Advertisment

'ஆளுநரும்.. ஆட்டு தாடியும்..' அண்ணாவின் பார்வை

213

ANNADURAI Photograph: (POLITICS)

2026ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் கூடியது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்கு வந்தார். அவரை சபாநாயகர் அப்பாவு சால்வை அணிவித்து வரவேற்றார். 

அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது பேரவையில் முதலில் தேசிய கீதம் தான் பாட வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தினார். ஆனால், சட்டப்பேரவை மரபை சபாநாயகர் அப்பாவு எடுத்து கூறியபோது அதை ஏற்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார். கடந்த ஆண்டும் இதேபோல முரண்கள் ஏற்பட்டு ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
Advertisment

 

214
DMK Photograph: (MKSTALIN)

 



உடனே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று பேசத் தொடங்கினார். “மாநில அரசால் தயாரிக்கப்பட்ட உரையை ஆளுநர் முழுமையாக வாசிக்க வேண்டும். இதில் ஆளுநர் தனது சொந்த கருத்துக்களை தெரிவிப்பதற்கோ அல்லது மாநில அரசு வழங்கப்பட்ட உரையை நீக்கம் செய்வதற்கோ அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை. கடந்த 2023 ஜனவரி 10 அன்று இதே பேரவையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை நான் இங்கே நினைவு கூற விரும்புகிறேன். 'ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை' என்று பேரறிஞர் அண்ணா கூறிய போதிலும் அதை கலைஞர் வழிமொழிந்த போதிலும் அந்த பதவி இருக்கும் வரை அதற்குரிய மரியாதையை கொடுக்க அவர்கள் முதலமைச்சர்களாக இருந்த நேரத்தில் தவறியதில்லை'' என்றார்.
Advertisment
ஆளுநர் பதவி என்பது தேவையற்ற ஒன்று என்பதை விளக்க அண்ணா பயன்படுத்திய மிகப்பிரபலமான உவமை 'ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை' . ஒரு ஆட்டுக்குத் தாடி எப்படி எந்தப் பயனையும் தராதோ, அதேபோல ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் பதவியும் தேவையற்றது என்பது அண்ணாவின் கருத்தாகும்.
1959-ம் ஆண்டு கேரளாவில் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு, அம்மாநில  ஆளுநராக இருந்த பி. ராமகிருஷ்ண ராவ் பரிந்துரையின்படி மத்திய அரசால் கலைக்கப்பட்டது. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை ஆளுநர் பதவி மூலம் மத்திய அரசு கலைத்ததைக் கண்டித்து அண்ணா இந்த விமர்சனத்தை வைத்தார்.
215
ANNADURAI Photograph: (POLITICS)
இந்த 2026 ஆண்டிலும் 'ஆளுநர் பதவி' என்பதை பொறுத்தவரை அறிஞர் அண்ணாவின் பார்வைகள் முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது. ஆளுநர்கள் என்பவர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுவதால், அவர்கள் மாநில அரசுகளின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட வாய்ப்புள்ளது என்று அண்ணா கருதினார். ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மாநில சுயாட்சிக்குத் தடையாக இருப்பதாகவும் குறிப்பாக, மத்திய அரசின் பிரதிநிதியாகச் செயல்பட்டு மாநில அரசின் முடிவுகளைப் பாதிப்பதையே வழக்கமாக கொண்டவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு ஆளுநர் இடையூறாக இருப்பது ஜனநாயகத்தின் ஆன்மாவைப் பாதிக்கும் எனவே 'ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை' என்பதே அண்ணாவின் எண்ணமாகும்.

ஆளுநர் பதவி என்பது மத்திய அரசின் தலையீட்டைக் குறிக்கும் ஒரு கருவியாக இல்லாமல், மாநில மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே அண்ணாவின் நிலைப்பாடாக இருந்தது. 
 
 
 
 
 
 
 
 
dmk annadurai governor RN RAVI tnassembly
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe