தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/17/021-2026-02-17-16-59-34.jpg)
'திமுக-காங்கிரஸ் கூட்டணி தான் பல்லிளித்து கிடக்கிறது' என அதிமுக தரப்பில் விமர்சனம் வைக்கப்படுகிறது. எப்படி பார்க்கிறீர்கள்?
பாஜகவுடைய திட்டங்களில் ஒன்று காங்கிரஸ் இல்லாத இந்தியா. பாஜகவுடைய திட்டங்களில் ஒன்று காங்கிரஸை எல்லா மாநிலங்களிலும் தோற்கடிக்க வேண்டும். கோபண்ணா ஒரு வார்த்தை சொன்னார் 'திமுக காங்கிரஸை விட்டு விலக வேண்டும் என்று சில பாஜகவினர் நினைக்கிறார்கள். நாங்கள் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டோம்' என்பது காங்கிரஸ் கமிட்டியுடைய துணைத்தலைவர் கோபண்ணா சொன்ன வார்த்தை. இதில் என்ன புரிந்துகொள்ளப்படுகிறது என்றால் பாஜகவால் ஏற்படும் இந்த சதி யார் மூலமாக வெளிப்படுகிறது. 'நான் ஜெயிச்சதே திமுகவுடைய வாக்குகளால்தான். அதை ராஜினாமா செய்யுங்க எனச் சொல்கிறார்கள்' என்று நேற்று மாணிக்கம் தாகூர் சொல்கிறார்.
'மாணிக்கம் தாகூர் சொல்வது சரிதான்' என்று ஒரு வார்த்தை செல்வப்பெருந்தகையை சொல்லச் சொல்லுங்களேன் பார்க்கலாம். இந்த பேச்சுக்கள் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் உறவை வலுப்படுத்துமா? அல்லது வலுவிழக்க செய்யுமா? என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். அதிமுக கூட்டணியில் உள்ளவர்கள் சொல்கிறார்கள் 'எங்கள் கூட்டணி ஸ்ட்ராங்காக இருக்கிறது. திமுக கூட்டணியில் தான் சலசலப்பு இருக்கிறது. காங்கிரஸ் விஜய்யுடன் பேசிக் கொண்டு உள்ளார்கள் என்று சொல்கிறார்கள். மதுரை செயற்குழுவில் கலந்துகொண்டுவிட்டு வெளியே வந்த ஒரு காங்கிரஸ் தலைவர் சொல்கிறார் 'நாங்கள் விஜய்யோடு தான் சேரப் போகிறோம்' என்கிறார். அதை எப்படி ஊக்கப்படுத்துறீங்க? இதிலேயே உங்கள் நோக்கம் தெளிவாக தெரிகிறது அல்லவா? இப்படி எல்லாம் பேசுற காங்கிரஸை திமுக கழட்டி விட வேண்டியதுதானே ஏன் வச்சுக்கிட்டு இருக்காங்க? என்ற கேள்வியும் நமக்கு வருகிறது.
திமுக காங்கிரஸை மட்டுமல்ல திமுக, கூட்டணியில் இருக்கின்ற சின்ன கட்சிகளை கூட கழட்டி விட நினைக்குமா? காங்கிரஸ் கழண்டுபோய் விஜயோடு சேர வேண்டும் என நினைக்கிறார்கள். உங்களுடைய அந்த எண்ணத்துக்கு ஏன் திமுக பலியாக வேண்டும். மாணிக்கம் தாகூர் போன்றோர்களின் பேச்சுக்களுக்கு திமுக தலைமை பதில் கொடுத்து, முக்கியத்துவம் கொடுத்து டெம்ட் ஆகுறீங்க. அதை பாஜக கூட்டணி விரும்புகிறது. ஆனால் திமுக தலைமையோ, அதைச் சார்ந்தவர்களோ அதைப்பற்றி பேசுவது இல்லை. திமுக அமைப்புச் செயலாளர் பாரதி மட்டும் பேசினார்.
ஆர்.எஸ்.பாரதி என்ன சொன்னார் 'எங்களுக்கு மூணு பேர்தான் முக்கியம் ராகுல் காந்தி, கார்கே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை. இந்த மூணு பேர் சொன்னால் நாங்கள் பதில் கொடுக்கறோம். அந்த ஸ்டேட்மெண்ட் கிளியர் உங்களுக்கு ஆயிடுச்சா? அப்போது இந்த மாணிக்கம் தாகூர் போன்ற இந்த அம்புகள் யாரால் எய்யப்பட்டவர்கள்? ராகுல் காந்தி எய்யவில்லை என்று சொல்றாங்க. அப்போது யாரால் எய்யப்பட்டவர்கள்?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/17/352-2026-02-17-17-04-31.jpg)