியிட வேண்டியதுதானே. இன்னும் வேல்யூ நல்லா இருக்குமே. எனக்கும் ஸ்டாலினுக்கும் தான் போட்டி என்று சொல்கிற விஜய் ஒரு பெரிய ஹீரோயிசம் காமிக்கிற ஆளாக இருந்தால் நியாயமாக கொளத்தூரில் போட்டிடணும். அப்போது தான் அது நியாயமான போட்டி.
விஜய் வந்து கொளத்தூரில் போட்டியிடுவாரா? நீங்க எதற்கு கொளத்தூரை ஒட்டி இருக்கின்ற பெரம்பூரில் போட்டிடுறீங்க. நடுக்கடலில் போய் மீன் பிடிங்க. நீங்க ஏன் கடல் ஓரத்துல மீன் பிடிக்கிறீங்க என்ன காரணம்? விஜய் கட்சிக்கு வேலை செய்வதற்கு ஆட்கள் வேண்டும். ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன் சமீபத்தில் பனையூரில் தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் வெளியிட்டார்கள். ஒரு விண்ணப்பம் 100 ரூபாய் 50 ஆயிரம் விருப்பமனு விற்றதாக பரபரப்பாக பேசுனாங்க. 50 ஆயிரம் விருப்பமனு எல்லாம் எந்த கட்சியிலும் வாங்கிட்டு போக மாட்டாங்க. ஆனால் திருப்பி எத்தனை மனு வந்திருக்கு என்று பார்த்தால் 500 மனுக்கள் கூட இல்லை என்கிறார்கள்.
ஒரு தொகுதிக்கு ரெண்டு பேர் கூட கொடுக்கவில்லை. இதுதான் நிலைமை. குறைந்தபட்சம் நாம் தமிழர் 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திட்டாங்க. தமிழக மக்களை வெறும் பில்டப் பண்ணி சினிமா மாதிரி ஏமாற்ற முடியாது. நீங்க கிட்டத்தட்ட பாருங்கள் பாஜகவை பேச மாட்டேன், மோடியை பற்றி எதுவும் பேச மாட்டேன். அதிமுகவை தொட மாட்டேன். நான் ஸ்டாலினோட மட்டும் தான் எனக்கு போட்டி. ஸ்டாலினை மட்டும்தான் விமர்சிப்பேன் என்கிறார். கரூரில் என் மேல் பலி சுமத்தினார் என்கிறார் விஜய். உங்களை ஸ்டாலின் காப்பாற்றி பேசினார். இது ஒரு ஜிம்பலிக்கா அரசியல் தமிழ்நாட்டில் செல்லுபடி ஆகாது. விஜய்யை தொடர்ச்சியாக முதல்வர் தவிர்க்கிறார். விஜய்யையும் விஜய்யை பற்றி பேசுவதையோ முதல்வர் மட்டுமல்ல முக்கிய திமுக தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் யாரும் பேசுவதில்லை கவனித்து பார்த்தால் தெரியும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/26/392-2026-02-26-14-39-09.jpg)