'Vanathi doesn't even understand Thirukkural' - Murali Abbas retorts Photograph: (mnm)
நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடப்பாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், மாநிலங்களவையில் கடந்த 4ஆம் தேதி பேசினார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுக்கும் வகையில் கமல்ஹாசனின் கன்னிப்பேச்சில், “நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்தி தான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சைக்குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்த நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழைப் பார்த்து என்ன சொல்லுகிறீர்கள் தமிழ் பிச்சை எடுக்கக் கூட உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மை தான். தந்தாய் தமக்கென உங்கள் நீதியைத் திரட்ட ஆங்கிலத்தில் இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது' என அதிரடியாகப் பேசி இருந்தார்.
தமிழிசை, வானதி ஸ்ரீனிவசன் போன்றவர்கள் கமல்ஹாசனை திமுக எம்பி ஆக்கியதே தவறு என்ற விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடக பிரிவுச் செயலாளர் முரளி அப்பாஸ் நக்கீரன் டிவியில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
'பொதுவாக கமல் பேச்சு புரியாது என்று சொல்பவர்கள் அதிகம். கமல் பேச்சு புரியாததால் தான் கோவை மக்கள் கமலை ஏற்றுக்கொள்ளவில்லை என வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம் வைத்துள்ளாரே?'
'உலகத்தில் எப்போதுமே சில நேரங்களில் நாம் விரும்பாத ஒரு துர் நிகழ்வு நடப்பது வழக்கம். அப்படி நிகழ்ந்த துர் நிகழ்வுதான் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றது. சந்தர்ப்பத்தில் ஜெயிச்சுட்டாங்க. அந்த வெற்றியை அவர்களால் தாங்க முடியவில்லை. குருவி தலையில் பனங்காய் என்று சொல்வார்களே அது மாதிரி அவங்களுக்கு ஒரு வெயிட்டாயிடுச்சு. வாயில் வந்ததையெல்லாம் பேசுவது. நாம் ஒரு எம்எல்ஏ என்பதற்காக தேடிவந்து கேக்கறாங்க என்பதற்காக தெரியாததை பற்றியெல்லாம் பேசுறது என தப்பான வழிமுறையில் போய்விட்டார்கள்.
வானதி ஸ்ரீனிவாசனுக்கு புரியவில்லை என்றால் திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பாரதியார் பாட்டு கூட அவருக்கு புரியாது என நினைக்கிறேன். ஒரு நல்ல தமிழை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அந்த அம்மையாரிடம் இருக்கும் தமிழ் பற்றாக்குறை, தாய் மொழியில் தெளிவில்லாமல் இருக்கிறதாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, புரியவில்லை என சொல்வது அவங்களுக்கு அவமானமே தவிர, எங்களுக்கு ஒன்றும் இல்லை. கமலின் வார்த்தைகள் எவ்வளவு அர்த்தபூர்வமானது என்பதை மிகப்பெரிய சிந்தனையாளர்களே பாராட்டி இருக்காங்க.
Follow Us