தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதேபோல் அதிமுக-பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன.
சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் தவெகவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளிலும் விருப்ப மனுக்களை பெற தவெக திட்டமிட்டு இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அண்மையில் வெளியிட்டிருந்தார். அதன்படி நேற்று 06/02/2026) முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட இருக்கிறது.
அதிமுகவினரும் விஜய்யை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விஜய்யை விமர்சித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் சிலர் என அதிமுகவை சைலன்ட் கில்லிங் செய்ததால் அதிமுக நேரடியாக விஜய்யை விமர்சிக்கும் நிலைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நக்கீரன் டிவியில் வெளியாகி வரும் 'சூடா ஸ்ட்ராங்கா' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருச்சி சூர்யா பல்வேறு அரசியல் பார்வைகளை பகிர்ந்துகொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/07/286-2026-02-07-17-48-17.jpg)
புஸ்ஸி ஆனந்த் செய்யும் சில விஷயங்களில் கூட சில விஷயங்கள் நியாயம் என்று படும். ஏனென்றால் தெரிந்தோ தெரியாமலோ விஜய் கூட இத்தனை வருஷமாக புஸ்ஸி ஆனந்த் இருந்துவிட்டார். ரசிகர் மன்றம் நடத்தியதில் இருந்து தியேட்டர் பார்த்துக்கொண்டதாக இருக்கட்டும் எல்லாமே புஸ்ஸி ஆனந்த் தான். இன்னைக்கு திடீரென ஆதவ் கிட்ட பணம் இருக்கு என்பதற்காக ஆதவ் சொல்வதையெல்லாம் கேளு என புஸ்ஸியிடம் சொல்கிறார்கள். திடீரென செங்கோட்டையனை கூட்டிட்டு வந்து நீங்க இரண்டு பேரும் (புஸ்ஸி மற்றும் ஆதவ்) செங்கோட்டையன் சொல்வதை கேளுங்க என்கிறார்கள். 'நீங்க என்ன பதவியில் சார் இருக்கீங்க என்று கேட்டால். இருங்க சார் ஒரு நிமிஷம் கேட்டு சொல்றேன்' என்று யோசிக்கிறார்கள் தவெகவினர்.
நாஞ்சில் சம்பத் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என பில்டப் கொடுக்கிறார். சத்தியமாக சாட்டை முருகன் சொல்வது கரெக்ட் தான். 'பரப்பு செயலாளர்' எதைடா பரப்புவது அப்படிங்கிற மாதிரி தான் இருக்கிறது நாஞ்சில் சம்பத்தின் நிலை. எல்லா இடங்களிலும் கொள்கை பரப்பு செயலாளர் என்பதுதான் தான் இருக்கும். அல்லது செய்தித் தொடர்பாளர் என்று போட்டிருக்க வேண்டும். அல்லது தவெக பயிற்சி பாசறையுடைய செயலாளர் என்று போட்டால் கூட பரவாயில்லை. வெறும் பரப்புரை செயலாளர் என்றால் என்னவென்று சொல்லுங்க.
'சார் நாஞ்சில் சம்பத் கட்சிக்கு வந்து நான்கு நாள் ஆச்சு. என்ன பதவி கொடுப்பீங்க என்று கேட்டுக்கிட்டே இருக்கிறார்' என்ற உடனே டக்கென்று கொள்கையை விழுங்கிவிட்டார் போல உடனே பரப்புரைச் செயலாளர் என போட்டுக்கோ என சொல்லிவிட்டார்கள் என்பது போல் இருக்கிறது. உண்மையிலேயே எனக்கு சீரியசாக யார் எந்த பதவியில் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. தவெகவில் முகம் தெரிகிறது ஆனால் அவர்கள் என்ன பதவியில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
மாவட்டச் செயலாளர் யாராவது ஐகானிக் ஆக இருக்கிறார்களா என்றாலும் தெரியவில்லை. விஜய் தலைவர் என்றால் எல்லாவற்றிற்கும் வெளியே வரணும். ஜனநாயகன் படம் நின்னு போச்சு என்று முதலமைச்சர் வரைக்கும் குரல் கொடுக்கிறார்கள். விஜய் நீ எங்கப்பா போன. சிஎம் சார் என வீடியோ போட்ட விஜய் ஏன் இப்போது பிஎம் சார் என வீடியோ போடவில்லை என எல்லோரும் கேட்கிறார்கள். சென்சார் பிரச்சனைக்கு பிறகு யாரும் பாஜக பற்றி பேசக்கூடாது என ஆர்டர் போயிருக்கு. பேசினால் மேலிடத்தில் கூப்பிட்டு என்னை கொட்டுவார்கள் என்பதை போன்று உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/07/290-2026-02-07-17-53-17.jpg)