Advertisment

'வம்புக்கு இழுக்கும் விஜய்; கண்ணில் படாத பாஜக'-நொறுக்கும் புதுமடம் ஹலீம்

387

tvk Photograph: (vijay)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment
021
haleem Photograph: (politics)

தமிழ்நாடு மும்மொழி கொள்கையில் கையெழுத்திட்டால் உங்களுக்கு பணத்தை கொடுத்துடுவோம் என்று மத்திய அரசு சொல்கிறது. அப்படி என்றால் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு பணம் என்று சொல்லும் பொழுது பணமே தேவையில்லை நீங்க பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் நாங்கள் கையெழுத்து போட மாட்டோம் அப்படிங்கற இடத்தில் தமிழக அரசு இருக்கிறது. மொழிக் கொள்கை பிரச்சனை மூலம் எப்படி நெருக்கடி கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டுடைய அடிநாதமே இருமொழி கொள்கை தான். அதற்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். அதை நோக்கி சண்டை போட முதல்வர் முயல்வாரா? இல்ல விஜய்க்கு பதில் கொடுத்துக் கொண்டு  இருப்பாரா?

வேலூரில் விஜய் பேசுகையில் எந்த இடத்தில் அழு வேண்டும், எந்த இடத்தில் பேச்சை நிப்பாட்ட வேண்டும் என்ற ஸ்கிரிப்ட் எல்லாம் வெளிய வந்துச்சு. அது எப்படி வெளியே வந்தது என்று நமக்கு தெரியாது. 'முதல்வர் எல்லோரையும் நண்பன் என்று சொல்கிறார். கரூரில் இறந்து போனதற்கு என்னை காரணம் சொல்கிறார்கள். என் மேல் பழி போட்டாரே ஒரு நண்பன் மேல பழி போடலாமா?' என்பது போல விஜய் குழுங்கி குழுங்கி அழுதார். கரூர் சம்பவத்தில் ஒவ்வொரு நொடியும் என்ன நடந்தது என்பது தமிழக மக்களுக்கு தெரியும். முதல்வர் என்ன சொன்னார் 'எந்த தலைவனும் தொண்டர்கள் இறப்பதை, கொல்லப்படுவதை சகித்து கொள்ள மாட்டார்கள். அதனால நான் விஜய் மேல எந்த குற்றமும் சொல்லவில்லை' என்பது மாதிரியாக பேசினார். 

எப்ஐஆரில்  விஜய் பெயர் சேர்க்கப்படவில்லை. அங்குள்ள மாவட்டச் செயலாளர் பெயர் தான் சேர்க்கப்பட்டது. அந்த நிகழ்வுக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் இருக்க போகிறது. அப்படியெல்லாம் யார் மேலேயும் பழி சுமத்தி விடக்கூடாது என்று சொன்னவர் முதல்வர் ஸ்டாலின். ஆனால்  'என் மேல பழி சுமத்துகிறார்கள்' என விஜய் சொல்கிறார். இந்த நிகழ் காலத்தில், இந்த சமூக வலைத்தளங்கள் உயிர்ப்போடு இருக்க காலத்தில், எல்லா மக்களும் இந்த நிகழ்வை பார்த்துக் கொண்டிருக்கும் காலத்தில் எந்த நிகழ்வையும் மறைக்க முடியாது. ஆனால் விஜய் அதை மறைத்து பேசுகிறார். விஜய் என்ன மாதிரியான ஒரு அமினிசியாவில் இருக்கிறார். அல்லது  எந்த அரசியலும் புரிதல் இல்லாமல் இருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.

சிறுபான்மை மக்கள் காவலர் என்று பேசுறீங்க. சிறுபான்மை மக்கள் காவலர் என்று சொல்லக்கூடிய நீங்கள் மைக்கேல்பட்டியில் நடந்த விஷயத்துக்கு நீங்க என்ன பதில் கொடுத்தீங்க? 'பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணம் மதமாற்றம் தான். அந்த பள்ளி தலைமை ஆசிரியர் தான் காரணம், அது ஒரு கிறிஸ்தவ பள்ளி' என்றெல்லாம் பேசினார்கள். வட இந்தியாவில் இருந்து பாஜகவுடைய பெண் தலைவர்கள் எல்லாம் வந்து இறங்கினார்கள். சிபிஐ வசம் வழக்கு நடந்தது. இறுதியில் நீதிமன்றத்தில் சிபிஐ என்ன பதில் கொடுத்துள்ளார்கள்? மைக்கேல்பட்டியில் மதமாற்றத்தால் அந்த பெண் தற்கொலை செய்யவில்லை என ஒன்றிய அரசுடைய சிபிஐ தகவல் கொடுத்துள்ளது. ஆனால் இன்னைக்கு அந்த சம்பவத்திற்கு ஒரு கண்டனத்தை விஜய் தெரிவித்தாரா? விஜய் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்னைக்கு அந்த சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக ஒரு கருத்து இல்லையே? பாஜகவுக்கு எதிரான ஒரு கண்டன அறிக்கை இல்லையே ஏன்? ஆனால் நீங்க ஏன் திருப்பி திருப்பி முதல்வர் ஸ்டாலினை உங்களுக்கு எதிரியாக இழுக்குறீங்க? ஏன் மற்ற யருமே இல்லையா?

m.k.stalin dmk b.j.p tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe