madhimaran Photograph: (politics)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் திராவிட இயக்க எழுத்தாளரும், பேச்சாளருமான மதிமாறன் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் திராவிட இயக்க எழுத்தாளரும், பேச்சாளருமான மதிமாறன் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
Advertisment
தேர்தல் கணிப்புகளில் தவெக முன்னிலை வகிப்பதாக சொல்கிறார்கள் உங்கள் பார்வை என்ன?
Advertisment
அவர்களே செய்து கொள்கின்ற சர்வேக்களில் தான் விஜய்க்கு அதிக இடம் வருகிறது. பொதுவான சர்வே 'இந்தியா டுடே' சர்வேவில் திமுக கூட்டணி தான் வந்துள்ளது. 'டெக்கான் கிரானிக்கல்' சர்வேவில் திமுக கூட்டணி தான் வந்திருக்கிறது. இவர்களாக தயார் செய்து வச்சுக்கிட்டு சொல்கிற சர்வேவில் தான் நாங்க ஜெயிச்சுட்டோம் என இவர்களாகவே சொல்கிறார்கள் எங்களைப் பார்த்து அவங்களுக்கு பயம் என்று. எங்களுக்கு இவ்வளவு கூட்டம் வந்திருக்கிறது. 80% வந்துருச்சு, 45% வந்துருச்சு என செங்கோட்டையனே சொல்கிறார். விஜய் வராமலேயே 42% வந்தது என்று சொன்னாலும் பரவாயில்லை. விஜய் பிரச்சாரத்துக்கு வந்ததுக்கு பின் 42% வந்துருச்சு எனச் சொல்கிறார்கள். லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது ஒரு செய்தியை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால் திமுக இந்த பக்கத்தில் அடித்து ஆடிக் கொண்டே போகிறார்கள். அவர்களுடைய களத்தில் தவெக இல்லை. திமுக பாஜகவோடு கள்ள உறவில் இருப்பதாக விஜய் பேசுகிறார். திமுகவை கண்டித்து பேசும் விஜய், பாஜகவை கண்டித்து பேசுங்க பார்ப்போம் 'திமுகவோடு உனக்கு என்ன கள்ள உறவு? அமித்ஷா நடிக்கிறியா? உனக்கு யோக்கியதை இருக்குதா?' என பாஜகவை நோக்கி விஜய் பேசட்டும். திமுகவை பாஜக பாதுகாக்கும் என்றால் சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஜெயிக்க வைக்க பாஜக பார்க்கிறீங்களா? என்று விஜய் சொல்ல வேண்டியதுதானே. ஏன் உன்னால் சொல்ல முடியவில்லை.
திமுக பாஜகவை எதிர்த்து பேசுகிறது. மாநாடுகளில் முதலமைச்சர் பாஜகவை தான் டார்கெட் பண்ணி அடிக்கிறாரு. அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி பற்றி திமுக பேசுகிறது. பாஜக, அதிமுக இவங்க இரண்டு பேர்தான் திமுகவின் எதிரி. உதயநிதியும் இருவரையும் பேசுகிறார். முதலமைச்சரும் இருவரையும் பேசுகிறார்.ஆனால் விஜய்யை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. களத்தில் பாஜக அதிமுக தான் உள்ளார்கள். சட்டமன்ற தேர்தல் என்பதால் பாஜக பற்றி பேசாமல் இருக்கறாரா முதலமைச்சர். தவெகவிற்கு பாஜக ஒரு விஷயமே இல்லையென்றால் அதிமுக பற்றி பேச வேண்டியது தானே?
எடப்பாடி பழனிசாமி கரூர் சம்பவத்திற்கு முதலில் திமுகவைதான் குற்றம் சொன்னார். இப்போது உங்களைதான் (தவெக) குற்றம் சொல்கிறார். இப்போது அதிமுகவை திட்டி பேசுங்களே பார்க்கலாம். நீங்க பேசுறது இல்லை. அப்படி என்றால் நீங்கள் தான் பாஜகவின் இன்னொரு முகமாக உள்ளீர்கள். சிறுபான்மை மக்கள் ஓட்டும், தலித் மக்கள் ஓட்டையும் பெரும்பான்மையாக திமுக கூட்டணிக்கு போகாமல் விஜய் தடுத்துவிட்டால் போதும் என்பதுதான் விஜய்க்கு கொடுக்கப்பட்ட ப்ராஜெக்ட்.
Follow Us