கடந்த 2024ஆம் ஆண்டு கமலா ஹாரிஸ் உடனான கடும் போட்டிக்கு பின் 05-11-24 அன்று நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக ட்ரம்ப் அதிபரானார். 277 வாக்குகளை பெற்று அமெரிக்காவின் அதிபர் இருக்கையை கைப்பற்றிய ட்ரம்ப் அதன் பிறகு பல்வேறு அதிரிபுரிதி நடவடிக்கைகளில் இறங்கினார்.

Advertisment

ட்ரம்ப் எப்போது என்ன செய்வார் என சற்றும் கணிக்க முடியாத சூழலே தற்போது இந்த நொடி வரை உள்ளது. இன்று ஓராண்டை தொட்டுள்ள அவரது ஆட்சியில் எடுத்த நடவடிக்கைகள் பட்டியலிடும் வகையில் பகீர் ரகத்தில் உள்ளது. அசுர பலம் பொருந்திய அந்நிய நாட்டு அரசுகள் மட்டுமல்லாது சாமானியர்களையும் விட்டுவைக்காமல் பதற வைத்துள்ளது ஓராண்டில் ட்ரம்பின் அரசு.

Advertisment

இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு ஈரான் மீது போர் தொடுத்த கையோடு வெனிசுலாவிற்குள்ளும் புகுந்து அந்நாட்டு அதிபரையே டிரம்ப் சிறைபிடித்தார்.

நெடுங்கால நட்பு வட்டத்திலிருந்த ஐரோப்பாவை, கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே ஆர்வத்தில் அமெரிக்கா பகைத்துக் கொண்டது. வெள்ளை மாளிகை வரை வரவழைத்து உக்ரைன் அதிபரை நேருக்கு நேர் ட்ரம்ப் மிரட்டியது மூலம் சண்டியர் என மீண்டும் நிலை நிறுத்தினார் ட்ரம்ப்.

Advertisment

ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட சுமார் எட்டு போர்களை தான் தான் நிறுத்தினேன் என தனக்கு தானே புகழாரம் சூட்டிய ட்ரம்ப் தனுக்கு தானே விருதும் அளித்து கொண்டார். இந்தியா, கனடா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு மின்னல் வேகத்தில் வரியைக் கூட்டினார்.  தங்க விலை விண்ணை நோக்கி  உயர முக்கிய காரணமாக ட்ரம்பின் நகர்வுகள் இருந்தது.

வெளிநாடுகளுக்கு விடுத்த  ஏக கட்டுப்பாடுகளை உள்நாட்டிலும் நுழைத்தார். ஒரே நாளில் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் பணியிலிருந்து தூக்கிவீசப்பட்டனர். குடியேறுவதற்காக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பலநாடுகள் இதில் பாதிக்கப்பட்டாலும் இந்தியர்களும் கணிசமாகப் பாதிக்கப்பட்டனர்.

பேலன்ஸ் இன்னும் மூன்று ஆண்டுகளில் இன்னும் என்னென்ன முடிகள் இருக்கும் என்பது யூகிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.