'Vijay, who will raise Seeman?' - Sangathamizan's concern Photograph: (tvk seeman)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிக திமுக கூட்டணிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில் விசிகவின் சங்கத்தமிழன் நக்கீரன் டிவியில் தன்னுடைய அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
விஜய்யிடம் இருக்கும் கும்பல் நம்ம சீமான் கும்பல் மாதிரியே தற்குறி கும்பல். அதற்கு இணையாக ஈடு கட்டுற மாதிரி இந்த கும்பலும் போய் இறங்கி இருக்கிறார்கள். அந்த தற்குறிகளை முழுமையாக நாங்கள் அரசியல்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஏனென்று கேட்டால் சீமான் செய்ததை முக்கியமாக எல்லோரும் கேட்க வேண்டும். திருமாவளவன் ஒரு வாரத்துக்கு முன்னாடி சொன்னார் 'இன்னைக்கு தந்தை பெரியாரை இழிவாக பேசுறாங்க. போகட்டும் என்று விட்டு வைத்தால் நாளைக்கு அம்பேத்கரை ஒரு மராட்டியன் என்று பேசுவார்கள்' என்று திருமாவளவன் வருங்காலங்களை உணர்ந்து சொல்லியுள்ளார்.
சீமான் போட்ட மாநாட்டில் அதை அப்படியே சொல்கிறார். அயோத்திதாச பண்டிதர் எவ்வளவு பெரிய ஆள் என்று சீமான் சொல்லித்தான் தெரியணுமா? யாருக்கும் தெரியாதா இந்த உலகத்தில். அயோத்திதாச பண்டிதர் என்ற ஒரு மாபெரும் அறிஞர் திராவிடம் என்ற சொல்லாடலை இந்த மண்ணுக்கு கொடுத்த போராளி. அயோத்திதாச பண்டிதரை விட அம்பேத்கர் பெரிய ஆளா? என்பது போன்று சீமான் பேசுகிறார். அம்பேத்கரை கொச்சைப்படுத்துவது போல் சீமான் பேசுகிறார். அப்போது சீமான் தற்குறியா இல்லையா? அதற்கு ஈடு இணையாக தவெக தற்குறி கும்பலும் கூட்டிக்கொண்டு திரிகிறது. இந்த தற்குறிகளை எல்லாம் அரசியல் படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதனால்தான் எங்க தலைவர் என்னை ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் போகச் சொல்லி இருக்கிறார்.
தவெக மற்றும் சீமானை வளர்த்து விடுவது யார் என்று கேட்டால் இந்த சோசியல் மீடியா மட்டுமல்ல. சோசியல் மீடியா உண்மையை பேசுகிறது. இந்த பெரிய பெரிய டிவிகாரங்க இருக்கிறார்கள். விஜய் இதோ குளித்துவிட்டார். இதோ குளித்து விட்ட பிறகு கதவை திறந்து விட்டார். வண்டியில் ஏறி விட்டார். இப்படி எல்லாம் போடுகிறார்கள். இதெல்லாம் எவ்வளவு ஒரு மோசமான ஒரு செயலாக இருக்கிறது. ஒரு தலைவன் என்றால் மக்கள் பிரச்சனைக்கு கருத்து சொல்ல வேண்டும். ஆனால் தொலைக்காட்சிகள் மக்களை திசை திருப்புறாங்க. மக்களை குழப்புகிறார்கள். அதை தொலைக்காட்சிகள் செய்ய விடக்கூடாது.
நான் சொல்கிறேன் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் தவெகவில் ஒருவர் கூட ஜெயிக்க முடியாது. அந்த கட்சியில் ஒரு பையனுக்கும் ஜெயிக்கிற வாய்ப்பு இல்லை. ஒரே ஒரு ஆள் ஜெயிப்பார். விஜய் மட்டும் ஜெயிப்பார். அது எப்படி என்றால் தற்குறி கும்பல் ஏரியாவில் திரிகிறார்கள். அதுக்குதான் தவெக எந்த இடத்தில் விஜய் போட்டியிடுவார் என்று செலக்ட் பண்றாங்களாம். எந்த இடத்தில் சாராயம் நிறைய இருக்கிறது. எந்த நேரத்தில் கள்ள டிக்கெட் ரொம்ப விற்கிறார்கள். எங்கெல்லாம் பைத்தியங்கள் அதிகமா இருக்கோ அங்க போய் நிற்போம் என்ற முடிவில் இருக்கிறார்கள்.
Follow Us