Advertisment

'விஜயகாந்த் கொடுத்த மரியாதையை விஜய் கொடுக்கமாட்டார்'-திருச்சி சூர்யா சொன்ன பிளாஷ்பேக்

287

dmdk tvk Photograph: (politics)

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதேபோல் அதிமுக-பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன.

Advertisment

சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் தவெகவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளிலும் விருப்ப மனுக்களை பெற தவெக திட்டமிட்டு இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அண்மையில் வெளியிட்டிருந்தார். அதன்படி நேற்று 06/02/2026)  முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட இருக்கிறது.

Advertisment

அதிமுகவினரும் விஜய்யை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விஜய்யை விமர்சித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் சிலர் என அதிமுகவை சைலன்ட் கில்லிங்  செய்ததால் அதிமுக நேரடியாக விஜய்யை விமர்சிக்கும் நிலைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நக்கீரன் டிவியில் வெளியாகி வரும் 'சூடா ஸ்ட்ராங்கா' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  திருச்சி சூர்யா பல்வேறு அரசியல் பார்வைகளை பகிர்ந்துகொண்டார்.

286
trichy surya Photograph: (politics)

நடிகர்கள் அரசியலை எப்படி பார்க்கிறீர்கள்?

ஒரு அரசியல் தலைவர் என்பவர் எலிஜிபிள் ஆனா ஆளாக இருக்க வேண்டும். விஜயகாந்த் பொறுத்தவரைக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் அவருக்கு அரசியல் அச்சாரம். விஜயகாந்துக்கு அரசியல் வாடையே கிடையாது. நடிகர்கள் யார் யார் இதுவரைக்கும் அரசியல்ல ஜெயிச்சாங்க என்ற பேச்சு வந்தாலே எல்லோரும் உடனே எம்ஜிஆர் 1977ல் ஜெயிச்சிட்டார் என்று சொல்வார்கள். ஆனால் அது உடனே நடந்தது கிடையாது. எம்ஜிஆர் 15 வருஷம் அண்ணாவோட நெருங்கிப் பழகி தேர்தல் களத்தில் இருந்தார். அந்த அரசியல் அனுபவம், அண்ணாவிடம் பயிற்சி பெற்றார். கள நிலவரம் என்னவென்று தெரிந்துதான் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தார். விஜய்யை போல போன மாசம் வரைக்கும் படம் நடிச்சிட்டு இருந்தேன் பாஸ் அந்த படத்தையும் சென்சாரில் நிப்பாட்டிட்டாங்க. அதனால் இப்போது எலக்சன்ல நிற்கப் போறேன் பாஸ் என சொல்லிட்டு வந்தால் எல்லாம் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.

ஜெயலலிதாவுக்கும் அதேதான். அந்த அம்மா எம்ஜிஆர்கூட இருந்து அரசியல் களநிலவரம் காத்துக்கிட்டதாக இருந்தட்டும், அதுக்கப்புறம் பீல்டில் அரசியல் என்றால் என்னவென்று தெரிந்துகொண்டு படிப்படியா தெரிஞ்சுதான் வந்தாங்க. எல்லாருமே அப்படித்தான் வந்தார்கள். கலைஞரும் அண்ணாவுடன் இருந்த பயிற்சியில் தான் வந்தார். விஜயகாந்துக்கு அந்த திடீர் அரசியல் ஞானம் வந்ததுக்கு காரணம் ஒரு மூத்த அரசியல்வாதி உடைய அனுபவம்  அவருக்கு அட்வைஸாக இருந்தது. நல்லா ஞாபகப்படுத்தி பாருங்க, சட்ட சபையில ஜெயலலிதாவை பார்த்து நாக்கை துருத்திக்கொண்டு விஜயகாந்த் பேசும்போது பண்ருட்டியார் உக்காந்துகிட்டு விஜயகாந்த் கையை பிடிச்சஉடனே விஜயகாந்த் உக்கார்ந்துவிட்டார். அந்த சீனியருக்கு என்று கொடுக்க வேண்டிய மரியாதையை விஜயகாந்த் கொடுத்தார். அந்த ஒரு மரியாதை கண்டிப்பாக செங்கோட்டையனுக்கு விஜய் கொடுப்பாரா என்றால் கிடையாது.

vijayakanth dmdk politics tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe