திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதவெறி அரசியலைத் தூண்டி கலவரத்தை உருவாக்க முயல்வதாக பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேடையில் பேசிய திருமாவளவன், ''தம்பி விஜய்யும், தம்பி சீமானும் இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகிவிட்டது, பா.ஜ.கவின் பிள்ளைகள் என்பது அம்பலமாகிவிட்டது. பிராமண கடப்பாரையை கொண்டு திராவிட கோட்டையை இடிப்பேன் என்று சீமான் சொல்கிறார். அந்த தம்பிக்கு நான் சொல்கிறேன். நீங்கள் வெளிப்படையாக வந்துவிட்டீர்கள், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. நீங்கள் தமிழ் தேசியம் தான் பேசுகிறீர்கள் என்று இவ்வளவு காலம் நாங்கள் நம்பி கொண்டிருந்தோம். இப்போது தான் தெரிகிறது, நீங்கள் இந்து தேசியம் பேசுகிறீர்கள் என்று. நீங்கள் இந்து தேசியம் கூட பேசவில்லை, பிராமண தேசியம் பேசுகிறீர்கள். எவ்வளவு பெரிய ஏமாற்று நடவடிக்கை. பெரியாரை இழிவுப்படுத்துவதும், பெரியாரின் அரசியலை தகர்ப்பதுமா தமிழ் தேசியம்? இரண்டு பேர் தங்களை தாங்களே அடையாளப்படுத்திக் கொண்டார்கள்'' எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் நக்கீரனின் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட விசிகவின் சங்கத்தமிழன் இது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''விஜய்யின் அரசியல் செயல்முறைகளை பார்த்தால் சினிமாவிற்கு பட்ஜெட் ஒதுக்குவது போல் அரசியலுக்கும் பணம் ஒதுக்கி அதை நோக்கி தான் விஜய் சென்று கொண்டிருக்கிறார். 2026 தேர்தலை மையமாக வைத்து ஒரு ப்ராஜெக்ட் ஒதுக்கி அதை நோக்கித்தான் விஜய் நகர்ந்து கொண்டு இருக்கிறார். முதல்வர் போஸ்டை தவிர வேறு எந்த போஸ்ட் கொடுத்தாலும் விஜய் வாங்க மாட்டார். ஒரு எதிர்கட்சி தலைவர், ஒரு எம்எல்ஏ அதெல்லாம் நோ வேண்டாம். நேரடியாக முதல்வருக்கு தான் போவேன் என்கிறார். இதைத்தான் திருமாவளவன் கேட்கிறார். இவர்கள் குவாட்டர் ஃபைனல் விளையாட மாட்டார்கள், செமி ஃபைனல் விளையாட மாட்டார்கள். நேராக ஃபைனலுக்குதான் வருவார்களா? எனக் கேட்கிறார்.
தமிழ்நாட்டு மக்களை பைத்தியக்காரகளா நினைக்கிறாங்களா என்று கேட்கிறேன். திமுகவை தீய சக்தி தீய சக்தி என விஜய் சொல்கிறார். அது அவருக்கும் திமுகவிற்கும் உள்ள பிரச்சனை விஜய் உண்மையிலேயே ஒரு கோட்பாட்டு ரீதியாக ஒரு யுத்தம் செய்யும் ஆளாக விஜய் இருந்தால் பாஜக நல்ல சக்தியா? என்பதை சொல்ல வேண்டும்.
நான் நேரடியாக கோவா சென்று போய் பார்த்து வந்ததில் சில விஷயங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. ஒரு சங்கி மனநிலையில் ஒரு ஜோசியக்காரர் சொல்லி செய்து கொண்டிருக்கிறவர் எப்படி பாஜகவை எதிர்ப்பார்? இயேசுநாதர் பெயரைச் சொல்லி 'பிரைஸ் தி லார்ட்' எனச் சொல். அல்லாஹு அக்பர் எனச் சொல். ஜெய் பீம் சொல்லுவியா? கட்சி ஆரம்பித்து ஒரு வருஷத்துக்கு மேல் ஆயிடுச்சு. விஜய்யை ஜோசப் விஜய் என்று நான் சொல்ல மாட்டேன். உன்னை ஜோசப் விஜய் என்று ஒருவர் சொன்னார். அவரை எதிர்ப்பதற்கு விஜய்க்கு துப்பு இல்லை. ஆனால் விடுதலை சிறுத்தைகள் அந்த காலத்திலேயே விஜய்க்காக போராடினோம்.
பல கொள்கை தலைவர்களை தமிழக வெற்றிக் கழகம் வைத்துள்ளது. அதில் அம்பேத்கரையும் கொள்கை தலைவராக விஜய் அறிவித்துள்ளார். நான் நேரடியாக கேட்கிறேன் ஒரு நாள் மேடையில் புரட்சியாளர் அம்பேத்கர் இந்த கருத்தை சொன்னார் என விஜய் மேற்கோள்காட்டி சொல்லியிருக்கிறாரா? உங்களுக்கு புரட்சி தளபதி என பட்டம் கொடுத்துள்ளனர். இதுவரைக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் கோட்பாடுகளில் ஒன்றையாவது மேடையில் பேசி இருக்கிறாரா? அம்பேத்கரின் கோட்பாடு என்ன? சனாதனத்தை எதிர்ப்பது, பிராமணியத்தை எதிர்ப்பதுதான் கோட்பாடு. ஆனால் விஜய் சங்கி பயல்களுடன் டீல் போட்டுக்கொண்டு இருப்பது எங்களுக்கு தெரியும்.
இந்த காலகட்டத்தில் இளைஞர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. சினிமாவை பார்த்துவிட்டு அந்த போதையில விஜய் பின்னாடி போகிறார்கள். உங்கள் கொள்கை தலைவர் யார் எனக் கேட்டால் செங்கோட்டையன் எனச் சொல்கிறார்கள். இவர்களால் தான் நாட்டுக்கே சிக்கல்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/24/177-2025-12-24-18-14-29.jpg)