தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/18/021-2026-02-18-14-32-25.jpg)
மகளிர் உரிமைத்தொகை மட்டுமே கை கொடுக்கும் என நம்புவது மூட நம்பிக்கை என காங்கிரஸின் பிரவீன் சக்கரத்தி சொல்கிறார்
2006-ல் திமுக மைனாரிட்டியாக இருக்கோம். இவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆதரவு இல்லை என்று சொல்லிடுவாங்க. ஆட்சி போயிடும். அதற்குப் பதிலாக கூட்டணி மந்திரி அமைக்கலாம் என்ற முடிவை கலைஞர் எடுத்தார் என்ற செய்தி வந்தது. அப்படி செய்ய வேண்டாம். எங்களுக்கு அப்படி அமைச்சர் பதவி கொடுத்தால் பல பேருக்கு கொடுக்க வேண்டும். அது இன்னும் எங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என சோனியா காந்தி சொன்னதாகவும் செய்தி வந்தது. சோனியா காந்திதான் எங்களுக்கு எங்களுக்கு கூட்டணி ஆட்சி வேண்டாம் நாங்கள் வெளியே இருந்தே ஆதரவு கொடுக்கிறோம் என்ற முடிவை எடுத்தார் என வெளியே செய்த்தி வந்தது. அப்போது ஏன் காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கவில்லை. 2006-ல் மாணிக்கம் தாகூர் இல்லவே இல்லையா சீனில்.
1996-ல் காங்கிரஸ் திமுகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனச் சொல்லி மூப்பனார் முடிவெடுத்தார். நரசிம்மராவ் காலத்தில் என்று நினைக்கிறேன். அதிமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தார்கள். அதனால்தான் தமாகா உருவாச்சு என்பது வரலாறு. தமிழ் மாநில காங்கிரஸ் உருவானதற்கு காரணமே திமுகவிற்கு ஆதரவு கொடுக்காமல் அதிமுகவுக்கு ஆதரவு போனது தான். இன்னைக்கு திரும்ப காங்கிரஸ் உடைஞ்சு போயிடும் போல் உள்ளது. அப்படிதான் பேச்சுகள் போய்க்கொண்டு இருக்கிறது. இன்னைக்கு காங்கிரஸுக்குள் கோபண்ணா ஒரு விஷயம் பேசுகிறார். மற்றவர்கள் ஒரு மாதிரி பேசுகிறார்கள். இது திமுகவுக்கு பிரச்சனை இல்லை. காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஒரு கோஷ்டியாக பிளவுபட்டு நிற்கிறது. நியாயப்படி பார்த்தால் காங்கிரஸ் தலைமை பிரச்சனைக்கு உரியவர்களை நீக்க வேண்டும்.
ஏன் நீக்க முடியவில்லை. இதுதான் காங்கிரஸ் கட்சியின் வீக்னஸ். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் 2000 கொடுப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையில் சொன்னார். அதிமுகவின்அந்த வாக்குறுதி இப்போது பிளாப் ஆயிடுச்சு. ஏனென்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2000 என முதல்வரே சொல்லிட்டார். ஏற்கனவே பணம் கொடுத்தவர்கள் சொன்னால் நம்பலாம். எப்படி உன்னால் கொடுக்க முடியும் என்று கேட்டவர்கள் சொன்னால் நம்புவோமா? நம்பிக்கை வேண்டும் அல்லவா? தேர்தல் அறிவித்துவிட்டால் அந்த உரிமைத் தொகையை கொடுக்க முடியாது. தடுக்க முயற்சி பண்ணுவாங்க என்பது தான் முதல்வரின் ஸ்டேட்மென்ட்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/18/360-2026-02-18-15-07-10.jpg)