Advertisment

'வணியம்பாடியின் சமத்துவமே முஸ்தாக் பாய் பிரியாணி தான் '-லோக்கல் பாலிட்டிக்ஸில் பகிர்ந்த வி.எஸ்.ஞானவேலன்

363

'The equivalent of Vaniyambadi is Mushtaq Bhai Biryani' - V.S. Gnanavelan shared in Local Politics Photograph: (politics)

தமிழகத்தில் விரைவில் 2026 சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கட்சி தலைமைகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வரும் அதேவேளையில் மறுபுறம் உள்ளூர்களில் உள்ள அரசியல் நிலவரங்களும் வேகமெடுத்துள்ளது. அதனை வெளிக்கொணரும் நக்கீரன் டிவியின் புதிய நிகழ்ச்சி தான் 'லோக்கல் பாலிடிக்ஸ்'

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா, ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.ஞானவேலன். திமுகவின் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், ஒன்றிய கழக பொறுப்பாளர்,  ஒன்றிய கழக செயலாளர் என கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு அவருடைய சிறிய கிராமத்தில் 'தளபதி அறிவாலயம்' என்ற ஒன்றை உருவாக்கி, அதனை அப்போதைய திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனை வைத்து திறந்துள்ளார். நக்கீரன் டிவியில் ஒளிபரப்பாகும் 'லோக்கல் பாலிடிக்ஸ்' தொடருக்காக வி.எஸ்.ஞானவேலனை சந்தித்து கலந்துரையாடினோம்.

இந்த பிரியாணி கடையில் தான் சாப்பிட வேண்டும் என அடம்பிடித்து அழைத்து வந்துள்ளீர்கள். அப்படி என்ன ஸ்பெஷல்?
Advertisment
இந்த கடையோட ஸ்பெஷல் என்னவென்றால் வாணியம்பாடி பகுதியில் மட்டுமல்ல வேலூர் மாவட்ட அளவில் மட்டுமல்ல உங்களுக்கு தமிழ்நாடு லெவலில், இந்தியா லெவலில் ஒரு தரமான, டேஸ்ட்டான ஒரு நாட்டுக்கோழி பிரியாணி சாப்பிடலாம் என்று நினைத்தால் அது நம்ம முஸ்தாக் பாய் பிரியாணி தான். பாரம்பரியமான பிரியாணிக் கடை. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியில் இருந்து சுடச்சுட பிரியாணி கிடைக்கும். இந்த கடையில் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே ஓசூர், பெங்களூரு, சென்னை, மைசூரில் இருந்தெல்லாம் பைக்கில் டிராவல் பண்ணி வருவாங்க. ஒரு அரை மணி நேரம் இந்த ஒரு சுவையை சாப்பிடுவதற்காகவே ஜனங்கள் விரும்பி வரக்கூடிய அளவுக்கு ஒரு சுவையான பிரியாணி.
Advertisment
364
dmk Photograph: (local politics)
விடியற்காலை 5 மணிக்கே பிரியாணி ரெடி ஆயிடும். வாணியம்பாடி வந்துட்டு முஸ்தாக் பாயோட பிரியாணி சாப்பிடாமல் போயிட்டால் அது ஒரு வாழ்நாள் குத்தமாக போயிடும். இங்கு வந்துவிட்டு பிரியாணி சாப்பிடாமல் போவது கோயிலுக்கு போய் கடவுளை தரிசிக்காமல் போவதற்கு சமம் ஆகிவிடும். இந்த பிரியாணிக்கு சையிட் டிஷ் எல்லாம் எதுவுமே கிடையாது. வெறும் பிரியாணி தான். ராய்த்தா என எதுவுமே கிடையாது. பிரியாணி மட்டுமே ரசிச்சு சாப்பிடணு என்கிற அந்த கான்செப்ட்டில் வைத்துள்ளார்கள். நீங்கள் வந்துள்ளதால் ரயித்தா வைத்துள்ளார்கள் மாற்றபடி எப்போதும் சையிட் டிஷ் கிடையாது. அதிலும் சண்டை சேவல் பிரியாணி தான் இங்கு பேமஸ்.
எம் மதமும் சம்மதம் என்பதற்கு எடுத்துக்காட்டே இந்த கடைதான். நிஜமாவே நீங்களே பாருங்க எல்லா தரப்பட்ட மக்களும் இருப்பார்கள். ஒன்னே ஒன்னுதான் பிரதானம். அந்த ஆத்தென்டிகேட்டட் டேஸ்ட் அவ்ளவுதான். ஒரு இஸ்லாமியர் நடத்தும் கடையாக இருந்தாலும் பெரும்பான்மையாக இங்க வரக்கூடிய கஸ்டமர்கள் யார் என்று பாத்தீங்க என்றால் இந்துக்கள்தான். ஒரு சமுதாய நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த ஒரு பிரியாணி கடை என்று கூட நம்ம சொல்லலாம்.
நன் ஸ்கூல் படிக்கிற காலத்தில் இருந்தே எனக்கு விவரம் தெரிஞ்சு ஒரு 10 வயசுல இருந்து நான் இங்கு சாப்பிட்டுட்டு இருக்கேன். அக்கம்பக்கம், சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து கிராமப் பகுதியில் இருக்கக்கூடிய ஜனங்கள் எல்லாம் இங்கு விரும்பி இந்த பிரியாணி சாப்பிடுறாங்க. ஞாயிற்றுக்கிழமை காலையில் இங்கு இருக்கும் பெரும்பாலானோர் யாரும் காலையில் டிபன் சாப்பிட மாட்டாங்க. பிரியாணி தான் சாப்பிடுவாங்க.  சண்டே ஸ்பெஷலில் இதுவும் ஒன்னு. காலையில் முதல் வேலை பிரியாணி தான். அப்புறம் தான் எல்லாம்.
dmk LOCAL POLITICS vaniyambadi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe