'They didn't join... they were held together by their shirts' - criticized Madhimaran Photograph: (admk)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் திராவிட இயக்க எழுத்தாளரும், பேச்சாளருமான மதிமாறன் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
எதிரிகளாக இருந்த டி.டி.வி.தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்துள்ளார்கள். எப்படி பார்க்கிறீர்கள்?
அவர்கள் சேரவில்லை. சட்டையை பிடித்துச் சேர்த்து விட்டுள்ளார்கள். இபிஎஸ் பாஜக கூட்டணியில் சேர் தினகரனுக்கும் ஓபிஎஸ்-க்கும் விருப்பம் இருக்கு. ஆனால் சேர்த்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பம் இல்லை. இறுதியாக பாஜக சட்டையை பிடிச்சு சேர்த்துவிட்டு இருக்காங்க. நீங்க எவ்வளவு பேர் சேர்த்தாலும் தோல்விதான் அதனுடைய நிலைமை. அதிமுக கூட்டணி எல்லாம் இன்னும் தயாராகவில்லை. தேமுதிக பேசிட்டு இருக்கிறார்கள். இந்த கூட்டணி ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட கூட்டணி தான். தற்போது தினகரன் உள்ள போயிருக்கார். அடுத்து ஓபிஎஸ் உள்ளே போகப் போகிறார். இது ஒரு கூட்டணியா? இந்த கூட்டணி 2019 ஆம் ஆண்டு முடிவானது.
ஆனால் திமுக கூட்டணி என்பது முடிவாகி கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடம் ஆகிறது. போன 2019ல் முடிவாகி இது வரைக்கும் அதே கூட்டணி தான் இருக்கு. இதில் என்ன இருக்கு சிக்கல் இருக்கிறது. திமுக ஜனநாயக அமைப்பு தான். ஆனால் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என எப்போது திமுக சொன்னார்கள்? திமுக கொள்கை திட்டமே அது கிடையாது. திமுக எதற்காக ஆரம்பிக்கப்பட்டது, ஆட்சியில் பங்கு கிடையாது. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி. இதற்குத்தான் தான் திமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டது. திமுக கொடுப்பார்களா? 100 சீட்டு ஜெயிச்ச போது கூட கலைஞர் கூட்டணி ஆட்சி வைக்கவில்லை. திமுக கூட்டணி ஆட்சி இல்லை என்று சொல்லி அறிவிச்சுதானே மற்ற கட்சிகள் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள்.
சோர்ஸ் இருந்தால் தான் கூட்டணி ஆட்சி கேட்க முடியும். அது இல்லாத போது நீங்க எப்படி கேட்க முடியும்? அது திமுக ஐடியாலஜிக்கு ஒத்து போகாது. கூட்டணிக் கட்சிகளாக இருக்கிறவர்களோடு ஆட்சியை நடத்த முடியாது திமுகவால். திமுக வைத்திருக்கும் அந்த பிரத்தியேகமான கொள்கை என்பது வேறு எந்த கட்சிக்கும், தேசிய கட்சிகளுக்கும் கிடையாது.
Follow Us