தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பரப்புரை வியூகங்களை தாண்டி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நோக்கி நகர்ந்து வருகின்றன. பாஜகவின் என்டிஏ கூட்டணியில் அதிமுகவில் அங்கம் வகிக்கும் நிலையில் அண்மையில் நயினார் நாகேந்திரன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட விரும்பும் பட்டியலை வழங்கியதாக தகவல்கள் வெளியானது.
தொடர்ந்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச பாஜக தேசிய தலைமைகள் தமிழக வர உள்ளது. இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கட்சிகளின் தேர்தல் நகர்வுகள் குறித்த அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
''2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடம் வென்றார்கள். பாமகவும் என்டிஏ கூட்டணிக்கு வந்துரும். உறுதியாக 75 தொகுதிகளில் ஒரு 50க்கு மேற்பட்ட தொகுதிகளை பாஜக டிக் பண்ணி கொண்டு போயிருக்காங்க. அப்படிங்கிற ஒரு பார்வை இருக்கிறது. இது அதிமுகவடைய வட்டாரத்துக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/18/088-2025-12-18-16-18-51.jpg)
திமுகவை எதிர்த்து 75 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளார்கள் என்றால் அந்த தொகுதிகள் அதிமுகவுக்கு செல்வாக்கான இடம் என்றுதான் அர்த்தம். இடங்களை தக்க வைத்துக்கொள்ள நிச்சயமாக அதிமுக வேட்பாளர்கள் நிறுத்துவதற்கு தான் எடப்பாடி விரும்புவார். ஆனால் இப்போது என்ன நிலைமை கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், குளச்சல், கிளியூர், நாகர்கோவில், விளவங்கோடு, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம் என பட்டியல் வெளியானது. இந்த லிஸ்டில் உள்ள பல தொகுதிகள் கொங்கு பெல்ட்டில் தான் உள்ளது. கொங்கு பகுதி அதிமுகவுடைய கோட்டை என்று சொல்லக்கூடிய பகுதிகள் தான். இன்று பாஜக கொங்கு பகுதியை குறி வைக்கிறார்கள். அதை எப்படி எடப்பாடி விட்டுக் கொடுப்பார்.
தென்பகுதியில் உள்ள தொகுதிகளையும் பாஜக குறி வைக்கிறார்கள். மூன்றாவதாக ஓபிஎஸ், டிடிவி, தினகரன், சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கிற தேனி முக்குலத்தோர் சமூகம் இருக்கும் பகுதி, ராமநாதபுரம் வரைக்கும் பாஜக குறி வைக்கிறது. இப்படி எல்லாம் சேர்த்து ஒரு 75 இடத்தை லிஸ்ட் அவுட் கொடுத்துவிட்டால் ஏற்கனவே தோற்றுப்போன இடத்தில் அதிமுக நிற்குமா என்ற கேள்வி இருக்கிறது.
இப்போது தமிழ்நாட்டில் பாஜகவுடைய மேலிடப்பொறுப்பாளரை மாற்றியதால் தெளிவாக ஒரு விஷயம் புரியுது பாண்டாவுக்கு பதில் பியூஸ் கோயலை போட்டது காரணம் என்னவென்றால் எடப்பாடியை முதல்வராக்கும் எண்ணம் பாஜகவிற்கு இல்லை. பாஜக அதிமுகவை விட அதிகமான எண்ணிக்கையில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரு அடிப்படை கோணம் இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் அதிமுக போட்டி போடலாம் ஆனால் வெற்றி பெறுகின்ற தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் பாஜக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
அதிமுகவை டவுன் பண்ணி தான் நாம் வளரணும். அதிமுக முதுகில் ஏறி நின்றுதான் வளர முடியும். அதற்கு முதல்படி ஏற்கனவே செல்வாக்கு இருக்கின்ற 75 தொகுதி. 2021 தேர்தலில் பாஜக இதே கூட்டணியில் நான்கு இடம்தான் வெற்றி பெற்றாங்க. மற்றத் தொகுதிகளில் தோற்றுப் போனார்கள். குறிப்பாக மூன்று காரணங்களை பாஜக வைக்கிறாங்க. ஒன்று இந்து மதநம்பிக்கை அதிகம் உள்ள ஆலயங்கள், இந்து நம்பிக்கை உள்ள இடங்கள் அல்லது பாஜகவுக்கு ஆதரவு மனநிலை, திமுக எதிர்ப்பு மனநிலை இப்படி பல்வேறு காரணிகளை குறிப்பாக பாஜக பார்க்கிறது.
கோயில்கள், பிரபலமாக இருக்கும் இடங்கள் தங்கள் சட்டமன்ற தொகுதியாக இருக்கும் வேண்டும் என பாஜக நினைக்கிறார்கள். உதாரணம் ராமேஸ்வரம் ராமநாதபுரம் தொகுதியில் இருக்கு. நீங்க நல்லா கவனிங்க தொடர்ச்சியாக ராமநாதபுரம் தொகுதியில் பாஜக போட்டி போட்டு இருக்காங்க. அது பாராளுமன்ற தொகுதியாக இருந்தாலும் சட்டமன்றமாக இருந்தாலும் தொடர்ச்சியாக ராமநாதபுரத்தில் பாஜக போட்டியிட்டு கொண்டே இருக்கிறது. இந்த முறையும் பாஜக அங்கு போட்டியிடும்.
அதேமாதிரிதான் திருச்செந்தூர் இருக்கணும். மதுரையில் போட்டியிட வேண்டும். இன்னொரு பார்வை கொங்கு பெல்ட்டில் ஏற்கனவே தங்களுக்கு ஆதரவு மனநிலை இருக்கு என நினைக்கிறார்கள். இதன் மூலமாக பாஜகவுக்கும் அமித்ஷாவுக்கும், மேல உள்ளவங்களுக்கு ஒரு விஷயம் தெளிவா தெரியும் 2026ல அதிமுக பாஜக கூட ஆட்சி அமைக்க போவது இல்லை. அவர்களுடைய கவனம் 2026 இல்லை 2031-ல் இருக்கிறது. 2031-ல் திமுகவா பாஜகவா என்ற இடத்திற்கு நகரணும் என்பதுதான் பாஜகவின் லாங் டெர்ம் கோல். அதற்கு அதிமுகவுடைய வலிமையை குறைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நகர்வு. அதை கடந்த காலங்களில் செய்தார்கள். அதிமுகவை விட ஒரு இடம் கூட வெற்றி பெற்றால் அவர்கள்தான் எதிர்கட்சி. ஒரு கணக்குக்கு சொன்னால் கூட எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி இல்லாமல் நயினார் நாகேந்திரன் உட்கார்ந்தால் பாஜகவுக்கு அது பெரிய வெற்றிதான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/18/136-2025-12-18-16-18-20.jpg)