தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Advertisment
இந்நிலையில் திராவிட வெற்றிக் கழகத்தின் முதன்மை செயலாளர் வல்லம் பசீர் தன்னுடைய அரசியல் பார்வைகளை நக்கீரனின் 'அரசியல் சடுகுடு' நிகழ்ச்சில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
30
'Vijay speaks like Seeman' - Vallam Basir Photograph: (POLITICS)
நேற்று தஞ்சாவூரில் பேசிய விஜய் 'ஸ்டாலினுக்கு விஜய்க்கும் தான் போட்டி' என்று பேசியதோடு சில வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். விஜய்யின் நேற்றைய உரையை எப்படி பார்க்கிறீர்கள்?
ஏற்கனவே 5000 ரேஷன் அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை வீதம் இருந்தது. அதைக் குறைத்து 2000 ரேஷன் கடைகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற நிலை வந்துவிட்டது. இப்போது ஆயிரம் ரேஷன் அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை, 800 ரேஷன் அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை என்கிற நிலையை ஏற்கனவே அரசு கொண்டு வந்துவிட்டது. இது தேவையே இல்லையே. ஏற்கனவே இருக்கிற ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும் நுகர்வோரின் உடைய எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்பது தான் செய்தி. பலர் ரேஷன் கடைகளில் பொருள் வாங்குவது ஆள் இல்லை. இதுதான் எதார்த்தமான உண்மை. இப்படி இருக்கும்போது இது ஒரு கவர்ச்சிகரமான அறிவிப்பு என்று நினைத்து விஜய்க்கு யாரோ எழுதி கொடுத்திருக்கிறார்கள். அதை வந்து இங்கே பேசி இருக்கிறார். இதில் என்ன வியப்பு என்று கேட்டால் விஜய் அறிவித்திருக்கிற எல்லா அறிவிப்புகளும் ஏற்கனவே அமலில் இருக்கக்கூடிய திட்டங்களதான். ஏற்கனவே இருக்கக்கூடிய திட்டங்களை நீங்கள் புதிதாக வந்து நிறைவேற்றுவீர்கள் என்று சொன்னால் நீங்கள் எதற்காக இங்கே தேவைப்படுகிறீர்கள். உங்களுடைய தேவை இங்கு எங்கிருந்து எழுகிறது என்கிற கேள்வியை தான் நாம் விஜய்யை நோக்கி கேட்க வேண்டி இருக்கிறது. விஜய் அறியா பிள்ளையாகவே அரசியலில் தவழ்ந்து கொண்டிருக்கிறார். கடைசி வரை இப்படியே தேர்தலையும் முடித்து விடுவார் என்றுதான் நான் கருதுகிறேன்.
Advertisment
அதாவது 'டெல்டா காரனென்று டால்டா ஊற்றாதீர்கள் காதில்' என்கிறார் விஜய். நல்லா இருக்கு வசனம். பேசுவதற்கு நல்லா இருக்கிறது. இந்த சீமான் அடிக்கடி வசனம் பேசுவார். என்னவென்று கேட்டேன் என்றால்  'நீ சாப்ட்வேரில் வேலை செய்யலாம் ராஜா சாப்பிட்டு போய்தான் ராஜா வேலை செய்யணும்' அது மாதிரி எதுகை மோனையோட நல்லா இருக்கிறது. டெல்டா காரன் என்று சொல்லி டால்டா ஊற்றாதீர்கள் என்பது. டெல்டா பகுதி எத்தகைய வளர்ச்சியை பெற்றிருக்கிறது. இந்த ஆட்சியில் என்பதை பார்க்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப பூங்கா இரண்டு பூங்காக்களை கொண்டு வந்து இந்த டெல்டா பகுதிக்கு கொடுத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். அதை தாண்டி டெல்டா பகுதியில் தொழில் வளர்ச்சி. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று சொல்லி அறிவித்தாரே தவிர எடப்பாடி பழனிசாமி அந்த வேளான் நிலங்களை பாதுகாப்பதற்கு உண்டான எல்லா வேலைகளையும்  இந்த நான்கரை ஆண்டு காலத்தில் செய்தவர் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர். இந்த நான்கரை ஆண்டு காலத்தில் சர்க்கரை ஆலையில் நிலுவைத்தொகை எங்காவது இருக்கிறதா என்று விஜய்யை போய் ஒரு ஆய்வு நடத்த சொல்லுங்கள்.
விஜய் பேசிய திருமலை சமுத்திரம் பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் அருகாமை அமைந்திருக்கக்கூடிய குருங்குளம் சர்க்கரை ஆலை. அந்த சர்க்கரை ஆலையில ஏற்கனவே நிலுவைத்தொகை கரும்புக்கு எவ்வளவு இருந்தது? இப்போது கரும்பு விவசாயிகளுடைய நிலுவைத்தொகை எவ்வளவாக இருக்கிறது என்று விஜய்யை ஒரு ஆய்வு மேற்கொள்ள சொல்லுங்கள். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கரும்பு விவசாயிகளுக்கு கரும்பின் உடைய கொள்முதல் விலை எவ்வளவாக நிர்ணயித்தது அரசு. இந்த நான்கரை ஆண்டு காலத்தில் கரும்பு விவசாயிகள் உடைய நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? இல்லையா? அங்கு இருக்கக்கூடிய பகுதி விவசாயிகளிடம் கேட்டால் தெரிந்துவிடும். டால்டா ஊத்த அரசு அல்ல இந்த அரசு உண்மையிலேயே டெல்டா மக்களுக்கு நன்மை பயக்கும் அரசு இந்த அரசு என்று சொல்வதற்கு என்னிடம் ஓராயிரம் பட்டியல் இருக்கிறது.
நானும் டெல்டாக்காரன் தான். இப்போது இந்த நேர்காணலை டெல்டாவில் உட்கார்ந்து கொண்டே நான் பேசுகிறேன். டெல்டா பகுதிகளில் எங்கு பார்த்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆதரவு அலைதான் வீசிக்கொண்டே இருக்கிறது. இன்னொன்று தெரியுமா உங்களுக்கு 2021 சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்கள் மட்டும் தான் வெற்றி பெற முடிந்தது.  டெல்டாவில தஞ்சை, நாகை, திருவாரூர். தஞ்சாவூரில் ஒரத்தநாடு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இப்போது திமுகவுக்கு வந்துவிட்டார். அவர் அன்னைக்கு அதிமுக கேண்டிடேட். அவர் மட்டும் தான் வெற்றி பெற்றார். தஞ்சாவூர்ல ஏனைய இடங்களில் எல்லாம் அதிமுக படுதோல்வி. திருவாரூரில் முன்னாள் அமைச்சர் காமராஜ், நன்னிலம் தொகுதியில் அவர் மட்டும் தான் வெற்றி பெற்றார். அதே மாதிரி நாகப்பட்டினம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேதாரண்யம் தொகுதியில் அவர் மட்டும் தான் வெற்றி பெற்றார். அப்போது டெல்டா மக்கள் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களித்தார்களோ அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்த அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது.  இந்த மூன்று இடங்கள் கூட பெற அதிமுக முடியாது. இந்த மூன்று இடங்களை கூட பெற முடியாத அளவுக்கு 100 விழுக்காடு வெற்றியை தக்க வைக்க முடியும் என்கிற அந்த நிலையை உருவாக்கி இருக்கிறது இந்த அதிமுக அரசு. அப்போது டெல்டா மக்களுக்கு யார் டால்டா ஊத்துறது?