அண்மையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டம் குறித்த ஆவணத் தொகுப்பு 'தை திருநாள்.. வைகோ உடன் ஒருநாள்' என்ற தலைப்பில் நக்கீரன் டிவியில் வெளியாகி இருந்தது. இதில் மூத்த பத்திரிகையாளர் இந்து ராம் கலந்து கொண்டார்.

Advertisment

காணக்கிடைக்காத பல்வேறு வரலாற்று புகைப்படங்களையும், அதன் பின்னே இருக்கும் சுவாரசிய நிகழ்வுகளையும் வைகோ நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.  

Advertisment

v1
vaiko Photograph: (mdmk)

'மாநாட்டில் நான் பேச தொடங்கிய உடனே மின்னல், இடி அடிச்சு பலத்த மழை. நான் ஒரு வினாடிகூட தயக்கம் இல்லாமல் முன்பைவிட வேகமாக பேச, உடம்பெல்லாம் நனைஞ்சிருச்சு. ஒருத்தர் கூட கலைந்து போகாமல் நாற்காலி தலைமேல் வைத்துக் கொண்டு என் உரையை கேட்டாங்க. இந்த போட்டோவை நக்கீரன் போட்டோகிராபர் எடுத்து பெருசா போட்டாங்க. இந்த படத்தை நக்கீரன் கோபால் தான் கொடுத்தார்.

v2
vaiko Photograph: (mdmk)

இது மோராஜி தேசாய் திருநெல்வேலிக்கு வந்த போது வரவேற்றது. 

v3
vaiko Photograph: (mdmk)

நான் திமுகவில் தேர்தல் பணி செயலாளராக இருக்கும் போது எம்எல்ஏ, எம்பி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டபோது. என்னைத்தான் கேள்வி கேட்கச் சொல்வார்கள். நான் கேள்வி கேட்பேன். குறிப்பும் எடுத்து வைத்துக் கொள்வேன்.

Advertisment
v4
vaiko Photograph: (mdmk)

பிரசிடன்சி ஃபர்ஸ்ட் இயர் நேரத்தில் அண்ணாவுக்கு முன்னாடி கோகலே ஹாலில் நான் பேசிய போது எடுத்த புகைப்படம்.  

v5
vaiko Photograph: (mdmk)

இது சஞ்சீவ ரெட்டியை பிரசிடன்ட் பேலஸில் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம்.

v6
vaiko Photograph: (mdmk)

என்னை ராஜ்யசபாவுக்கு அனுப்பிய உடனே முதல் தடவை  அண்ணா சிலைக்கு நான் மாலை போட்ட போது எடுத்த புகைப்படம்.

v7
vaiko Photograph: (mdmk)

இது ஒரு நல்ல சந்தோஷமான நேரத்தில் கலைஞரோடு எடுத்துக்கொண்ட புகைப்படம்.

v8
vaiko Photograph: (mdmk)

லயோலா கல்லூரியில் அண்ணா சிலை திறப்புக்கு முதல்வர் வந்தபோது சேர்மன் கிருஷ்ணராஜ வானவராயர் வராமல் போய்விட்டார். அந்த வரவேற்பு மடலை நான் வாசிச்சு கொடுத்தேன். 

v9
vaiko Photograph: (mdmk)

இது அப்பா படம். இங்க ஒரே ஒரு படம் தான் இருந்தது. கடவுள் படம் வீட்டில் கிடையாது. தலைவர்கள் படம் கிடையாது.  அப்பா தலைக்கு மேல் திருவள்ளுவர் படம் ஒன்னு மட்டும் தான் இருந்தது. வேறு எந்த படமும் கிடையாது. பிறகுதான் நான் அரசியல் தலைவர்கள் படங்களை எல்லாம் வச்சேன். 

v10
vaiko Photograph: (mdmk)

என் பையன் துரை. சின்ன பையனாக இருக்கும் போது எடுத்த படம்.

v11
vaiko Photograph: (mdmk)

நான் ஜெயில்ல இருந்து விடுதலையாகி வந்தபோது அம்மா காலடியில உட்கார்ந்திருந்த ஒரு போட்டோ. அதை  படமாக வரைந்து கொடுத்த படம்.

v12
vaiko Photograph: (mdmk)

இது எங்க தாத்தா. மடத்துப்பட்டி கோபால் நாயக்கர். ஜில்லா போர்டு பிரசிடெண்ட் ஆக இருக்கும்போது. இந்த புகைப்படத்தில் சின்ன பையனாக நல்லகண்ணு இருக்கார். அவருக்கு அப்போது எட்டு வயசு ஒன்பது வயசு இருக்கும். ஸ்ரீவைகுண்டம் பாலத்தை தாத்தா ஜில்லா போர்டு பிரசிடெண்டா இருக்கும்போது திறந்து வைக்கிறார். பிரிட்டிஷ்காரன் ஆட்சி. அப்போது நல்லகண்ணு அந்த நிகழ்ச்சிக்கு போயிருக்காரு.

இப்படியாக காணக்கிடைக்காத புகைப்பட பொக்கிஷங்களையும் அதன் நினைவுகளையும் அசை போட்டார் வைகோ.