தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Advertisment
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
021
haleem Photograph: (politics)
தவெகவை பார்த்து அதிமுக வாக்கு மட்டுமல்ல நாம் தமிழர்கள் இன்னைக்கு ஏன் கொதிக்கிறார்கள்? இன்னைக்கு நாம் தமிழருடைய பல்வேறு தலைவர்கள் ஏன் விஜய்யை டார்கெட் பண்ணி பேசுறாங்க. எல்லோருக்கும் பட்டவர்த்தனமாக தெரிகிறது. நாம் தமிழர் வாக்கு 8%. அது உடைஞ்சு அதில் நாலு விழுக்காட்டுக்கு மேல் விஜய்க்கு போகப்போகிறது. ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக மூன்றாவது இடம் போனது உண்மைதான். பலாப்பழம் சின்னத்தில் ஓபிஎஸ் இரண்டாம் இடத்துக்கு வந்தார். அவர் கிட்டத்தட்ட அதிகமான வாக்குகளை பெற்றார்.
அதை இன்னைக்கு ஒரு உதாரணமாக எடுத்து பேசுறாங்க. இன்னைக்கு நாமெல்லாம் (அதிமுக+அமமுக) சேர்ந்துட்டோம். அதனால் அந்த வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு அப்படியே வந்துவிடும் என்று நினைக்கிறார்கள். இன்னமும் ஓபிஎஸ் வெளியில் தான் இருக்கிறார். அமமுக கட்சி தொண்டர்களும் அதிமுக தொண்டர்களும் களத்தில் ஜெல் ஆகவில்லை. கடந்த ஒரு நான்கு ஆண்டுகளாக நீங்கள் உங்கள் (அமமுக) தொண்டர்களை எப்படி பழக்கப்படுத்தி வெச்சு இருக்கீங்க? திமுகவை கூட நீங்க விமர்சிக்கவில்லை. ஆனால் எடப்பாடியை காய்ச்சி காய்ச்சி ஊற்றி இருக்கிறார்கள். நம்பிக்கை துரோகி; தவழ்ந்து போய் வந்து ஆட்சியை பிடித்தவர் எடப்பாடி பழனிசாமி என எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துனீங்க.
Advertisment
'திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிவு, பிளவு என்று சொல்வதெல்லாம் ஒரு கனவு. பலரும் அந்த கனவை கண்டுகொண்டு இருக்கிறார்கள். அது நடக்காது. அது ஒரு கானல் நீராக போய்விடும்' என செல்வப்பெருந்தகை ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார். 'ரொம்ப உறுதியாக இருக்கு எங்கள் கூட்டணி. எங்கள் கூட்டணியும் உடையாது. எண்ணிக்கையும் குறையாது' என செல்வப்பெருந்தகை சொல்லியுள்ளார். இப்போது நான் கேட்பது 'காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இருந்து உடைந்து வெளியே வரவேண்டும் என அதிமுக நினைக்கிறீங்களே அங்கிருந்து பிரிந்து வந்து உங்களுடன் சேர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அதிமுக அதைப்பேசுகிறதா?
நீங்க ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் பாஜகவோடு உள்ளீர்கள். பிறகு ஏன் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து உடைஞ்சு வர வேண்டும் என விரும்புகிறீர்கள். அப்போது காங்கிரஸ் உடைந்தால் எங்கே போய் சேர வேண்டும் நினைக்கிறீர்கள். காங்கிரஸ் போய் விஜய் கட்சியில் சேரவேண்டும் என நினைக்கிறது அதிமுக. அப்படி சேர்ந்தால் திமுகவுக்கு விழுகின்ற வாக்குகள் இன்னும் பிளவுப்படும் என அதிமுக நினைக்கிறது, ஆசைப்படுகிறது. உங்க ஆசையில்தான் திருப்பி திருப்பி மண்ணு விழுந்துகொண்டே இருக்கிறது. திமுக கூட்டணி உடைய வேண்டும் என்று காங்கிரஸுக்குள் சிலர் பேசுவதை நாம் பார்த்தோம்.
விருதுநகர் எம்பியில் இருந்து, ராகுல்காந்தி நண்பர் ஒருவர் வரைக்கும் பேசுகிறார்கள். ஆனால் இன்னைக்கு செல்வபெருந்தகை சொன்ன விஷயம் முக்கியமானது. இதில் பாஜக சதி செய்கிறது. திமுகவுக்கு விழுகின்ற வாக்குகள் குறைய வேண்டும். சிறுபான்மை வாக்குகள் முழுமையாக விஜய் பக்கம் போக வேண்டும் என பாஜக இந்த சதியை செய்கிறது. அப்படியென்றால் அந்த சதிக்கு உடன்பட்டுதான் எடப்பாடி பேசுகிறாரோ என்று நான் நினைக்கிறேன். காங்கிரஸுக்குள்ளே சிலர் பாஜகவுடைய கைக்கூலிகளாக இருப்பார்களோ என்ற எண்ணம் நமக்கு வருகிறது.