Advertisment

பெண் செய்தியாளர்களிடம் அநாகரீகம்- வறுத்தெடுக்கப்படும் ட்ரம்ப்

255

trump criticized for being rude to female reporters Photograph: (press meet)

மறைந்த அமெரிக்க தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் விசாரணை பைல்ஸ் வெளியாகி உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 18 வயதிற்கு குறைவான பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய ஜெஃப்ரி எப்ஸ்டீன், தனது அரசியல் லாபத்திற்காக உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலருக்கு திரைமறைவில் ஏகப்பட்ட சட்டவிரோத காரியங்களை செய்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் டிரம்ப், தொழிலதிபர் பில் கேட்ஸ், பிரிட்டன் இளவரசர் என ஏகப்பட்ட முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இதில் அடிபடுகின்றன. சமீபத்தில் எப்ஸ்டீன் பைல்ஸில் பிரதமர் மோடியின் பெயர் இருப்பதாக பரவிய செய்தி நாடாளுமன்ற வரை பேசுபொருளாக மாறியிருக்கிறது.

Advertisment

இந்நிலையில் தான் கடந்த 3 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த டிரம்பிடம் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் பைல்ஸ் குறித்த கேள்விகளை CNN நிறுவனத்தின் பெண் செய்தியாளர் கைத்லான் காலின்ஸ்(Kaitlan Collins) கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், “நீ மிக மோசமான பத்திரிகையாளர்”, “சிஎன்என் ரேட்டிங் இல்லாததற்கு உன்னைப் போன்றவர்கள்தான் காரணம்” என்று குற்றம் சாட்டினார். மேலும், “நீ ஒரு இளம் பெண்... உன்னை 10 ஆண்டுகளாக எனக்கு தெரியும், ஆனால் உன் முகத்தில் ஒருபோதும்  சிரிப்பை பார்த்ததில்லை” என்று கிண்டலடித்தார். “நீ புன்னகைக்காததற்கு காரணம், நீ உண்மையைச் சொல்லவில்லை என்பதுதான்” என்றும் கூறிய அவர், சிஎன்என்னை “மிகவும் நேர்மையற்ற அமைப்பு” என்று விமர்சித்து பேசினார்.

Advertisment

ஆனால் செய்தியாளர் காலின்ஸ் அமைதியாக தனது கேள்வியைத் தொடர முயன்றபோது, டிரம்ப் அவரை இடைமறித்து பதில் அளிக்காமல் வேறு ஒரு செய்தியாளரை நோக்கி திரும்பினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இதனால் பெண் பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட டிரம்பிற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சி.என்.என் செய்தி நிறுவனம் இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

டிரம்ப் செய்தியாளர்களிடம் இப்படி நடந்துகொள்வது முதல்முறை அல்ல, அதிலும் குறிப்பாக பெண் செய்தியாளர்களிடம். டிரம்ப் கடந்த 10 ஆண்டுகளில் பெண் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால், அவரால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் போனால் ஒன்று செய்தியாளரை மிரட்டுவது அல்லது அவர் மீது தனிமனித தாக்குதல் நடத்துவதை தொடர்கதையாக வைத்து இருக்கிறார். முன்னதாக கடந்த டிசம்பரில் அதே பெண் செய்தியாளர் காலின்ஸ் கேள்வி எழுப்பியபோது, “உன் கேள்வி முட்டாள்தனமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது” என்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு பெண் செய்தியாளர் Megyn Kelly டிரம்பிடம் கேள்வி எழுப்பியபோது, அவரின் மாதவிடாய் குறித்து அறுவறுக்கத்தக்க வகையில் பேசியிருந்தார். இதேபோன்று 2018 ஆம் ஆண்டு கருப்பின பெண் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அவரை “ஸ்டுபிட்” என்றும் “லூசர்” என்றும் விமர்சித்தார். இப்படி கடந்த பல ஆண்டுகளாக கேள்விக்கு பதிலளிக்க முடியாத டிரம்ப் ஏகப்பட்ட செய்தியாளர்களை அவமரியாதையாக நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

PRESS MEET news reader America Donad trump
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe