Advertisment

'பலவீனத்தை நோக்கி இரட்டை இலையின் செல்வாக்கு'-அலசிய மதிமாறன்

347

madhimaran Photograph: (politics)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Advertisment
இந்நிலையில் திராவிட இயக்க எழுத்தாளரும், பேச்சாளருமான மதிமாறன் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
Advertisment
313
madhimarn Photograph: (politics)
தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் நிலை எப்படி இருப்பதாக பார்க்கிறீர்கள்?
செங்கோட்டையன் அந்த பக்கம் சென்றுவிட்டார். பிரதான கட்சியான அதிமுக பலவீனம் அடைந்து விட்டது. வட மாவட்டங்களில் பிரதானமான எதிர்க்கட்சியாக இருந்த பாமக அப்பா மகன் சண்டையால் டேமேஜ் ஆகிக் கிடக்கிறது. தேமுதிக விருப்ப மனு வாங்க ஆளே இல்லாமல் கிடக்கிறது. விஜயகாந்த் இருக்கும்  போதே தேமுதிக செல்வாக்கு உள்ள 60 தொகுதியில் நின்று தொகுதிக்கு 3000 ஓட்டு தான் வாங்கினார்கள். டெபாசிட் காலி. ஆனால் திமுக 2021 ல் இருந்ததை விடவும் இந்த நான்கரை ஆண்டு ஆட்சியின் சாதனை என்பது பிரம்மாண்டமான வளர்ச்சியாக இருக்கிறது. 
நீங்க ஒரு சர்வே எடுத்து பாருங்க, நீங்க கணக்கு எடுத்து பாருங்க ஒப்பிட்டளவில் திமுக மக்கள் மத்தியில் செல்வாக்கு வளர்ந்திருக்கிறது. இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட பெண்கள் உதய சூரியனுக்கு ஓட்டு போடுவதற்கு தயாராக இருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட பெண்கள் உதய சூரியனுக்கு  ஓட்டு போட்டு இருக்காங்க. அதனால் இரட்டை இலை செல்வாக்கு என்பது போய்விட்டது. இரட்டை இலையே இப்போது பலவீனமா தான் இருக்கிறது. இரட்டை இலை இருந்தால் மட்டும் ஜெயிச்சிட முடியாது என்ற நிலை இருக்கிறது.
ஒப்பிட்ட அளவில் கட்சிகள் பலவீனமாக இருக்கிறது. திமுக வளர்ந்திருக்கிறது. நலத்திட்டங்கள் செல்வாக்கு பெற்றிருக்கிறது. ஆட்சியால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறது.  இதில் புதுசாக இவர்களால் ஒன்னும் பண்ண முடியவில்லை என்பதால் விஜய்யை கொண்டு வந்து உள்ள சொருகி 'விஜய் வந்தால் போய்விடும்'' என்ற கண்ணோட்டத்தை உருவாக்குகிறார்கள்.
Election edappaadi palanisamy admk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe