தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டம் நேற்று (23.01.2026) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். துரோகி என எடப்பாடிக்கு பட்டம் சூட்டிய டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணியில் இணைத்திருப்பது பேசு பொருளாகி உள்ளது.

Advertisment

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் பாஜக கூட்டணி குறித்த அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
 
டி.டி.வி.தினகரன் அதிமுக- பாஜக கூட்டணியில் சேர்ந்த முடிவை அக்கட்சியின் தொண்டர்கள் எப்படி பார்க்கிறார்கள்?
Advertisment

 

222
'This is a decision taken from above... Look at the OPS situation...' explains Pudumadam Haleem Photograph: (politics)

இது டி.டி.வி எடுத்த முடிவு இல்லைங்க மேலே எடுத்த முடிவு. அவருக்கு உண்மையிலேயே விருப்பம் இல்லைங்க. பல்வேறு பிரஸ் மீட்டுகளில் தினகரன் தெளிவாக சொல்லி இருக்கார். 'நாங்க இதுக்கு சும்மா இருந்துவிட்டலாம். நாங்கள் பருத்தி குடோனிலேயே இருந்திடலாம். எங்களுடைய கட்சியோட நோக்கமே எடப்பாடியை வீட்டுக்கு அனுப்புறதுதான் நாங்க எப்படி போய் சேருவோம். எடப்பாடி இல்லாமல் வேற ஒருவர் முதலமைச்சர் என்றால் நாங்கள் என்டிஏ கூட்டணிக்கு வந்திடுவோம். எங்களுக்கு பிரச்சனை எடப்பாடியோடு மட்டும்தான் வேற ஒருவரை முதலமைச்சர் ஆக்குங்க நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம்' என்றெல்லாம் டிடிவி சொல்லியுள்ளார்.

ஆனால் இன்னைக்கு டிடிவி சொன்ன எந்த மாற்றமும் நடக்கவில்லை. எடப்பாடி தான் முதலமைச்சர் வேட்பாளர். மக்கள்  சிரிப்பா சிரிக்கிற ஒரு நிகழ்வாக மாற்றிவிட்டீர்கள். உண்மையில் சொல்லப்போனால் என்ன நினைக்கிறாங்க என்றால் அமமுகவும் அதிமுகவும் சேர்ந்தால் பலமாகிடும் என நினைக்கிறார்கள். ஏற்கனவே அமமுக  அதிமுக ஓட்டைதான் பிரித்தது. நீங்கள் உங்கள் தொண்டர்களுக்கு என்ன பதிய வச்சீங்க மனசுல 'எடப்பாடி துரோகி, எடப்பாடி கட்சியை கைப்பத்திட்டார், எடப்பாடி சின்னம்மாவிடமிருந்து கட்சியை அபகரித்துவிட்டார், பெரிய துரோகம் செஞ்சுட்டார். அப்படின்னு சொல்லி சொல்லி உங்க கட்சியை வளர்த்தீர்கள்.

இப்ப நீங்க ஆதரவு கொடுக்கும்போது உங்கள் தொண்டர்களும் மனசு மாறிருவாங்களா? அதுதான் அந்த தொண்டர் கொதித்து போய் பின்னாடி கத்துகிறார். ஏதாவது சொல்ல முடிந்ததா பிரஸ் மீட்டில்? திரும்பி அந்த தொண்டரை நோக்கி வாயை மூடுப்பான்னு சொல்ல முடிந்ததா? ஏனென்றால் அது முடியாது. காலையில பிரேக்பாஸ்ட் முடிச்சிட்டு பியூஷ்கோயலும் எடப்பாடியும் வரும்போது அதே கேள்வியை எடப்பாடியிடம் கேட்கிறார்கள். ஆனால் எடப்பாடி பதில் சொல்லாமல் போய்க்கொண்டே இருக்கிறார். 


அரசியலில் நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்று சொல்லலாம் அதற்காக இந்த அளவுக்கு அயோக்கியத்தனமா? இந்த அளவுக்கு  ரோஷம் இல்லாமல் இருப்பாங்களா? மாறி மாறி கூட்டணி வைப்பது நியாயம்தான். அதற்காக திமுகவும் அதிமுகவும் கூட்டணி வைக்குமா? எடப்பாடி, ஸ்டாலினை ஆதரித்து பிரச்சாரம் செய்தால் நீங்க சிரிக்க மாட்டீங்க. அல்லது எடப்பாடியை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம் செய்தால் நீங்க சிரிக்க மாட்டீங்க. அது மாதிரி தாங்க எடப்பாடிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி எப்படிங்க சேரும் கூட்டணியில்.

கொள்கையை விடுங்க, அரசியல் எதிரி, நண்பர்களை விட்டுருங்க. எந்த சூழ்நிலையில்  போய் சேர்ந்துள்ளீர்கள். காரணம் எல்லோரும் மாட்டிக்கிட்டு இருக்காங்க. இந்த முடிவை எடுப்பது அமித்ஷாவும் மோடியும் அவ்வளவுதான். இன்னைக்கு ஓபிஎஸ் நிலைமைய பாருங்க...