தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment

021
haleem Photograph: (politics)

நியாயப்படி பார்த்தால் 'நாங்க உங்களுக்கு இத்தனை சீட்டு தான் கொடுப்போம்' என்று சொல்லி அதிமுக முடிவு பண்ணிட்டு கொடுப்பார்கள். ஆனால் இப்போது அதிமுகவுக்கு எத்தனை சீட்டு என்பதையே பாஜக தான் முடிவு பண்றாங்க. சிறுபான்மை வாக்குகள் முழுமையாக திமுக கூட்டணிக்கு போகும் என்பது எல்லோருக்கும் தெரியும். கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் இருக்கிற சிறுபான்மை வாக்குகள் திமுக கூட்டணி தான் போகும். அதுக்கு என்ன காரணம் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என்ற கண்ணோட்டம் பார்க்கப்படுகிறது. இப்போது விஜய்யை கொண்டு வந்தது சிறுபான்மை வாக்குகள் உடைக்கத்தான் அப்படிங்கிற ஒரு பேச்சு இருக்கிறது. வந்து சிறுபான்மை வாக்குகள் உடைய வேண்டும். 

அது நாம் தமிழருக்கும் தவெகவிற்கும் உடைந்து போனால் மட்டும் தான் சரி. அப்போதுதான் நம் வெற்றி சாத்தியம் என்று என்டிஏ கூட்டணி நினைக்கிறார்கள். இட ஒதுக்கீடு என்பது மிகவும் அடிப்படை. மகாராஷ்டிராவில் ஐந்து விழுக்காடு சிறுபான்மை மக்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கு.  சமீபத்தில் விமான விபத்தில் இறந்து போன அஜித் பவார் முதலமைச்சராக இருக்கும் போது இந்த திட்டம் கொண்டு வந்தார்கள். அதாவது மகாராஷ்டிராவில் அங்க இருக்கிற முஸ்லிம்களுக்கு ஐந்து விழுக்காடு இட ஒதுக்கீடு. ஆனால் இந்த ஐந்து விழுக்காடு இட ஒதுக்கீட்டை இன்னைக்கு மகாராஷ்டிராவில் உள்ள பாஜக கூட்டணி அரசு  நீக்கி இருக்கிறார்கள்.

Advertisment

நான் ஞாபகப்படுத்துகிறேன் ஏற்கனவே கர்நாடகாவில் பாஜக ஆட்சி செய்தபோது கர்நாடகாவில் இருந்த நான்கு விழுக்காடு முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு நீக்கப்பட்டது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு மறுபடியும் கொடுக்கப்பட்டது.  தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இதே அப்ளிக்கபிள் ஆகும். என்டிஏ கூட்டணி வந்தால் தமிழ்நாட்டில் மூன்றரை விழுக்காடு இருக்கின்ற இட ஒதுக்கீடு கண்டிப்பாக நீக்கப்படும். பாஜகவுக்கு நாங்க எதிராக இருக்கிறோம், எங்க கொள்கை எதிரி பாஜக எனச் சொல்லக்கூடிய விஜய் இதையொட்டி ஒரு அறிக்கை விட்டாரா என்று நான் கேட்கிறேன்.

சிறுபான்மை மக்கள் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று சொல்லக்கூடிய விஜய், மகாராஷ்டிராவில் பாஜக செஞ்சது மிகப்பெரிய மோசடி. சிறுபான்மை மக்களுக்கு செய்த அநீதி. தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதுபோன்று நான் செய்ய விட மாட்டேன் என்று ஏதாவது சொல்லலாமே. விஜய் முகத்தை காமிச்சா ஓட்டு போட்டுருவாங்களா?  விஜய் என்று பெயரை பார்த்தால் ஓட்டு போட்டுருவாங்களா? வாக்கு என்ன சினிமா டிக்கட்டா? சினிமா டிக்கெட் மாதிரி வாங்கி போட்டுருவாங்க என்று நினைக்கிறீங்களா? இதனாலதான் திருப்பி திருப்பி சொல்கிறோம். விஜய் தனியாக நின்று கம்பு சுத்தி கொண்டிருக்கிறார். தனியாக நின்று கத்தி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு அங்கே எந்த எதிரியும் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் தான் சண்டைக்கு திமுகவை கூப்பிட்டுட்டு இருக்கிறார். விஜய்யை பொறுத்தவரை திமுக வலிமையான எதிரி என்று அவருக்கே தெரிகிறது.