Advertisment

'விஜய்யால் எடப்பாடிக்கு ஏற்பட்ட பயம்'-விளக்கும் புதுமடம் ஹலீம்

300

admk Photograph: (tvk)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment
021
politics Photograph: (nakkheeran)

'திமுக வாக்குகளை விஜய் பிரிப்பார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக தனியாக போட்டியிட்டோம். அது திமுகவுக்கு சாதகமாக அமைந்தது'  என்கிறார் டிடிவி.தினகரன்.  உங்கள் பார்வை என்ன?

ஓபிஎஸ் நினைச்சது வேறு தினகரன் நினைச்சது வேறு. ஓபிஎஸ் தன்னை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்க வேண்டும் என்கிறார். சசிகலா நான்தான் பொதுச்செயலாளர் என்று சொன்னார். எதற்கும் வாய்ப்பில்லை என்று விட்டார் எடப்பாடி பழனிசாமி. நீங்கள் தனிக்கட்சி ஆரம்பித்த நோக்கம் என்பது எடப்பாடிக்கு எதிரானது. உங்க கட்சியே எடப்பாடிக்கு எதிரான கட்சிதான். ஆனால் இன்னைக்கு நீங்க தொண்டர்கள் கிட்ட என்ன சொல்றீங்க 'அம்மா வளர்த்த பிள்ளைகள் சேர்ந்துட்டோம்; பங்காளிகள். அதெல்லாம் பேச்சுக்கு சொல்றதுதான். ஒரு ஃப்ளோல சொல்றதுதான். ஏதோ ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன். அதாவது எடப்பாடியோட சேர்வதும் ஒன்னு தான் தற்கொலை முடிவு என்பதும் ஒன்னுதான் என்று ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன். இதெல்லாம் மனசுல வச்சுக்கலாமா?' என்றபடி பேசுகிறார்கள். இப்போது இதை தொண்டர்கள் எப்படி பார்ப்பார்கள்? உங்க சமூக மக்கள் எப்படி பார்ப்பாங்க?

விஜய் திமுகவுடைய வாக்குகளை பிரிப்பார் என்கிறார் தினகரன். ஏன் அதிமுக வாக்குகளை தொடமாட்டாரா? நாம் தமிழர் வாக்குகளை பிரிக்க மாட்டாரா? இன்னைக்கு சமீப காலமாக பாருங்க விஜய்யுடன் யார் மல்லுகட்டிக் கொண்டு நிக்கிறது? திமுக கிடையாது. எடப்பாடியும் அதிமுக தலைவர்களும்தான் விஜய்யோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறர்கள். இன்னைக்கு அதிமுக ஊழலைப்பற்றி விஜய் ஒரு வார்த்தை பேசிட்டார் என்று சொன்ன உடனே உங்களுக்கு கோவம் வந்துவிட்டது.  திமுகவை பற்றி எவ்வளவு விமர்சனம் செய்தார் விஜய், ஆனால் திமுக அவரை கண்டுகொள்ளக்கூட இல்லை. விஜய் பற்றி எதுவுமே பேசவில்லை. ஆனால் 'அதிமுக ஒரு ஊழல் கட்சி' என்று ஒரே வார்த்தைதான் விஜய் சொன்னார் உடனே பொங்கி எழுந்து புலி படத்துக்கு 15 கோடி மறைத்தது தெரியாதா? ஒன்றரை கோடி வருமானவரி கட்டாமல் இருந்தது நியாயமா? விஜய்க்கு பேசக்கூடிய தகுதி இருக்கிறதா? என்று கேட்கிறார் எடப்பாடி. உண்மையிலேயே விஜய்க்கு தகுதி இல்லை என்பது வேறு விஷயம்.

15 கோடி வருமானத்தை ஒட்டுமொத்தமாக 2015-16 ஆண்டில் மறைத்து ஒன்றரை கோடி டேக்ஸ் கட்டாத ஒருத்தர் இன்னைக்கு ஊழல்ப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. ஆனால் அதை எடுத்து பேசுகிறார் எடப்பாடி. என்னமோ நேற்று நடந்தது மாதிரி கரூர் விஷயத்தை எல்லாம் அதிமுகவினர் பேசுறாங்க. இன்னைக்கு விஜய்யை டார்கெட் பண்ணி எல்லா தலைவர்களும் பேசுறாங்க. ஏன் பேசுறீங்க? அதிமுகவில் இருந்து போன செங்கோட்டையன் யோக்கியமா என்று கேட்கும் அளவுக்கு போயிடுச்சு. உங்களுக்கும் விஜய்க்கும் தான் போட்டி. ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள் இரண்டாம் இடத்தை பிடிப்பது யார் என்பதில் தான் விஜய்க்கும் அதிமுகவுக்கு போட்டி.

எடப்பாடிக்கு இப்போது இருக்கும் பெரிய அச்சமே நம்மை விட எண்ணிக்கையில் அதிக ஓட்டுக்களை விஜய் வாங்கிடுவாரோ என்ற அந்த பயம் கண்டிப்பாக இருக்கிறது. நம்மை விட விஜய் வாக்குகள் கூடுதலாக வாங்கிவிட்டால் அது விஜய்க்கு பெரிய வெற்றி. தினகரன் என்ன சொல்கிறார் 'விஜய்யால் திமுகதான் பாதிக்கும்' என்று சொல்கிறார். எதற்கு அப்படி சொல்கிறார்கள் என்றால் சிறுபான்மை வாக்குகளை விஜய் பிரிப்பார் என்று நினைக்கிறார் டி.டி.வி.தினகரன். அவருக்கு ஒரு விஷயம் புரியவில்லை. சிறுபான்மை மக்கள் இதை புரிந்துகொள்ளாத சமூகம் அல்ல. முஸ்லிம் சமூகமோ, கிறிஸ்துவ சமூகமோ விஜய்யை ஒன்னும் புரிந்துகொள்ளாமல்  இல்லை. நீங்கள் புர்கா போட்ட நாலு பேரை மேடையில் ஏற்றி விட்டால் உங்களுக்கு ஓட்டு போட்டு விடுவார்கள் என்று நினைக்காதீர்கள்.

tvk vijay ammk ttv dinakaran ammk edappaadipalanisamy edappaadi palanisamy admk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe