Vande Mataram is mandatory; adding lyrics removed in 1937 Photograph: (bjp)
வந்தே மாதரம் பாடலில் இருந்து 1937 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட பத்திகள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்து புதிய முறைகளை வகுத்திருக்கிறது. இதுவரை வந்தே மாதரம் பாடலில் முதல் இரண்டு சரணம் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் பாடலின் ஆறு சரணங்களையும் பயன்படுத்த மத்திய உள்துறை வலியுறுத்தியுள்ளது. சரியாக பயன்படுத்தவில்லை என்றால் 3 வருடம் சிறை என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்த புதிய அறிவிப்பால் மாநில சட்டமன்றங்களில் வந்தே மாதரம் இசைக்கப்படுவது காட்டாயம் ஆகிறது.
தேசிய கீதமான 'ஜன கண மன' பாடலுக்கு இணையான மரியாதை தேசிய பாடலான வந்தே மாதரத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கதோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் இல்லம் ஆகிய இடங்களில் இசைக்கப்படும் வந்தே மாதரம் இனி அனைத்து தேசிய நிகழ்ச்சிகளிலும் இசைக்கப்படும் என்பதுதான் இந்த புதிய உத்தரவாகும்.
தேசிய கீதமான 'ஜன கன மன' பாடலுக்கு எப்படி எழுந்து நின்று மரியாதை தெரிவிப்போமே அதேபோல் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலுக்கும் எழுந்து நின்று மரியாதை தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேநேரம் வந்தே மாதரம் பாடல் தொடர்பான ஒரு சர்ச்சையும் முக்கியத்துவம் பெறுகிறது. வந்தே மாதரம் பாடலை இரண்டு பாகங்களாக பிரிக்கலாம். முதல் பாகத்தில் நமது நாட்டினுடைய இயற்கை வளங்களை புகழும் வரிகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது பாகத்தில் நமது நாட்டை சரஸ்வதி, துர்க்கா, லக்ஷ்மி என்று சித்தரித்து பாடும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனால் 1930 ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே வந்தே மாதரம் பாடலின் இரண்டாம் பாகத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தது. 1930 காலகட்டத்தில் தீவிரமாக இருந்த சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் தாய் நாட்டை சரஸ்வதி, துர்க்கா, லக்ஷ்மி உள்ளிட்ட கடவுகள் என்று சித்தரித்து பாடும் வரிகளை எங்களால் பாட முடியாது. எங்கள் மதத்துக்கு எதிரானது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் போராட்ட களத்தில் இருந்த ஜவஹர்லால் நேரு, காந்தி, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் கலந்து ஆலோசித்து ஒரு முடிவு எடுத்தனர்.
பாடலுக்கு இசை கொடுத்த ரவீந்திரநாத் தாகூர் மற்றும் மௌலானா ஆசாத் ஆகியோருடனும் கலந்து ஆலோசித்து முதல் இரண்டுபத்திகளை மட்டும் பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் இத்தனை ஆண்டுகளுக்கு பின் தற்போது வந்தே மாதரம் பாடலில் மீதமுள்ள சரணங்களை பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று காலையிலேயே மக்களவையில் எதிர்ப்பு குரல்கள் கிளம்பியது. 2026 ஆம் ஆண்டு தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை மனதில் கொண்டுதான் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதற்கு காரணமாக வந்தே மாதரம் பாடலை இயற்றியது மேற்கு வங்கத்தை சேர்ந்த பக்கிம் சந்திர சட்டர்ஜி. அந்த பாடலுக்கு இசை வடிவம் அளித்தது மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர். எனவே மேற்குவங்க சட்டமன்ற தேர்தலை மட்டுமே கருத்தில் கொண்டுதான் பாஜக நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதக்க எதிர்க்கட்சிகள் கொந்தளிக்க தொடங்கியுள்ளன.
Follow Us