Advertisment

'விஜய் அறியா பிள்ளையாகவே அரசியலில் தவழ்வார்'- காரணத்தை அடுக்கிய வல்லம் பசீர்

32

TVK Photograph: (VIJAY)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திராவிட வெற்றிக் கழகத்தின் முதன்மை செயலாளர் வல்லம் பசீர் தன்னுடைய அரசியல் பார்வைகளை நக்கீரனின் 'அரசியல் சடுகுடு' நிகழ்ச்சில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
30
VALLAM BASHEER Photograph: (POLITICS)
நேற்று தஞ்சாவூரில் பேசிய விஜய் 'ஸ்டாலினுக்கு  விஜய்க்கும் தான் போட்டி' என்று பேசியதோடு இரண்டு ஏக்கருக்கு குறைவாக இருக்கும் விவசாயிகள்  குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்போம். ஐந்து ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருப்போருக்கு பயிர் கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். விஜய்யின் நேற்றைய உரையை எப்படி பார்க்கிறீர்கள்?
Advertisment
ஏற்கனவே தமிழ்நாட்டில் கல்வி இலவசமாக்கபட்டிருகிறது. இன்றைக்கு நேற்றல்ல ஏறக்குறைய 35 ஆண்டு காலத்துக்கு முன்பாகவே இதற்கான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு கல்வி முழுவதும் இலவசம் என்ற நிலை உள்ளது. பிரைவேட் இன்ஸ்டிடியூஷன் போனா மட்டும் தான் காசு. கவர்மெண்ட் இன்ஸ்டிடியூஷனில் எங்கயாவது காசு வாங்குகிறார்களா? முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு உண்டான சலுகை தொகையை 10,000 ரூபாய் கூட்டி இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். நான் வந்து முதல் தலைமுறை பட்டதாரி. அமைச்சர் சிவசங்கர் அவர்கள் பிற்படுத்தப்பட்ட ஒரு நலத்துறைக்கு அமைச்சராக இருந்தார். அப்போது  ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். முதலமைச்சர் என்ன செய்தார் என்றால் ஒரு குடும்பத்தில் முதல்தலைமுறை பட்டதாரி என்றால் அண்ணன் மட்டும்தானா? தம்பி தங்கைகள் இல்லையா? அவர்களும் முதல்தலைமுறை பட்டதாரி தானே. எனக்கு மட்டுமல்ல எனக்கு அண்ணன் இருந்தால் அவருக்கும் சலுகை உண்டு. எனக்கு தம்பி இருந்தால் அவருக்கும் சலுகை உண்டு என்று சொல்லி ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். அந்த திட்டம் செயலாகி  நான்கரை வருடங்கள் ஆயிடுச்சு. இப்போது செயல்பாட்டில் இருக்கிறது. அப்போது நீங்கள் யாருக்கு கல்வியை இலவசமாக்க போறீங்க, கல்விக்கு யாருக்கு உதவி தரப்போறீங்க. முதலமைச்சர் பொறுப்பேற்றதற்கு பிறகு கல்விக்கான ஊக்க தொகையை அதிகப்படுத்தி இருக்கிறாரா இல்லையா? கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படுதா இல்லையா? இது ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் திட்டங்கள் தானே. நீங்க புதிதாக என்ன திட்டத்தை கொண்டு வரப்போறீங்க.
உதாரணமாக விஜய் சொல்கிறார் 500 ரேஷன் அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடையை நாங்கள் திறக்கப் போறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். மகிழ்ச்சி. பார்க்க நல்லாதான் இருக்கிறது. ரேஷன் கடைகளில் இப்பொழுதெல்லாம் எங்கேயாவது பொருட்கள் கிடைக்காமல் இருக்கிறதா? ரேஷன் கடையில் எங்கேயாவது கூட்டம் அதிகமாக இருக்கிறதா? என் வீடு அமைந்திருக்கும் இடத்திலிருந்து ஒரு மூன்றரை கிலோமீட்டரில் தான் விஜய் நேற்று பேசி இருக்கிறார். என் பகுதியில் இரண்டு ரேஷன் கடைகள் இருக்கிறது மொத்தமாக. நான் போகும்போது வரும்போது பார்க்கிறேன் எந்த ரேஷன் கடையிலும் கூட்டமே இல்லை. காரணம் போதுமான அளவுக்கு பொருட்களும் இருக்கிறது. போதுமான அளவுக்கு பணிகளும் அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எதற்கு இந்த 500 ரேஷன் அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடையை திறப்போம் என்பது. எங்காவது ரேஷன் கடையில் பொருள் இல்லாமல் மக்கள் திரும்பி போயிருக்கிறார்களா?  எங்கேயுமே கிடையாது. பின்னர் எதற்காக இந்த ரேஷன் கடைஅறிவிப்பு.
ஏற்கனவே 5000 ரேஷன் அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை வீதம் இருந்தது. அதைக் குறைத்து 2000 ரேஷன் கடைகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற நிலை வந்துவிட்டது. இப்போது ஆயிரம் ரேஷன் அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை, 800 ரேஷன் அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை என்கிற நிலையை ஏற்கனவே அரசு கொண்டு வந்துவிட்டது. இது தேவையே இல்லையே. ஏற்கனவே இருக்கிற ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும் நுகர்வோரினுடைய எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்பது தான் செய்தி. பலர் ரேஷன் கடைகளில் பொருள் வாங்குவது ஆள் இல்லை. இதுதான் எதார்த்தமான உண்மை. இப்படி இருக்கும்போது இது ஒரு கவர்ச்சிகரமான அறிவிப்பு என்று நினைத்து விஜய்க்கு யாரோ எழுதி கொடுத்திருக்கிறார்கள். அதை வந்து இங்கே பேசி இருக்கிறார். இதில் என்ன வியப்பு என்று கேட்டால் விஜய் அறிவித்திருக்கிற எல்லா அறிவிப்புகளும் ஏற்கனவே அமலில் இருக்கக்கூடிய திட்டங்களதான். ஏற்கனவே இருக்கக்கூடிய திட்டங்களை நீங்கள் புதிதாக வந்து நிறைவேற்றுவீர்கள் என்று சொன்னால் நீங்கள் எதற்காக இங்கே தேவைப்படுகிறீர்கள். உங்களுடைய தேவை இங்கு எங்கிருந்து எழுகிறது என்கிற கேள்வியை தான் நாம் விஜய்யை நோக்கி கேட்க வேண்டி இருக்கிறது. விஜய் அறியா பிள்ளையாகவே அரசியலில் தவழ்ந்து கொண்டிருக்கிறார். கடைசி வரை இப்படியே தேர்தலையும் முடித்து விடுவார் என்றுதான் நான் கருதுகிறேன்.
Mallai sathya politics dmk tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe