Advertisment

' உதயநிதியை திட்டமிட்டு தவிர்க்கும் விஜய்; காரணம் இதுதான்'- அடுக்கிய மதிமாறன்

312

tvk Photograph: (dmk)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் திராவிட இயக்க எழுத்தாளரும், பேச்சாளருமான மதிமாறன் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment
313
madhimaran Photograph: (politics)

அண்மையில் விருதுநகரில் நடந்த திமுக மாநாட்டில் முதல்வரின் ராம்ப் வாக், உதயநிதியின் செல்பி எல்லாம் விஜய்யை பார்த்து காப்பி அடித்தது. இதுதான் தான் விஜய்யின் தாக்கம் என்ற பேச்சு எழுந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?

விஜய் கட்சி, தன்னுடைய கொள்கை மற்றும் தன்னுடைய தலைவர்களை அறிவித்துள்ளதையெல்லாம் பார்த்தால் திராவிட முன்னேற்ற கழகம் எதையெல்லாம் சொல்லுச்சோ அதையெல்லாம் தன் கொள்கையாக தவெக அறிவித்துள்ளார்கள். அவர்கள் புதுசாக எதுவும் சொல்லவில்லை. இன்னும் ஒரு படி மேல போய் திமுகவை உருவாக்கியது அண்ணா. அண்ணாவை அவர்கள் தலைவராக சொல்லிக்கொள்கிறார்கள். சமூக நீதி உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் திமுக என்ன சொல்லுச்சோ அதையே தங்களோட கருத்தாக சொல்லிக்கொள்கிற கட்சியா தான் தவெக இருக்கிறது. அதில் என்ன ஒரே ஒரு மாற்றம் என்று பார்த்தால் திமுக எதிர்ப்பு.

திமுக சொல்கிற கொள்கை அறிக்கை; திமுக சொல்லுகிற இந்தி எதிர்ப்பு போராட்டம்; திமுக சொல்லுகிற வரலாறு; 1967ல் மாற்றம் நடந்தது அதையே விஜய் மேடையில் சொல்கிறார். 1967 மாற்றத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என விஜய் திமுககாரர் மாதிரி சொல்கிறார். எல்லாம் சொல்லிவிட்டு கடைசியாக விஜய் என்ன சொல்வார் என்று பார்த்தால்  முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்று சொல்வது மட்டும் தான் அவர்களது சொந்தக் கருத்து. வேறு எதுவும் சொந்த கருத்து கிடையாது. அப்போது அவர்கள் கட்சியின் கொள்கை அறிக்கையாக அறிவித்துக் கொள்வதற்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சமூக நீதி உள்ளிட்ட எல்லாம் தேவைப்படுகிறது. அதையெல்லாம்  விஜய் தன் கருத்தாக அறிவித்துக் கொள்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் ஒன்றிய அரசின் விஷயங்கள் தீவிரமாக போகும்போது கூட, இங்கு முதலமைச்சர் என்ன சொல்கிறார், உதயநிதி என்ன சொல்கிறார் என்று பார்த்துட்டு அதற்கு ரியாக்ட் செய்பவராக தான் விஜய் இருக்கிறார். மறுநாளும் மெல்லமாக மோடி அரசுக்கு திமுக தலைவர் சொல்லும் அதே விஷயத்தை எடுத்து விஜய் ஸ்டேட்டஸ் போடுகிறார். அப்படித்தான் இருக்கிறது. விஜய்யை உதயநிதி நிறைய பாதிச்சிருக்கிறார் பார்க்கும்போது தெரிகிறது. அதனால் விஜய் உதயநிதி பேரை திட்டமிட்டு தவிர்த்துவிட்டு திமுக தலைவர் பெயரையும், திமுக பெயரையும் தொடர்ந்து பேசுகிறார். அதற்கு உதாரணம் திமுக நடத்திய அறிவு திருவிழா.

இளைஞரணி சார்பாக உதயநிதி நடத்தியது அந்த அறிவு திருவிழா. உதயநிதி பேசும்போது சொல்கிறார் ''இன்னைக்கு சில கட்சிகள் பொருட்காட்சியில் உள்ள அட்டை மாதிரி இருக்கிறது. தட்டுனா கீழ விழுந்துடும்'' என பொதுவாக சொல்கிறார். அடுத்த நாளே விஜய் அறிக்கை வெளியிடுகிறார் இது அறிவு திருவிழா அல்ல அவதூறு திருவிழா என்று விஜய் தன்னை ரிலேட் செய்துகொள்கிறார். விருதுநகரில் நடந்தது இளைஞரணி சந்திப்பு. அது மாநாடு கூட இல்ல. அந்த சந்திப்பே மாநாடு மாதிரி நடந்திருக்கிறது. அந்த சந்திப்பில் முதலமைச்சர் நடந்து வந்தது. துண்டு எடுத்து போட்டது. அதெல்லாம் வந்து விஜய்யை பார்த்து தான் செய்தார்கள் என்பது இன்னொரு காமெடி.

tvk vijay m.k.stalin Udhayanidhi Stalin dmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe