Advertisment

'சங்கி பாலிடிக்ஸில் விஜய்யின் கள்ள மவுனம்'-கடுமையாக விமர்சித்த மதிமாறன்

324

madhimaaran Photograph: (politics)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் திராவிட இயக்க எழுத்தாளரும், பேச்சாளருமான மதிமாறன் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.

Advertisment

313
Is Vijay's side trying to complicate Jananayagan? - Madhimaran expresses doubts Photograph: (politics)

விஜய் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து வாய் திறக்காதது ஏன்?

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேச வேண்டிய அவசியம் இல்லை என விஜய் நினைக்கிறார். பாஜகவுக்கு எதிராகவும் பேசாமல் விஜய் இருக்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். பாஜகவுக்கு ஆதரவாகவும் விஜய் பேசவில்லை. பாஜகவிற்கு எதிராகவும் பேசவில்லை. விஜய்யுடைய திருப்பரங்குன்றம் ஸ்டாண்ட்டை எப்படிப் பார்க்க வேண்டும் என்றால், விஜய் பாஜகவுக்கு ஆதரவாகவும் பேசவில்லை எதிராகவும் பேசவில்லை. விஜய்யின்  நிலைப்பாடு என்பது முழுக்க முழுக்க பாஜக சார்ந்த ஒரு நிலைப்பாடு. அதில் வேற ஸ்டாண்ட் எடுத்தால் திமுக அரசுக்கு ஆதரவாக தான் விஜய் பேசி ஆகணும். இதில் திமுக ரோல் என்னவென்று நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும்.

திருப்பரங்குன்றம் விவகாரம் சங்கிகளுக்கும், அந்த சங்கிகள் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்குகே எதிரான ஒரு விஷயமாதான் கட்டமைத்தார்கள். அதற்கு முன்னாள் பாஜக நடத்திய முருகன் மாநாடு நடந்தது, தர்காவை வச்சுக்கிட்டு பாலிடிக்ஸ் செய்தது, போன ஆண்டு தர்கா- திருப்பரங்குன்றம் என்பதை விவாதமாக்கி அதை முஸ்லிம்- இந்து கலவரமாக உருவாக்கினார்கள். திமுக அரசு உள்ளே புகுந்து கோர்ட் சொன்னதுக்கு பிற்பாடும் கூட துணிச்சலாக அந்த பிரச்சனையை சங்கிகளுக்கும் திமுகவிற்குமான பிரச்னையாக மாற்றிவிட்டது.

இன்னைக்கு இஸ்லாமியர்கள் அதில் இல்லை. இப்போது என்ன ஆயிடுச்சு என்றால் முதலமைச்சர் துணிச்சலாக நடவடிக்கை எடுத்த பிற்பாடு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இந்து அமைப்புகள், சங்கிகளுக்கும் திமுகவுக்கும் இடையேயான பிரச்சனையாக திருப்பரங்குன்றம் விவகாரம் மாறிடுச்சு. இதில் முஸ்லிம்கள் சேவ் பண்ணப் பட்டு இருக்கிறார்கள். இது ரொம்ப ஒரு தீவிரமான இந்த அரசு எடுத்த மிக மிகச் சிறப்பான ஒரு நடவடிக்கை. விஜய் இதில் பேசினால் திமுக ஆதரவாக மாறும். எனவேதான் இந்த கள்ள மௌனம். 

dmk b.j.p politics Thiruparankundram tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe