தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/17/021-2026-02-17-16-20-36.jpg)
பீகாரில் காலி பண்ண மாதிரி ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவை காலி செய்தீர்கள். அதனால்தான் உங்களை மம்தா பானர்ஜி ஒரு லெவல்ல வச்சிருக்காங்க. காரணம் காங்கிரஸில் இப்படித்தான் இருப்பாங்க சிலர் என நினைத்து உங்களை மம்தா நம்பவில்லை. ஆனால் ஒரு விஷயத்தை நீங்க பாராட்ட வேண்டும். இங்கே இருக்கிற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுவதை நாம் பார்த்தோம். 'சிலர் காங்கிரஸுக்கு உள்ளேயே இருந்துக்கொண்டு சதி பண்றாங்க' என்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியுடைய துணைத் தலைவர் கோபண்ணா தெளிவாக சொல்கிறார். 'கூட்டணி பற்றி இவர்கள் எல்லாம் பேசுவதற்கு என்ன இருக்கு? அதற்கான தலைவர்கள் இருக்கிறார்கள். சிலர் வேண்டுமென்றே கூட்டணியை உடைக்கின்ற வேலையை காங்கிரசுக்குள் இருந்து செய்கிறார்கள். இது பாஜகவுக்கு ஆதரவு குரல்கள்' என்று கோபண்ணா சொல்கிறார். இதே வார்த்தையைத்தான் திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்திலும் பேசுகிறார்.
இந்த காலகட்டம் என்பது ஒரு சித்தாந்த யுத்தம் நடந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான காலகட்டம். அதைப்பற்றி பேசாமல் இங்கே தமிழ்நாட்டில் கூட்டணியை காலி செய்கிற மாதிரி பேசுறது என்பது மிக மோசமான ஒரு செயல்பாடு. அது தேவையில்லை. கூட்டணியை யார் கட்டமைக்க வேண்டுமோ அவர்கள் அமைத்து கொள்வார்கள். அந்த வேலைய அவர்கள் பார்க்கட்டும் என அருமையாக சசிகாந்த் செந்தில் பேசுகிறார். அந்த புரிதல் ஏன் மாணிக்தாகூருக்கு இல்லை. அவரும் எம்பி தானே. சசிகாந்த் செந்தில் எம்பிக்கு இருக்கின்ற அந்த புரிதல் ஏன் மாணிக்தாகூருக்கு இல்லையென்றால் திட்டமிட்டு செய்கிறார்கள். புரிதல் இல்லாமல் எல்லாம் இல்லை.
பாஜகவுடைய திட்டங்களில் ஒன்று காங்கிரஸ் இல்லாத இந்தியா. பாஜகவுடைய திட்டங்களில் ஒன்று காங்கிரஸை எல்லா மாநிலங்களிலும் தோற்கடிக்க வேண்டும். கோபண்ணா ஒரு வார்த்தை சொன்னார் 'திமுக காங்கிரஸை விட்டு விலக வேண்டும் என்று சில பாஜகவினர் நினைக்கிறார்கள். நாங்கள் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டோம்' என்பது காங்கிரஸ் கமிட்டியுடைய துணைத்தலைவர் கோபண்ணா சொன்ன வார்த்தை. இதில் என்ன புரிந்துகொள்ளப்படுகிறது என்றால் பாஜகவால் ஏற்படும் இந்த சதி யார் மூலமாக வெளிப்படுகிறது. 'நான் ஜெயிச்சதே திமுகவுடைய வாக்குகளால்தான். அதை ராஜினாமா செய்யுங்க எனச் சொல்கிறார்கள்' என்று நேற்று மாணிக்கம் தாகூர் சொல்கிறார்.
'மாணிக்கம் தாகூர் சொல்வது சரிதான்' என்று ஒரு வார்த்தை செல்வப்பெருந்தகையை சொல்லச் சொல்லுங்களேன். உங்கள் மாநில துணைத்தலைவர் கோபப்பண்ணா போன்றவர்களையாவது சொல்லச் சொல்லுங்கள். உங்களை மாதிரியே எம்பியாக இருக்கிற சசிகாந்த் செந்தில் போன்றவர்களை சொல்லச் சொல்லுங்கள். மாணிக்கம் தாகூர் மட்டும் தான் சொல்கிறார். உங்களுக்கு மட்டும்தான் திமுக மரியாதை கொடுக்கவில்லையா? மற்ற காங்கிரஸ் எம்பிக்கள், தலைவர்களுக்கு மரியாதை கொடுக்கறாங்க உங்களுக்கு மட்டும் திமுக கொடுக்கவில்லையா? இந்த பேச்சுக்கள் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் உறவை வலுப்படுத்துமா? அல்லது வந்து வலுவிழக்க செய்யுமா? என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/17/351-2026-02-17-16-20-08.jpg)