தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  

Advertisment

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள்குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment

எடப்பாடியுடன் கூட்டணி சேர முடியாது எனச் சொல்லிவந்த டி.டி.வி.தினகரனே அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டார். ஓபிஎஸ் என்னதான் முடிவில் இருக்கிறார்? பாஜக விஜய்யை எப்படி பார்க்கிறது?

236
politics Photograph: (interview)

எனக்கு தெரிந்து ஓபிஎஸ் தர்மயுத்தமே பண்ணிருக்க தேவையில்லை. தர்மயுத்தம் செய்யாமல் இருந்தாலே இன்னைக்கு ஓபிஎஸ் தான் முதலமைச்சர். இபிஎஸ் வந்திருக்கவே மாட்டார் இந்த சீனுக்கு. தேவையில்லாமல் வந்து ஆளே இல்லாத இடத்தில் டீ ஆத்தி இன்னைக்கு இந்த நிலைமை ஓபிஎஸ்க்கு வந்துவிட்டது. திமுகவில் ஓபிஎஸ் சேர்ந்து விடக்கூடாது என்று பாஜக முட்டுக்கடை போடுறாங்க. அடிப்படையில் பார்த்தால் ஓபிஎஸ் திமுகவோடு சேர்வதற்கு தான் விரும்பினார் என்று செய்தி வந்தது.

Advertisment

ஏன் இன்னைக்கு ஓபிஎஸ் 'அதிமுக ஒன்றிணைய வேண்டும் என நினைக்கிறோம்' என்று செய்தியாளர் சந்திப்பில் சொல்கிறார் என்றால் காரணம் ஓபிஎஸ் திமுகவில் இணைவதை பாஜக விரும்பவில்லை. இன்றும் தென்னகத்தில் 50 முதல் 60 தொகுதிகளில் அந்த முக்குலத்தோர் சமூக வாக்குகள் இவர்கள் எல்லாம் ஒன்றாக இருந்தால் தான் கிடைக்கும் என பாஜக நினைக்கிறார்கள். ஓபிஎஸ் பிரிந்து சென்றாலோ அல்லது வந்து தினகரன் வேறு பக்கம் சென்றாலோ அந்த வாக்குகள் கிடைக்காது. தினகரனும் ஓபிஎஸ் கூட்டாக இங்கே வந்து சேர வேண்டும். குறைந்தபட்சம் கூட்டு நிக்கலையாவது வர வேண்டும் என்ற கணக்கை பாஜக போடுகிறது.

ஆனால் ஓபிஎஸ்க்கு அடிப்படையில் இப்படி வந்து சேர விருப்பம் இல்லை. குறைந்தபட்சம் அவருடைய தனி அணியாக பாஜகவுடன் கூட்டணிக்கு வரவேண்டும் என ஓபிஎஸ் நினைக்கிறார். ஆனால் இது எடப்பாடிக்கு கிடைத்த பெரிய வெற்றிதான். காரணம் எடப்பாடி தேடிச் சென்று இவர்களை சேர்க்கவில்லை. அவர்களாகத்தான் வந்து காலில் விழுகிறார்கள். சசிகலாவே  இந்த கூட்டணிக்குள் வந்தாலும் ஆச்சரியமில்லை.

ஏன் இந்த மாதிரியான ஒரு திட்டம்? நல்லா பாருங்க விஜய் இந்த அணிக்கு வரவில்லை. கிட்டத்தட்ட விஜய் தனி அணியாக அமைத்து நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டார். விஜய்க்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் சிறுபான்மை வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பது. இரண்டு தினங்களுக்கு முன்பு அதிமுகவை பற்றி விஜய் 'ஊழல் சக்தி' என்று பேசினார். உடனே செல்லூர் ராஜில் இருந்து பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் அதற்கு ரியாக்ட் செய்தார்கள். இப்பொழுது அதற்கு தடை போடப்பட்டிருக்கிறது தெரியுமா?

விஜய் பற்றி பேசாதீங்க டைவர்ட் ஆயிடும். இது நமக்கும் விஜய்க்குமான போட்டி அல்ல, நமக்கு திமுக உடன் தான் போட்டி. விஜய் வேலை என்பது சிறுபான்மை வாக்குகளை மட்டும் தான் பிரிக்க வேண்டும். அவர் இதுக்குள் வர வேண்டாம். 16 விழுக்காடு இருக்கின்ற சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம், கிறிஸ்தவ வாக்குகளை பிரிக்க வேண்டும்.  அவர் ஜோசப் விஜய்யாகவே இருக்கட்டும். நாம் தமிழர் பாதிக்கப்பட்டாலும் பிரச்சனை இல்லை. அதிமுக விஜயை ஒண்ணுமே செய்ய வேண்டாம் என பாஜக முடிவெடுத்துள்ளது.